இசை கவிதைகள் - விக்னேஷ் ஹரிஹரன்

கவிஞர் இசையின் இந்த கவிதையே அவரது கவிதைகளைப் பற்றிய மிகக் கச்சிதமான குறிப்பு என்று நினைக்கிறேன். கவிஞர் இசையின் கவிதைகள் பெரும்பாலும் ஆழமான தத்துவ விசாரங்களோ, ஆன்மீக போதனைகளோ, உலகியல் சிக்கல்களோ கொண்டவை அல்ல. அவரது கவிதைகளின் வழியே நாம் அடைவது ஒரு மாற்று பார்வைக் கோணமே. அவரது கவிதைகள் உலகுடன் மோதிவிட்டு களைப்பாற கற்பனாவாதத்தின் பக்கம் ஒதுங்குபவை அல்ல. அவை “இன்றும் கொஞ்சம் கஷ்டம்தான் ஆனால் அதற்காக கீழே சிந்திய டீயின் நறுமணத்தை ராசிக்காமலா போகமுடியும்?” என்று கேட்பவை. உடனடியாக மனதிற்கு வருவது "கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்கவா முடியும்? ஒரு காப்பி சாப்பிடலாம் வா" எனும் கவிஞர் தேவதேவனின் வரிகளே. காரணமற்ற இனிமையான தருணங்களைப் பற்றி எப்படி கவிதை எழுதுவது? காரணமின்றி அதை விவரிக்கவும் முடியாது. கவிஞர் இசையின் கவிதைகளைப் போலவே அவற்றையும் சந்தேகிக்காமல், காரணம் கற்பிக்காமல், பதறாமல் அனுபவிக்க வேண்டியதுதான். இனிப்புதானே அவை?

***

காரணமற்று இனிக்கும் கணத்தை காண நேர்ந்தால்
அதனை அப்படி உற்றுப் பாராதே!
துவக்கி விடாதே
ஆராய்ச்சிகள் எதையும்
சந்தேகித்துக் கடந்து விடாதே!
அதுவே கதியென்று
அழுது கொண்டே அமர்ந்துவிடாதே!
காரணமற்று  இனிக்கும் கணத்தை
பேப்பரில் பிடிக்க முயலாதே!
அப்போது வந்து விடுகிறது பார்
ஒரு காரணம்
ஒழுகி விடுகிறது பார்
அந்த இனிப்பு
காரணமற்று இனிக்கும் கணத்தை
காண நேர்கையில்
அப்படிப்  பதறிப் பதறித்  துடிக்காதே!
இனிப்பு தானே அது?

***

இந்த கவிதை முதல் கவிதையின் இனிமைக்கு எதிராக வாழும் பொறாமை எனும் உயிரினத்தைப் பற்றியது. கொடிய உயிரினம் அது. அனைவராலும் வெறுக்கப்படுவது. அதை உற்று நோக்கி அன்பாக மாற்றும் ரசவாதத்தை அனைவரும் பயின்றுகொண்டே இருக்கிறார்கள். மிகக் கடினமான தியானம் போல் அதை பயில்கிறார்கள். ஒரு புழு பட்டாம்பூச்சியாகும் ஒரு மாயத் தருணத்தில் பொறாமை அன்பாக மாறி வானில் சிறகடித்து பறக்கவே இந்த கவிதையும் அத்தகைய தியானத்தில் காத்திருக்கிறது. ஆனால் யாரும் எதிர்பார்க்காத ஒரு தருணத்தில் அந்த பொறாமை அழத்தொடங்கியவுடன் கவிதை சட்டென்று எழுந்து சென்று அதை சமாதானப் படுத்தத் தொடங்கிவிடுகிறது. அழுகிற பொறாமை அன்பல்ல. ஆனால் அதுவும் பாவம்தானே? என்று கேட்கிறது. அது அன்பெனும் பட்டாம்பூச்சியாகாமல் போனால் என்ன? பொறாமை புழுக்களின் மீதும் இரக்கம் வைக்கத்தானே கவிதை? பொறாமை அன்பாக மாறாமல் போகலாம். ஆனால் அதை தேற்றுவது மிக நிச்சயமாக அன்பின் கரங்கள்தான்.

***

பொறாமையிடம் கொஞ்சம் இரக்கமாயிருங்கள்!

பொறாமையை ஆழ்ந்து நோக்கினால் அது அன்பாக
மாறிவிடும் என்று சொன்னார்கள்.

நான் நோக்கத் துவங்கினேன்
அவ்வளவு ஆழமாக
அவ்வளவு திடமாக

அது
ஆடவில்லை
அசையவில்லை

நானும் விடவில்லை
நோக்கிக் கொண்டே இருந்தேன்.

திடீரென்று
அதன் கண்களிலிருந்து தாரைகள் வழிந்து வழிந்து வந்தன.

நிற்காமல் அழுதாலும்
அது அன்பாக மாறியது போல் தெரியவில்லை.

அழுகிற பொறாமைக்கு
என்ன பெயர் வைப்பதென்று
எனக்கும்  தெரியவில்லை.

***

குறிப்பு: கவிஞர் இசை தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை, அரசு மருத்துவமனை ஒன்றில் மருந்தாளுநராகப் பணியாற்றி வருகிறார். 

நவீனக் கவிதையில் படிமம், மொழி ஆகியவற்றில் இருந்த செறிவையும் இறுக்கத்தையும் தளர்த்தி இயல்பான உரையாடல்தன்மையை கொண்டுவந்த கவிஞர்களில் முக்கியமானவர் இசை. கேலியும் பகடியும் மென்மையான புன்னகையுமாக வாசகனுடன் பேசுவதுபோல எழுதப்பட்ட கவிதைகள் அவருடையவை. நுண்சித்தரிப்புக்கள் கொண்டவை. தமிழ்க்கவிதையின் மையப்பேசுபொருளான அன்னியமாதல், தனிமை, உறவுச்சிக்கல்கள் ஆகியவற்றை பேசினாலும் முற்றிலும் புதியவகையில் நேரடியான உணர்ச்சி வெளிப்பாடுகளோ கசப்புகளோ இல்லாமல் எழுதப்பட்டவை. 

***

இசை நூல்கள் வாங்க

கவிஞர் இசை தமிழ்.விக்கி பக்கம் 

Share:

0 comments:

Post a Comment

Powered by Blogger.

புதுக் கவிதை இரண்டு குறிப்புகள் - க.நா. சுப்ரமணியம்

[‘இலக்கிய வட்டம்’ இதழில் ‘புதுக்கவிதை’ என்கிற தலைப்பில் வெளியான இருவேறு குறிப்புகள் இந்த இதழில் இடம்பெறுகின்றன. முதலில் உள்ளது ‘மயன் கவிதைகள...

தேடு

Labels

அபி (11) அரவிந்தர் (1) அறிமுகம் (1) ஆக்டேவியா பாஸ் (2) ஆத்மாநாம் (2) ஆனந்த் குமார் (7) இசை (5) இந்தி (5) இளங்கோ கிருஷ்ணன் (2) உபநிடதம் (1) உரையாடல் (2) எதிர்வின (2) எம். கோபாலகிருஷ்ணன் (1) எஸ். ராமகிருஷ்ண (1) எஹுதா அமிக்ஹாய் (1) ஓக்ட்டாவியோ ப்பாஸ் (1) க. மோகனரங்கன் (4) க.நா. சுப்பிரமணியம் (3) க.நா. சுப்ரமணியம் (1) கட்டுரை (7) கப (1) கமலதேவி (1) கம்பன் (1) கலாப்ரியா (1) கலீல் கிப்ரான் (1) கல்பற்றா நாராயணன் (4) கல்பனா ஜெயகாந்த் (2) கவிதை (171) கவிதையின் மத (1) காரைக்கால் அம்மைய (1) காளிதாசன் (1) காஸ்மிக் தூசி (1) கிம் சின் டே (1) குமரகுருபரன் விருது (5) குன்வர் நாராயண் (1) கைலாஷ் சிவன் (1) கோ யுன் (1) ச. துரை (2) சங்க இலக்கியம் (2) சதீஷ்குமார் சீனிவாசன் (6) சந்திரா தங்கராஜ் (1) சபரிநாதன் (3) சீர்மை பதிப்பகம் (1) சுகுமாரன் (3) சுந்தர ராமசாமி (2) ஞானக்கூத்தன் (1) தாகூர் (1) தேவதச்சன் (4) தேவதேவன் (22) தேவேந்திர பூபதி (1) நகுலன் (3) நெகிழன் (1) நேர்காண (1) நேர்காணல் (1) பாபு பிருத்விராஜ் (1) பிப்ரவரி 2022 (2) பிரதீப் கென்னடி (1) பிரமிள் (3) பிரான்சிஸ் (1) பூவன்னா சந்திரசேக (1) பெரு. விஷ்ணுகுமார் (2) பெருந்தேவி (1) பொன்முகலி (1) போகன் சங்கர் (2) போர்ஹே (1) மங்களேஷ் டப்ரால் (1) மதார் (4) மரபு கவிதை (7) மனுஷ்யபுத்திரன் (1) மா. அரங்கநாதன் (1) மொழிபெயர்ப்பு (12) மோகனரங்கன் (1) யவனிகா ஸ்ரீராம் (2) யான் வாங் லீ (1) யுவன் சந்திரசேகர் (15) யூமா வாசுக (2) ரகுவம்சம் (1) ரமாகாந்த் ரத் (1) ராமாயணம் (1) ரியோகான் (1) லட்சுமி மணிவண்ணன் (2) லதா (1) லாரா கில்பின் (1) வ. அதியம (1) வண்ணதாசன் (2) வாசகர் (1) வாலஸ் ஸ்டீபன் (1) விக்ரமாதித்யன் (6) விவாத (1) வீரான்குட்டி (3) வே. நி. சூர்யா (5) வே.நி. சூர்யா (6) வேணு தயாநிதி (1) ஜெ. ரோஸ்ல (1) ஜெயமோகன் (2) ஜென் (1) ஷங்கர் ராமசுப்ரமணியன் (1) ஷாஅ (1) ஷெல்லி (1) ஸென் கவிதை (1) ஸ்ரீநேசன் (1)

Most Popular

Blog Archive