1
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் என்றேவந்தனம் சொல்ல வந்த
தந்தனத்தோம் குருவியே
உன்னைப்போலவே
இங்கொருவன் இருந்தான்
நீ தந்தனத்தோம்
அவன் தரிகிடதோம்
தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்
2
பிழை
எனும்
செடி
வறள
வந்தேன் நான்
நீரூற்ற
பிழை
எனும்
செடி
வளர
நான் வந்தேன்
நீரூற்ற
வறள வளர
வளர வறள
வளர்ந்தேன் நான்
வறண்டேனா
3
காம்பு அற்ற முலையைக்
கனவில் கண்டேன்
காம்பு அற்று இருந்ததால்
அது முலை அல்ல
எனக் கனவு சொல்லியது
அது கனவு அல்ல
என முலையும் சொல்லியது
4
கதிரின் கீற்றொளி
எனை அழைத்தது
நித்திரையின் சன்னலுக்கு வந்து
கூவவில்லை
கூப்பிடவும் இல்லை
பேசவில்லை
பாட்டெழுப்பவும் இல்லை
அந்த ஊமை ஒளி எழுப்பிற்று
கூர்ந்து பார்த்தே
எழுப்பிற்று
5
லச்சு சரசு
லட்சுமிக்கும் சரஸ்வதிக்கும் பிணக்குமொகறய தூக்கி வச்சிக்கும் ரெண்டும்
ஏ இந்தா இந்தான்னு
கூட்டி வந்து இட்டாலும்
அத்துக்கிடும்
வாய்க்கு வந்த வசவெல்லாம் பேசும்
சரஸ்வதி புருஷனுக்கு
லச்சுமி மேல ஒரு கண்ணு
லச்சுமி புருஷனுக்கு
சரஸ்வதி மேல ரெண்டு கண்ணு
அது இதயும்
இது அதயும்
இழ்த்துட்டு ஓட
ஊரே சிர்ச்சிச்சு
லச்சுமிக்கு புள்ள பொறந்திச்சு
சரசு ஜாட
சரசு மொவன் இருக்கான்
லச்சு கணக்கா
***


Comments
Post a Comment