***
"ரத்தத்தில்
கை நனைத்ததில்லை நான்
எனினும்
ரத்தம் சிந்தவைப்பவர்களின் நிழலில்
தங்க நேர்கிறது எனக்கு
திருடிப் பிழைத்ததில்லை நான்
எனினும்
திருடிப் பிழைப்பவர்களிடம்
யாசகம் வாங்கி வாழ நேர்கிறது எனக்கு
கூட்டிக்
கொடுத்ததில்லை நான்
எனினும்
கூட்டிக் கொடுப்பவர்களின்
கூடத் திரிய நேர்கிறது எனக்கு"
- விக்ரமாதித்யன்
***
விக்ரமாதித்யனின் இருத்தல் பிரச்சனைகளால் ஆன உலகு அமைத்து தந்த முகம் ஒன்று அவருக்கு உண்டு. அந்த உலகு சுரக்கும் கவிதைகள் அவரிடம் வந்துக் கொண்டே இருக்கும்.
எப்போதும் தெரியும் உக்கிரமான முகம் அதனைத் தாண்டி அருள் முகம் ஒன்று உண்டு. கவிஞனில் எவனுக்கெல்லாம் இந்த அருள் முகம் உண்டோ, அவர்களிடம் நமக்கு வழங்குவதற்கு என்னவெல்லாமோ இருக்கின்றன. வழங்கிக் கொண்டேயிருக்கிறார்கள். விக்ரமா
***
"உணவின் முக்கியத்துவம்
உன்னை விட எனக்கு அதிகம் தெரியும்
ஒட்டல்களில் மேஜை துடைத்திருக்கிறேன்
இலையெடுத்திருக்கிறேன்
கல்யாண வீடுகளில் போய் பந்திக்கு
காத்துக் கிடந்திருக்கிறேன்
அன்னதான வரிசையில்
கால்கடுக்க நின்றிருக்கிறேன்
கோயில் உண்டைக் கட்டிகளிலேயே
வயிறு வளர்த்திருக்கிறேன்
சாப்பாட்டுச் சீட்டுக்கு
அலைந்து திரிந்திருக்கிறேன்
மதிய உணவுக்கு மாநகராட்சி லாரியை
எதிர்பார்த்திருந்திருக்கிறேன்
சொந்தக்காரர்கள் சினேகிதர்கள்
வீடுதேடிப் போயிருக்கிறேன்
சாப்பாட்டு நேரம் வரை இருந்து
இலக்கியம் பேசியிருக்கிறேன்
அன்றைக்கு அம்மை ஒறுத்து வந்தாள்
இடையில் வந்த இவள்
இன்றைக்கும்
யார் யார் தயவிலோதான்
இருக்க முடியாது யாரும்
என்னைக் காட்டிலும்
சாப்பாட்டு அருமை தெரிந்தவர்கள்"
- விக்ரமாதித்யன்
***
கவிஞர் விக்ரமாதித்யன் விக்கி பக்கம்
விக்ரமாதித்யன் கவிதைகள் அமேசானில் வாங்க: விக்ரமாதித்யன் கவிதைகள்