பெருந்தேவி கவிதைகள் - சுனில் கிருஷ்ணன்

இந்தக் கவிதை உன்னதமான எதையும் அல்ல, குறைந்தபட்சம் உடைந்து அழுவதற்குப் போதுமான கண்ணீரைக் கோருகிறது. கண்ணீர் வழியே வாழ்வை அர்த்தப்படுத்திக் கொள்ள முனைகிறது.

தனிப்பட்ட முறையில் பெருந்தேவியின் மொத்தக் கவிதைகளில் எனக்கு மிகப்பிடித்த கவிதைகளில் ஒன்று என இக்கவிதையைத் தயங்காமல் சொல்வேன். அவரே மறுத்தாலும் கவிஞரின் முகத்தில் தேவனைத் தேடாமல் இருக்க முடிவதில்லை. பேரிருப்பின் சமிஞ்கையை உணர்ந்து கொண்ட திடுக்கிடல் வெளிப்பட்ட கவிதை.

***

ஏன் ஏன்
அறையெங்கும்
கடவுளின் கண்ணாய்க்
கணினியின் ஒளித்திரை
பச்சைச் சிறுதுளி
மின்னி அருளுகிறது
ஏன் ஏன் கைவிட்டீர்
ஒரு துளிக்
கண்ணீரை
நாளை அவளுக்குத் தாரும்.
 
***
இக்கவிதைகளில் அவர் பயன்படுத்தும் அருள் எனும் சொல் என்னை வெகுவாக சலனப்படுத்துகிறது. அருளுக்கான இறைஞ்சுதல் கவிதைகளில் தொனிக்கிறது. பின்னர் அவை உதாசீனப்படுத்தப்படுகின்றன. மொத்தக் கவிதையுலகிலும் இந்த இருமை அவரை அலைக்கழிக்கிறது என்றே எண்ணுகிறேன். கவிதைகளில் வெளிப்படும் தவிப்பு வாசகரை பதட்டம் கொள்ளச் செய்கிறது.
 
*** 
 
உடல் பருத்த பெண்

நான் உடல் பருத்த பெண்
நடக்கும்போது மூச்சு வாங்குகிறது
நரைகளைப் பற்றி கவலையில்லை
பொடி எழுத்துகளைப் படிக்க கண்ணாடி தேவைப்படுகிறது
ஆனால் படிக்க முடியாது
எனக்கு சுகமாக நித்திரை வருகிறது
எந்தக் கனவுக் கோளாறுமில்லை
இரவில் படுக்கையில் படுத்தபடி
ஜன்னல் வழியாகப் பார்க்கிறேன்
ஒரே நட்சத்திரக் கோலாகலம்
இப்படி நிரூபிப்பதெல்லாம்
அவசியமில்லையேயென்று
எப்போது புரியப் போகிறது
முட்டாள் கடவுளுக்கு

க்ரீம்ஸ் ரோடில் ஒரு காலத்தில் எனக்குச் சிரிப்பு இருந்தது
 
மாற்றக் கடவுளுக்குமுன்
மண்டியிட்டுக் கதறி அழுபவர்கள்
இரவில்தான் அழுவார்கள்
நிலாவின் ஒரு துண்டத்தோடுதான்
துக்கத்தை விழுங்க முடியும்

நவம்பர்

அவள் ஜன்னல் வழியே பார்க்கிறாள்
பார்க்க ஒன்றுமில்லை
கடவுளின் அருட்கைகள்
ஆளில்லா ரயில்வே கேட்களில் உயர்ந்து தாழப் பழகிக்கொள்கின்றன.

***
நன்றி: தமிழினி
 
குறிப்பு: பெருந்தேவி, அமெரிக்காவில் நியூயார்க் மாகாணம் சியனா கல்லூரியில் துணைப்பேராசிரியராகப் பணியாற்றுகிறார். பெருந்தேவியின் முதல் படைப்பு நவீன விருட்சம் இதழில் 1995ல் வெளிவந்தது. 
 
பெருந்தேவி பின்நவீனத்துவ, பின் அமைப்புவாதச் சிந்தனைகளால் கவரப்பட்டவர். இலக்கியத்தை கல்வித்துறை சார்ந்த ஆய்வுமுறைமைகளின் படி ஆராய்பவர். சமூகவியல், அரசியல் சார்ந்தும் பெண்ணியம் சார்ந்தும் தொடர்ந்து எழுதியவர். அவ்வகையில் தழிழ்ச் சிந்தனையில் தொடர்ச்சியான ஊடாட்டத்தை நிகழ்த்தியிருக்கிறார்.

நிகனோர் பார்ராவின் எதிர்கவிதை இயக்கத்தை தமிழில் முன்வைப்பதன் வழியாக கவிதை அழகியலில் ஒரு தொடர்விவாதத்தை உருவாக்கினார்.

புதுமைப்பித்தன் படைப்புகள் பற்றிய ஆய்வுகளை செய்திருக்கிறார். அசோகமித்திரன் பற்றிய ஓர் ஆய்வுக்கூட்டத்தை ஒருங்கிணைத்தார்.

 ***
 
Share:

0 comments:

Post a Comment

Powered by Blogger.

புதுக் கவிதை இரண்டு குறிப்புகள் - க.நா. சுப்ரமணியம்

[‘இலக்கிய வட்டம்’ இதழில் ‘புதுக்கவிதை’ என்கிற தலைப்பில் வெளியான இருவேறு குறிப்புகள் இந்த இதழில் இடம்பெறுகின்றன. முதலில் உள்ளது ‘மயன் கவிதைகள...

தேடு

Labels

அபி (11) அரவிந்தர் (1) அறிமுகம் (1) ஆக்டேவியா பாஸ் (2) ஆத்மாநாம் (2) ஆனந்த் குமார் (7) இசை (5) இந்தி (5) இளங்கோ கிருஷ்ணன் (2) உபநிடதம் (1) உரையாடல் (2) எதிர்வின (2) எம். கோபாலகிருஷ்ணன் (1) எஸ். ராமகிருஷ்ண (1) எஹுதா அமிக்ஹாய் (1) ஓக்ட்டாவியோ ப்பாஸ் (1) க. மோகனரங்கன் (4) க.நா. சுப்பிரமணியம் (3) க.நா. சுப்ரமணியம் (1) கட்டுரை (7) கப (1) கமலதேவி (1) கம்பன் (1) கலாப்ரியா (1) கலீல் கிப்ரான் (1) கல்பற்றா நாராயணன் (4) கல்பனா ஜெயகாந்த் (2) கவிதை (171) கவிதையின் மத (1) காரைக்கால் அம்மைய (1) காளிதாசன் (1) காஸ்மிக் தூசி (1) கிம் சின் டே (1) குமரகுருபரன் விருது (5) குன்வர் நாராயண் (1) கைலாஷ் சிவன் (1) கோ யுன் (1) ச. துரை (2) சங்க இலக்கியம் (2) சதீஷ்குமார் சீனிவாசன் (6) சந்திரா தங்கராஜ் (1) சபரிநாதன் (3) சீர்மை பதிப்பகம் (1) சுகுமாரன் (3) சுந்தர ராமசாமி (2) ஞானக்கூத்தன் (1) தாகூர் (1) தேவதச்சன் (4) தேவதேவன் (22) தேவேந்திர பூபதி (1) நகுலன் (3) நெகிழன் (1) நேர்காண (1) நேர்காணல் (1) பாபு பிருத்விராஜ் (1) பிப்ரவரி 2022 (2) பிரதீப் கென்னடி (1) பிரமிள் (3) பிரான்சிஸ் (1) பூவன்னா சந்திரசேக (1) பெரு. விஷ்ணுகுமார் (2) பெருந்தேவி (1) பொன்முகலி (1) போகன் சங்கர் (2) போர்ஹே (1) மங்களேஷ் டப்ரால் (1) மதார் (4) மரபு கவிதை (7) மனுஷ்யபுத்திரன் (1) மா. அரங்கநாதன் (1) மொழிபெயர்ப்பு (12) மோகனரங்கன் (1) யவனிகா ஸ்ரீராம் (2) யான் வாங் லீ (1) யுவன் சந்திரசேகர் (15) யூமா வாசுக (2) ரகுவம்சம் (1) ரமாகாந்த் ரத் (1) ராமாயணம் (1) ரியோகான் (1) லட்சுமி மணிவண்ணன் (2) லதா (1) லாரா கில்பின் (1) வ. அதியம (1) வண்ணதாசன் (2) வாசகர் (1) வாலஸ் ஸ்டீபன் (1) விக்ரமாதித்யன் (6) விவாத (1) வீரான்குட்டி (3) வே. நி. சூர்யா (5) வே.நி. சூர்யா (6) வேணு தயாநிதி (1) ஜெ. ரோஸ்ல (1) ஜெயமோகன் (2) ஜென் (1) ஷங்கர் ராமசுப்ரமணியன் (1) ஷாஅ (1) ஷெல்லி (1) ஸென் கவிதை (1) ஸ்ரீநேசன் (1)

Most Popular

Blog Archive