சபரிநாதன் கவிதைகள் - ஆனந்த் குமார்

சொல்ல வருவது..
கவிதையில் சொல்ல முடியாததென்று எதுவுமில்லை. எல்லாவற்றையும் கவிதையில் பாடலாம். ஆனால் சொல்ல முடியாத ஒன்றை நோக்கியே கவிதை தன் அகத்துள் ஏங்குகிறது. விடியலுக்கு முந்தைய தருணமென அது காத்திருக்கிறது, தன்னை வெளிப்படுத்தும் ஒரு மேடையென மொட்டவிழக் காத்திருக்கும் கவிஞனை தேர்ந்தெடுக்கிறது. மிக மெல்லிய இதழ்களின் கோர்ப்பில் உடையக் காத்திருக்கும் அவனை உடைத்து தன்னை மலர்த்துகிறது. தன்னில் நிகழும் இந்த அற்புதத்தை வியக்காத கவிஞர்கள் மிகக்குறைவு.

சபரிநாதன் தமிழின் பின் நவீனத்துவ கவிஞர்களில் மிக முக்கியமானவர். நவீனத்துக்குப் பின் தமிழின் கவிதை மொழி plain poetry யை நோக்கி அளவுக்கதிகமாக சாய்ந்தபோது உரைநடையை நோக்கி வெகு அணுக்கமாக வந்து சேர்ந்தது, இந்நிலையில் செவ்வியல் தன்மையில் நீள்கவிதைகள் மூலம் இன்றைய வாழ்வை புத்தம்புதிதாய் சபரியால் சொல்ல முடிகிறது. சந்த நீக்கம், ஓசை நீக்கம் என கூறுமுறையில் கவிதை இன்று வந்து அடைந்திருக்கும் குறைத்துக்கூறும் இடத்திலிருந்து, தேர்ந்த தமிழ் சொற்களை உபயோகிக்கும் அவரது lyrical poetry  வழி, மொழி தன்னைத் தானே நிகழ்த்தும் அற்புதங்களின் சாத்தியத்தை சபரி தனது கவிதைகளில் மீண்டும் நிகழ்த்திக் காட்டுகிறார். மொழிச்செறிவுள்ள சபரியின் கவிதையில் தென்படும் சமநிலைத் தன்மை வியக்க வைப்பது. வருத்தம் தோய்ந்த புன்னகையா அல்லது அங்கதமா என தெளிவில்லாமல் அந்தியின் நிறமென மயக்குகிறது இவரது பெரும்பாலான கவிதைகளின் முகம்.

மாண்டேஜ் படங்களைப் போல காட்சிகளை மாற்றிக் காட்டி ஒரு பொது உணர்வை வாசகனிடம் கடத்தும் கவிதைகள் அவரது வால் தொகுப்பில் சில உள்ளன. இந்த கவிதை என்ன சொல்ல வருகிறது என்பதைப் பற்றித்தான் இந்த கவிதை. கவிஞனின் வாக்குமூலம். தன்னை, தன் வலியை கண்ணீரின்றி சொன்னாலும் அல்லது சொல்லவிடுனும் உணர்ந்துகொள்ளும் ஒருவனை கட்டித்தழுவும் ஒரு கவிதை.
 
***
 
சொல்ல வருவது என்ன என்றால்…

இங்கு இல்லை
கொஞ்சம் தள்ளி..இன்னும் கீழே
இல்லை அங்கு இல்லை
இல்லை இது வலியே இல்லை டாக்டர்
இது ஒரு குமிழ் ஊத்தைக் குமிழ்
திசுச்சுவர்களில் மோதி மோதி உடைய முயலும்
வெறும் குமிழ்
இல்லை அதுவும் இல்லை
ஏதாவது புரிகிறதா தந்தையே
இல்லை அச்சம் இல்லை
மூடுபனி ததும்பும் பள்ளத்தாக்கைப் பார்ப்பதல்ல
உறக்க முகப்பில் நிலம் நழுவுமே..அது அல்ல
ஒரு விதமான குளிர் தான் ஆனால்
இது கூதிர் இல்லையே
தொட்டுப் பாரும் அன்னையே
முதலில் எனை வெளியே விட்டிருக்கவே கூடாது
நான் கண்டதை எல்லாம் எடுத்து வாயில் வைத்து விட்டேன்
அப்போது ஓடி வந்த தாங்கள்
எனை அள்ளி விழுங்க முயன்றிருக்கக் கூடாது
புரிகிறதா
நான் கண்டது மிளா இல்லை
கானகக் கண்கள்,செம்பழுப்பு சிறகுகள்,பருந்திமில்
புராதன உயிரி அன்று
பேரம் பேசத் தெரியாத ஒருவன்
குருணைகளையும்,போலிப் பவழங்களையும்,பாதுகாப்பு உத்திகளையும்
கொடுத்து வாங்கிய விலைமதிப்பற்ற பண்டம் அது
இல்லையா அது இல்லையா
இது நீ தானா
இல்லை இது மரப்பு இல்லை
இன்னும் உணர முடிகிறது
படுகுழி எனும் சொல்லருகே அமர்ந்திருக்கையில் கோதிப்போகும் தென்றலை
நெம்ப முடிகிறது கனவில் ஆடும் முன்னம் பல்லை
இல்லை நான் அறிந்தது மந்திரம் இல்லை
ஆசை கூட அல்ல
அற்புத ஜீவராசியின் குரலா என்ன
தீக்காய வார்டின் சாமத்து ஒலிகளா
தெரியவில்லை
நடை சாத்திய நள்ளிரவுக் கோயிலினுள்
நடுங்கும் சுடர் முன்னில் நான் கண்ட இருள்
இல்லை அது இல்லை
சடலங்களை அறைந்து எழுப்பும் ஒளி
இல்லையா அதுவும் இல்லையா
புரிகிறதா அன்பே
புரிகிறது தானே
எனக்குத் தெரியும் உனக்குப் புரியும் என்று.

***
 
மீண்டும் தன்னால் சொல்ல இயலாத ஒரு தருணத்தைப் பற்றிய ஏக்கம் இந்த கவிதை. முன்னதில் அத்தனை வலிகளை, அன்னையை, தந்தையை அழுது விளித்தவன் இதில் தனக்காக ஒரு நூறு பேரை கண்கலங்கி, கைதட்டி, வாய் விட்டு சிரிக்கச் சொல்கிறான். அப்போது கொஞ்சம் புரிந்துவிடும் தானே. அல்லது அவன் கண்டதை விசிலடிப்பதின் வழியே இன்னும் இலகுவாக கடத்திவிடமுடியுமோ...
***
 
மற்றும் ஓர் அதிகாலை

நேற்றிரவு கூட தெரியாது இன்று இப்படியான இடைவேளை வாய்க்குமென
எப்போதாவது அவிழும் ஒளிப்பூத்தருணம் இது
-    இதில் குத்திச் சுழலும் பம்பரம் குடை சாயாது
இது நான் பிறந்த நட்சத்திரத்தின் அச்சாணி –
இறுதியாக..அமைதி..ஆ..தெளிச்சி..
இப்பொழுது எனக்காக ஒரு நூறு பேர் சிரிக்க வேண்டும்
வாய் விட்டு
கை தட்டி
விழி கலங்கி
வான் பார்த்து.
நான் சொல்ல வருவது என்னவெனில்..
இல்லை அதை சொல்ல இயலாது
மஞ்சள் நீல நீர்வண்னத்தில் வரைந்து தான் காட்ட முடியும்
விரிவுரையாற்ற முடியாது அதைக் குறித்து விசிலடிப்பதே சாத்தியம்
அறிந்திலேன் இக்குதூகலத்தை என்ன செய்வதென்று
கோடை விடுமுறையில் ருதுவாகி
பள்ளி திரும்பும் பேதையைப் போல நான்
ஏலாமல் மிதக்கும் வனப்பை எப்படி கையாளப் போகிறேன்?
இனிக்கும் மர்மக் கொந்தளிப்பினூடே தப்பிப் பிழைப்பேனோ நான்?

***
 
குறிப்பு:
சபரிநாதன் தற்போது நாகர்கோவிலில் உள்ள அரசு வேலைவாய்ப்பகத்தில் பணிபுரிந்து வருபவர். கவிதை, திறனாய்வு, மொழிபெயர்ப்பு ஆகியவற்றைத் தொடர்ந்து எழுதி வருபவர். இவரது ‘களம், காலம் ஆட்டம்’ மற்றும் ‘வால்’ என இரண்டு கவிதை தொகுப்புகள் இதுவரை வெளிவந்துள்ளன.
 
“இவரது கவிதைகள் தொண்ணூறுகளின் மாற்றங்களை ஒட்டி தமிழ்க்கவிதையில் நிகழ்ந்த புனைவுத்தன்மை, புறவயமான விரிவு, உரைநடைமொழிபு போன்ற இயல்புகளின் நீட்சியில் ஒருபுறமும் மறுபக்கம் செவ்வியல் ஒழுங்கு, உணர்வெழுச்சி, பாடல்தன்மை, கட்டிறுக்கம், மொழிச்செறிவு, ஒருமெய்யறிதலாகக் கவிதையின் ரகசியபாதைகள் என தனித்த ஒரு உணர்திறனிலும் இயங்குகின்றன" என சபரிநாதனை நேர்காணல் செய்த பிரவீண் பஃறுளி குறிப்பிடுகிறார்.

***
Share:

0 comments:

Post a Comment

Powered by Blogger.

ஆகாய மிட்டாய் - கல்பற்றா நாராயணன் கவிதை

ஆகாய மிட்டாய் ந ண்பனின் மகளின் பெயர் மழை என்று தெரிந்தபோது மனம் தெளிந்தது சாறாம்மாவுக்கும் கேசவன்நாயர்க்கும் இருந்த துயரம் சற்று பிந்தியானால...

தேடு

Labels

அபி (11) அரவிந்தர் (1) அறிமுகம் (1) ஆக்டேவியா பாஸ் (2) ஆத்மாநாம் (2) ஆனந்த் குமார் (7) இசை (4) இந்தி (5) இளங்கோ கிருஷ்ணன் (2) உபநிடதம் (1) உரையாடல் (2) எம். கோபாலகிருஷ்ணன் (1) எஸ். ராமகிருஷ்ண (1) எஹுதா அமிக்ஹாய் (1) ஓக்ட்டாவியோ ப்பாஸ் (1) க. மோகனரங்கன் (4) கட்டுரை (6) கப (1) கமலதேவி (1) கம்பன் (1) கலாப்ரியா (1) கலீல் கிப்ரான் (1) கல்பற்றா நாராயணன் (3) கல்பனா ஜெயகாந்த் (1) கவிதை (146) கவிதையின் மத (1) காரைக்கால் அம்மைய (1) காளிதாசன் (1) காஸ்மிக் தூசி (1) கிம் சின் டே (1) குன்வர் நாராயண் (1) கைலாஷ் சிவன் (1) கோ யுன் (1) ச. துரை (2) சங்க இலக்கியம் (2) சதீஷ்குமார் சீனிவாசன் (6) சந்திரா தங்கராஜ் (1) சபரிநாதன் (3) சீர்மை பதிப்பகம் (1) சுகுமாரன் (3) சுந்தர ராமசாமி (2) ஞானக்கூத்தன் (1) தாகூர் (1) தேவதச்சன் (4) தேவதேவன் (18) தேவேந்திர பூபதி (1) நகுலன் (3) நெகிழன் (1) நேர்காண (1) நேர்காணல் (1) பாபு பிருத்விராஜ் (1) பிப்ரவரி 2022 (2) பிரதீப் கென்னடி (1) பிரமிள் (2) பிரான்சிஸ் (1) பூவன்னா சந்திரசேக (1) பெரு. விஷ்ணுகுமார் (1) பெருந்தேவி (1) பொன்முகலி (1) போகன் சங்கர் (2) போர்ஹே (1) மங்களேஷ் டப்ரால் (1) மதார் (3) மரபு கவிதை (7) மனுஷ்யபுத்திரன் (1) மா. அரங்கநாதன் (1) மொழிபெயர்ப்பு (10) மோகனரங்கன் (1) யவனிகா ஸ்ரீராம் (2) யான் வாங் லீ (1) யுவன் சந்திரசேகர் (15) யூமா வாசுக (2) ரகுவம்சம் (1) ரமாகாந்த் ரத் (1) ராமாயணம் (1) ரியோகான் (1) லட்சுமி மணிவண்ணன் (2) லதா (1) லாரா கில்பின் (1) வ. அதியம (1) வண்ணதாசன் (2) வாசகர் (1) வாலஸ் ஸ்டீபன் (1) விக்ரமாதித்யன் (6) வே. நி. சூர்யா (2) வே.நி. சூர்யா (1) வேணு தயாநிதி (1) ஜெ. ரோஸ்ல (1) ஜெயமோகன் (1) ஜென் (1) ஷங்கர் ராமசுப்ரமணியன் (1) ஷெல்லி (1) ஸென் கவிதை (1) ஸ்ரீநேசன் (1)

Most Popular

Blog Archive