உடைந்து உடைந்து சிதறி சிதறி எங்கோ சென்று என்னவோ ஆகி நிற்கும்போது தெரிகிறது வீடு பத்திரமான இடம் என்று. வெளியே சென்று விட்டு மீண்டும் வீடு திரும்புவது என்பது வெற்றி வாழ்க்கை தான்.
ஆரம்பித்த இடம் நியாபகம் வருகிறது
இப்போது. பழைய கனவுகள் இமைக்குள் நிழலாடுகிறது எனக்கு. பின்பு ஒருநாள் நான் வீடு திரும்பலாம்
இல்லை திரும்பாமல் போகலாம். இதோ இந்த கவிதையின் கடைசி இரண்டு வரிகளை அகத்தில் எழுதிக்கொள்கிறேன்.
அதுவரை வழிச்செலவுக்கு உதவும்.
***
வீடு பத்திரமான இடம்
“புலிப்பால் கொண்டு வரப்
போனான் ஐயப்பன்“
புத்தி வளர
பேச்சு குறைய
அந்தம் கண்டது மௌனம்
காய்ந்து வெடித்ததும்
அனாதையாக
காற்றில் அலைக்கழியும்
இலவம் பஞ்சு
ஊருக்கு வெளியே
தாமரைக் குளம்
தனியே
பூத்துக் கிடக்கும்
வெறிச்சோடி
பூத்தலின் கனவுகளில்
தேன்குடித்த வண்ணத்துப்பூச்சி
பறத்தலும் மறந்து
துடிப்புமிழந்து
வெயில் காயும்
புழுவாயிற்று
வொத்தையடிப் பாதையிலே
வொரு சுவடும் மிச்சமில்லே
- விக்ரமாதித்யன்
***
தவறவிட்ட வாய்ப்புகள்; நழுவிப்போன இளமை; என்றோ கைவிட்ட காதல்; விரைந்து
தீர்த்த பணம்; மறந்து போன சூள்; காணாமல் போன ஆரோக்கியம்; குன்றிப்போன
கௌரவம் எல்லாம் எதிர்நிற்கும் சிநேகிதனிடம் முக்கால் சீக்ரெட்டாக.
ஐயோ! என் வாழ்க்கை என் வாழ்க்கை..
***
பார்வை
தன்னின் சிகரெட் நுனி
விரல்களில் சுட...
எதிர்நிற்கும் சிநேகிதனின்
முக்கால் சிகரெட்
விழிகளில் பட...
- விக்ரமாதித்யன்
***
கவிஞர் விக்ரமாதித்யன் விக்கி பக்கம்
விக்ரமாதித்யன் கவிதைகள் அமேசானில் வாங்க: விக்ரமாதித்யன் கவிதைகள்
0 comments:
Post a Comment