கவிதை விழிக்கும் வரி - மதார்

அசந்து தூங்கிக்கொண்டே வரும்  நீண்ட பேருந்து பயணத்தில் திடீரென விழிப்பு தட்ட, அங்கே மழை தூறிக் கொண்டிருந்தால் எப்படி இருக்கும், அது போல கவிதையில் சில இடங்களுண்டு. விழிப்பு தட்ட வைக்கும் வரிகள். ஒரு சின்ன துணுக்குறலோடு இன்பம் அளிப்பவை. கவிஞர் ஸ்ரீநேசனின் 'தப்பு விதை' தொகுப்பிலுள்ள 'கண்கட்டு விந்தை' என்ற கவிதை

கண்கட்டு விந்தை

எங்கோ ஒரு மலையடிவாரத்தில்

துரிஞ்சி மரநிழலின் சிறு பாறை மீதுறைந்து நானும்

எதிரே என்னையே உற்றுப் பார்த்து

உயர்ந்து நிற்கும் ஒற்றைக் கல்குன்றமும்

தகிக்கும் பிற்பகல் வெயிலில் மூழ்கியிருக்கிறோம்

நானோ காலத்தால் பறிக்கப்பட்ட

யாரோ விட்டுப்போன தீர்ந்த மதுபுட்டி சிகரெட் பெட்டியுடன்

வெயிலைப்பருகி வெறுமையைப் புகைத்தவாறு

அமர்ந்திருக்கிறேன்

தூரத்துக் கானலில் குரலிசைத்தவாறு ஓர் ஆட்டுமந்தை

தலைப்பாகை கைத்தூக்குத் தொரட்டியுடன்

பின்னால் சங்க முல்லை நிலத்திலிருந்து

இப்போதே கிளம்பி வந்த இடையர்

குன்றுக்கும் எனக்குமிடையே வந்தமர்கிறார்

அவர் வாயின் பீடிக் கங்கு அனலைப் பெருக்க

ஊதும் புகையோ வெயிலில் திரள

ஓயாமல் புகைக்கிறார்

தனிமையுடன் அவர் தொடர்பேச்சு அதுபோலும்

பேச்சுப் பெருக புகையும் பெருகி

வானில் மேகமாய் திரண்டு வேகமாய் இருளும்

தருணத்தைக் கண்டுகொண்ட மேய்ப்பர்

கண்கட்டு வித்தகனாய் தலைப்பாகை உதறி எழ

கட்டளை ஏற்றதென மின்னலும் இடியுமாய் முழங்கும்

பின் மலைமீது மழையிறங்கி மாலை மூழ்க 

மந்தையுடன் வந்தவரும் அதில் மறைய

பின்மலையும் நானும் கூட மெல்லமெல்ல

எங்கோ மறைந்து போய் இருந்தோம்.

இதில் இரண்டுபேர் வருகிறார்கள். முதலாமவர் வெறுமையில் அமர்ந்திருப்பவர். இரண்டாமவர் வெறுமையுடன் ஒரு உரையாடலை நிகழ்த்த வந்தவர். 

'தனிமையுடன் அவர் தொடர்பேச்சு அதுபோலும்' என்ற வரியில் கவிதை விழிப்பு தட்டுகிறது. அதன் பின்பு பார்க்கும் காட்சி மழைத்தூறல் தான். பேசிப்பேசி மழையையே கொண்டுவந்துவிடுகிறார் இரண்டாமவர். ஒரு பெரும் புத்துணர்ச்சியை இந்தக் கவிதை அளித்துவிடுகிறது. தேவதச்சனின் ஒரு கவிதையில் ஃ வடிவில் மூன்று பேர் விடும் சிகரெட் புகை சந்திக்கும் இடமுண்டு. இந்தக் கவிதையில் தனிமையுடன் அவர் தொடர்பேச்சு புகையாய் கிளம்பி ஒவ்வொன்றிடமும் சென்று பேசுகிறது. அங்கு அவரது குரல் - புகை தான். இறுதியில் வானிடமும் அது உரையாடி பூமிக்கு மழையைக் கொண்டுவந்துவிடுகிறது என்னும்போது கவிதையின்பம் உச்சம் அடைகிறது. கவிதையில் இப்படி சில இடங்களுண்டு. விழிப்பு தட்ட வைக்கும் வரிகள். ஒரு சின்ன துணுக்குறலோடு இன்பம் அளிப்பவை. 

***

Share:

0 comments:

Post a Comment

Powered by Blogger.

பொருளின் பொருள் கவிதை - மா. அரங்கநாதன்

குறியீடுகளையும், படிமங்களையும் படைப்பதில் சில பல அசெளகர்யங்கள் தோன்றலாம். தன்னோடு எந்தவிதத் தகராறையும் வைத்துக் கொள்ளாத காரணத்தால் மலையும், ...

தேடு

Labels

அபி (11) அறிமுகம் (1) ஆக்டேவியா பாஸ் (1) ஆத்மாநாம் (2) ஆனந்த் குமார் (7) இசை (3) இந்தி (5) இளங்கோ கிருஷ்ணன் (2) எம். கோபாலகிருஷ்ணன் (1) எஸ். ராமகிருஷ்ண (1) க. மோகனரங்கன் (3) கட்டுரை (5) கப (1) கமலதேவி (1) கம்பன் (1) கலாப்ரியா (1) கலீல் கிப்ரான் (1) கல்பற்றா நாராயணன் (2) கல்பனா ஜெயகாந்த் (1) கவிதை (112) காரைக்கால் அம்மைய (1) காளிதாசன் (1) காஸ்மிக் தூசி (1) கிம் சின் டே (1) குன்வர் நாராயண் (1) கைலாஷ் சிவன் (1) கோ யுன் (1) ச. துரை (2) சங்க இலக்கியம் (2) சதீஷ்குமார் சீனிவாசன் (6) சபரிநாதன் (2) சீர்மை பதிப்பகம் (1) சுகுமாரன் (3) சுந்தர ராமசாமி (2) ஞானக்கூத்தன் (1) தாகூர் (1) தேவதச்சன் (3) தேவதேவன் (16) தேவேந்திர பூபதி (1) நகுலன் (3) நெகிழன் (1) நேர்காண (1) பாபு பிருத்விராஜ் (1) பிப்ரவரி 2022 (2) பிரதீப் கென்னடி (1) பிரமிள் (2) பிரான்சிஸ் (1) பூவன்னா சந்திரசேக (1) பெரு. விஷ்ணுகுமார் (1) பெருந்தேவி (1) பொன்முகலி (1) போகன் சங்கர் (2) மங்களேஷ் டப்ரால் (1) மதார் (3) மரபு கவிதை (6) மனுஷ்யபுத்திரன் (1) மா. அரங்கநாதன் (1) மோகனரங்கன் (1) யவனிகா ஸ்ரீராம் (2) யான் வாங் லீ (1) யுவன் சந்திரசேகர் (3) ரகுவம்சம் (1) ரமாகாந்த் ரத் (1) ராமாயணம் (1) லட்சுமி மணிவண்ணன் (1) லதா (1) லாரா கில்பின் (1) வண்ணதாசன் (2) விக்ரமாதித்யன் (5) வே. நி. சூர்யா (2) வே.நி. சூர்யா (1) வேணு தயாநிதி (1) ஜெ. ரோஸ்ல (1) ஜென் (1) ஷங்கர் ராமசுப்ரமணியன் (1) ஸ்ரீநேசன் (1)

Most Popular

Blog Archive