கவிஞனின் வேர்கள் - நிக்கிதா

கவிஞர் விக்ரமாதித்யனின் இக்கவிதையை வாசித்ததும், 

“துறந்த செல்வன் நினைய, துறக்கம்தான் பறந்து வந்து படிந்தது” என்ற கம்பனின் வரிகள் நினைவில் எழுந்தது. அயோ
த்தியா காண்டம், திருவடி சூட்டுப் படலத்தில், பரத்வாஜ முனிவர் நினைத்த மாத்திரம், விருந்தோம்பல் செய்வதற்காக ஸ்வர்க்கமே பூமிக்கு வந்ததைக் குறிக்கும் பாடல். 

நம் மரபில் விருந்தோம்பலின் முக்கியத்துவம், மகத்துவம் கம்பனின் வரிகளிலே பல முறை வெளிப்படுகிறது. திருவள்ளுவர் ஒரு அத்தியாயம் முழுவதிலும் விருந்தோம்பலின் சிறப்பு, விருந்தினரை நடத்தும் விதம், விருந்தோம்பல் செய்வதன் பலன்கள் ஆகியவற்றைக் குரல்களாக நமக்கு அளித்திருக்கிறார். 

'அதிதி தேவோ பவ' தைத்திரீய உபநிஷததில் வரும் இவ்வரிகள் நம் இந்திய நிலம் எங்கும் ஒலித்துக்கொண்டிருக்கும் ஒன்று. உலக அளவிலும் கூட விருந்தோம்பலுக்குத் தனிச் சிறப்பு இருந்திருக்கிறது, இருந்துகொண்டிருக்கிறது. இந்த பின்னணியில், அண்ணாச்சியின் வாழ்க்கையின் அனுபவங்களைக் கொண்டு பார்த்தால் இக்கவிதையை அவர் கிண்டல் செய்யும் தொனியில் ஆரம்பித்து, மக்களின் தினசரி பிரச்சனைகளின் ஊடக உயர் விழுமியம் சிதறிப்போகும் இடங்களைச் சுட்டிக்காட்டுகிறார். “விளையாட்டில்லை விருந்துபசரிப்பு” என்ற வரிகள் அத்தனை எடை கொண்டிருக்கிறது உண்மையான பொருளாகவும், அவர் பயன்படுத்தியிருக்கும் பொருளாகவும். 

சிதறிப்போகும் இடங்களில் மீண்டும் முளைத்து எழக் கூடும் என்ற ஆசை சிறிது அளவேனும் இருப்பதாகத் தான் வாசித்தேன். அத்தோடு, "எதற்குத் தேடிப்போய் பார்த்து இடைஞ்சல் பண்ணுவானேன் இருட்டோ வெளிச்சமோ இருக்கும் இடத்திலேயே இருக்கலாம் 

திருவள்ளுவரின் இவ்வரிகளுக்குள் ஒளிந்திருக்கிறது. 

“இனைத்துணைத் தென்பதொன் றில்லை விருந்தின் துணைத்துணை வேள்விப் பயன்” தாற்காலிகத்தன்மை உடையதாகத் தோன்றினாலும், முழுதும் மரபில் வேர் கொண்டிருக்கும் நவீன கவிதை “அ-விருந்தோம்பல்”

*** 

அ-விருந்தோம்பல்

முதலில் ஆள் 

ஊரில் இருக்க வேண்டும் 

அப்புறம் அவர் 

வசதியாக இருக்கவேண்டும் 

பிறகு அவரே 

வரவேற்கிற மனநிலையில் இருக்கவேண்டும் 

எல்லாமே கூடிவந்தால் நல்லது 

இடவசதி 

இருக்கவேண்டும் 

பணவசதி 

இருக்கவேண்டும் 

விளையாட்டில்லை 

விருந்துபசரிப்பு 

வேலைப்பளு இருக்கக்கூடாது 

மனைவி 

கோபித்துக்கொள்ளக்கூடாது 

உணவுப்பழக்கம் 

ஒத்துப்போகவேண்டும் 

எவ்வளவு இருக்கிறது 

ஒருவனை வா என்று சொல்ல 

கடன் வாங்கவாது 

முடிய வேண்டும் 

கைமாற்றாவது 

கிடைக்கவேண்டும் 

தன்னை பேணிக்கொள்வதே  பெரிய காரியம் 

இன்னும் இருக்கிறது வீடு குடும்பம் பிள்ளைகள் 

விருந்தினர் வருகையை எப்படிக் கொண்டாட 

அவரவர்க்கும் 

ஆயிரத்தெட்டு பிரச்சனைகள் 

எதற்குத் தேடிப்போய் பார்த்து 

இடைஞ்சல் பண்ணுவானேன் 

இருட்டோ வெளிச்சமோ 

இருக்கும் இடத்திலேயே இருக்கலாம் 

- விக்ரமாதித்யன்

***

கவிஞர் விக்கிரமாதித்தன் காடு ஆறு மாதம், வீடு ஆறு மாதம் என வாழ்ந்தவர். வழி அனுப்புதலின் துயரை விட வழியனுப்பப்படுதலின் துயரை நன்கறிந்தவர். இக்கவிதையிலும் கவிமனசு "பிரிவுத்துயர் பெருந்துயர்"  என விம்முகிறது. அம்மா மனைவி பெற்றோர் என படிப்படியாய் துயரின் விகிதத்தைக் கூட்டிப் பிரிதலின் வலியைக் கடத்துகிறது.

நம் மரபில் எத்தனையோ வழியனுப்புதல்கள் இருந்தாலும் உமை, அபிமன்யு, ராவணன் வழியனுப்பப்படுவதைக் குறிப்பிடுகிறார். அவர்கள் திரும்ப வரப்போவதில்லை என அறிந்து வழி அனுப்புதலே துயரை மேலும் ஆழம் ஆக்குவதாகத் தோன்றுகிறது.

"என்னையும் வழியனுப்பி வைக்கிறார்கள் 

என் அம்மா என் மனைவி என் பிள்ளைகள்"

இவ்வரிகள், சுபத்திரை, மண்டோதரியின் துயரை விட தன் பெற்றோருக்கும், மனைவிக்கும் மக்களுக்கும் துயர் அதிகம் என உணர்த்துவதாக உள்ளது. அல்லது கவிஞரின் இயல்பைப் புரிந்து அவர்கள் துயரம் கொள்வதே இல்லையா? துயரம் இல்லாததால் வந்த துயரா இக்கவிதை என வாசிக்கிறேன். "வழியனுப்ப வரவேண்டாம் யாரும் " அதனால் தான் சொல்கிறாரா? 

***

வழியனுப்புதல்

வழியனுப்ப 

வரவேண்டாம் யாரும் 

வழியனுப்ப 

வரமாட்டேன் நானும் 

பிரிவுத்துயர் 

பெருந்துயர் 

பிள்ளையை வழி அனுப்பிவைத்த 

அம்மாவிடம் கேட்டுப்பார் 

கணவனை வழியனுப்பிவைத்த 

மனைவி முகவாதத்தில் காணலாம் 

புகுந்தவீட்டுக்குப் போகிற பெண்ணின் 

பெற்றோருக்குத் தெரியும் 

உமையை 

எப்படி வழியனுப்பி வைத்திருப்பார்கள் 

அபிமன்யுவை 

எப்படி வழியனுப்பி வைத்திருப்பாள் சுபத்ரா 

இராவணனை 

எப்படி வழியனுப்பியிருப்பாள் மண்டோதரி 

என்னையும் வழியனுப்பி வைக்கிறார்கள் 

Share:

0 comments:

Post a Comment

Powered by Blogger.

1977ல் புதுக் கவிதை - க.நா. சுப்ரமண்யம்

க.நா.சு. தன் கவிதை நூல்களுக்கு எழுதிய இரண்டு முன்னுரைகள் இந்த இதழில் இடம்பெற்றிருக்கிறது. முதலில், 1977ஆம் ஆண்டு வெளியான ‘மயன் கவிதைகள்’ தொக...

தேடு

Labels

அபி (11) அரவிந்தர் (1) அறிமுகம் (1) ஆக்டேவியா பாஸ் (2) ஆத்மாநாம் (2) ஆனந்த் குமார் (7) இசை (5) இந்தி (5) இளங்கோ கிருஷ்ணன் (2) உபநிடதம் (1) உரையாடல் (2) எதிர்வின (2) எம். கோபாலகிருஷ்ணன் (1) எம்.எஸ். கல்யாணசுந்தரம் (1) எஸ். ராமகிருஷ்ண (1) எஹுதா அமிக்ஹாய் (1) ஓக்ட்டாவியோ ப்பாஸ் (1) க. மோகனரங்கன் (4) க.நா. சுப்பிரமணியம் (3) க.நா. சுப்ரமணியம் (2) கட்டுரை (7) கப (1) கமலதேவி (1) கம்பன் (1) கலாப்ரியா (1) கலீல் கிப்ரான் (1) கல்பற்றா நாராயணன் (4) கல்பனா ஜெயகாந்த் (2) கவிதை (176) கவிதையின் மத (1) காரைக்கால் அம்மைய (1) காளிதாசன் (1) காஸ்மிக் தூசி (1) கிம் சின் டே (1) குமரகுருபரன் விருது (5) குன்வர் நாராயண் (1) கைலாஷ் சிவன் (1) கோ யுன் (1) ச. துரை (2) சங்க இலக்கியம் (2) சதீஷ்குமார் சீனிவாசன் (6) சந்திரா தங்கராஜ் (1) சபரிநாதன் (3) சீர்மை பதிப்பகம் (1) சுகுமாரன் (3) சுந்தர ராமசாமி (2) ஞானக்கூத்தன் (1) தாகூர் (1) தேவதச்சன் (4) தேவதேவன் (23) தேவேந்திர பூபதி (1) நகுலன் (3) நெகிழன் (1) நேர்காண (1) நேர்காணல் (1) பாபு பிரித்விராஜ் (1) பாபு பிருத்விராஜ் (1) பிப்ரவரி 2022 (2) பிரதீப் கென்னடி (1) பிரமிள் (3) பிரான்சிஸ் (1) பூவன்னா சந்திரசேக (1) பெரு. விஷ்ணுகுமார் (2) பெருந்தேவி (1) பொன்முகலி (1) போகன் சங்கர் (2) போர்ஹே (1) மங்களேஷ் டப்ரால் (1) மதார் (5) மரபு கவிதை (7) மனுஷ்யபுத்திரன் (1) மா. அரங்கநாதன் (1) மொழிபெயர்ப்பு (12) மோகனரங்கன் (1) யவனிகா ஸ்ரீராம் (2) யான் வாங் லீ (1) யுவன் சந்திரசேகர் (15) யூமா வாசுக (2) ரகுவம்சம் (1) ரமாகாந்த் ரத் (1) ராமாயணம் (1) ரியோகான் (1) லட்சுமி மணிவண்ணன் (2) லதா (1) லாரா கில்பின் (1) வ. அதியம (1) வண்ணதாசன் (2) வாசகர் (1) வாலஸ் ஸ்டீபன் (1) விக்ரமாதித்யன் (6) விவாத (1) வீரான்குட்டி (3) வே. நி. சூர்யா (5) வே.நி. சூர்யா (6) வேணு தயாநிதி (1) ஜெ. ரோஸ்ல (1) ஜெயமோகன் (2) ஜென் (1) ஷங்கர் ராமசுப்ரமணியன் (1) ஷாஅ (1) ஷெல்லி (1) ஸென் கவிதை (1) ஸ்ரீநேசன் (1)

Most Popular

Blog Archive