கவிதையின் நேசக்கரங்கள் - காரை பார்த்திபன்

கவிதை, என்னளவில், மொழியின் ஜீவன் என நினைக்கிறேன். மேலும் கவிதை என்பது ஆழ்ந்த, தாக்கத்தை ஏற்படுத்தும், எண்ணங்களின் வெளிப்பாடு எனவும் கூறலாம். கவிதைகளுக்கு வலு சேர்க்கக்கூடியதாக உவமை, உருவகம், படிமம் போன்றவை இருப்பினும், இவை சார்ந்து இல்லாமலும் கவிதைகளை நல்ல கவிஞனால் படைக்க இயலும். ‘மீறி மீறிப் போய்க்கொண்டே இருப்பவன் கவிஞன்’ என்கிறார் கவிஞர் விக்ரமாதித்யன்.

கவிதைகள் இன்றைய நம் திறமைமிக்க இளையோர்களை மொழி நோக்கி ஈர்க்கவேண்டும். பிற கேளிக்கை சார்ந்தவைகளிலிருந்து இன்றைய இளையோர் விடுபட்டு அகம் நோக்கிய ஒளி பெறுதலுக்கு அவை ஊன்றுகோலாக அமையவேண்டும். ஏனெனில் உண்மையான மகிழ்ச்சி அக ஒளியின் பிரகாசத்தில் இருக்கிறது.

‘கவிதை தான் பேசுவதற்கு கருவியாக ஒரு மனிதனைத் தேர்ந்தெடுத்துக்கொண்டால் – தெய்வம் ஒருவர் மேல் ஆவேசமாக வருவது போல – அவன் முன்னால் வேறு வழியேதும் இல்லை’ என்பார் மலையாளக் கவிஞர் சச்சிதானந்தன். அப்படி கவிதை தேர்ந்தெடுத்துக்கொண்ட எண்ணற்ற கவிஞர்களில் கல்யாண்ஜி முக்கியமானவர்.

சின்னச் சின்ன விஷயங்கள் என நாம் இயல்பு வாழ்க்கையில் ஒதுக்கும் அனைத்தையும் கவனித்து நுட்பமாக தன் கவிதைகளின் வழி கடத்துவதில் தேர்ந்த கவிஞர் கல்யாண்ஜி. அனுபவங்களின் வழியும் இயற்கையிலிருந்து மனிதனை தனிப்படுத்துதல் ஆகாது என்னும் மாபெரும் புரிதலோடும் கவிதைகளை படைத்தவர் / படைத்துக்கொண்டிருப்பவர். செறிவான சொற்களின் கட்டமைப்பால் மொழியின் வளம் குன்றாமல் அழகு பார்ப்பவர்.

1

கோடையில் நீரில்லா நதியைக்கூட எவ்வளவு அழகுபடுத்துகிறார் பாருங்கள் ! 

நாணல் முளைத்த                                                             

தண்ணீர்க்கரை நனைத்து                                                

நதியெல்லாம்                                                                     

மணல் பாய –                                                                  

குளித்துக் கரையேறும்                                                   

கல்மலர்கள்  

‘சமன்’ என்ற கவிதையை வாசிக்கும் எவரும் ஒரு நிமிடம் சுவாசிக்க மறந்துதான் போவார்கள்.

பறிக்க முடியாத                                                             

பட்டுப்பூச்சியை                                                                  

மறக்க –                                              

பறக்கமுடியாத பூக்களை                                                        

வெடுக்கெனக் கிள்ளி                                              

வீசின                                                                     

விரல்கள் 

உயிரின் அழகு பற்றி பேசுமிடத்தே ‘வளையல் பூச்சி’யை பல பெயர்களில் அழைத்து பெயர்கள் அறியாமல் இருப்பதில் இருக்கிறது உயிரின் அழகு என்கிறார். வளையல் பூச்சிக்கு பதில் நம்முடைய மாறும் பிறவிகளைப் பொருத்திப் பார்த்தால் கூடுதல் அழகாகிறது கவிதை.

2

ஆதிப்பெயர்                                                                 

இன்னதென்று தெரியாது                                                                

‘வளையல் பூச்சி’ என்று                                                                  

சாணிதட்டிய தோட்டத்து                                                              

மண்சுவர் ஓரம் சென்ற                                                                 

அதைச் சொன்னோம்.                                                                    

அப்புறம் பின்னால் –                                                                                          

இளைய தங்கச்சி                                                                           

சிமெண்ட் பூசிய                                                                  

புறவாசல் நடைப் பக்கம்                                                         

குச்சியால் தொட்டுச்சுருட்டி                                                                       

‘ரயில் பூச்சி’ என்றாள்.                                                                 

தீபாவளிக்கு முன்பே                                                             

வந்துவிடும் துப்பாக்கியும்                                                                            

பொட்டுவெடிச் சிவப்பும்                                                                 

ராத்திரி மழையில்                                                                   

வாசலில் நனைந்துக் கிடக்க 

‘டிரெயின் பூச்சி’ என்று                                                                  

நர்சரி நாக்கு குதிக்கிறது.                                                                   

மாறும் பெயர்கள் அறியாமல்                                                   

ஓரத்தில் மஞ்சள் புள்ளியும்                                              

உடம்பெல்லாம் கருப்புமாக                                                                      

ஊர்ந்து கொண்டே இருக்கிறது                                             

உயிரின் அழகு 

வாழ்க்கையின் பாரங்களை என்ன செய்துவிட இயலும் சுமப்பதைத் தவிர,

முன் எப்போதுமில்லாத                                                                  

நெருக்கடியின்                                                                    

துண்டு பிரசுரம் போல                                                         

உள்ளங்கை வியர்வைக்குள்                                                                 

திணிக்கப்பட்ட                                                                    

டவுன்பஸ் டிக்கெட்டின்                                                       

கசங்கலைப் பார்த்ததும்                                                         

கஷ்டமாக இருந்தது                                                               

 என்ன செய்வது                                                                  

இறங்கும்வரை                                                            

வைத்திருப்பதை தவிர 

அன்றாடங்களில் அழகியலை தொலைத்துவிட்டு ஓடும் வாழ்க்கை குறித்து 

சூரியனை                                                                  

ஆற்றங்கரை மணலை                                                     

தொட்டாற்சுருங்கிச் செடியை                                                              

பாசஞ்சர் ரயிலின்                                                                   

அற்புத இரைச்சலை                                                            

பட்டாம்பூச்சியை                                                              

தொலைத்துவிட்டு                                              

நாற்காலிக் கால்களில்                                                   

நசுங்கிக்கிடக்கிறது                                                   

சோற்றுக்கலையும் வாழ்க்கை

4

தனது நெடிய பயணத்தில் கல்யாண்ஜி எழுதிக்குவித்த/எழுதிக்குவித்துக் கொண்டிருக்கின்ற கவிதைகள் ஏராளம். அவற்றில் சிலவற்றைக் குறித்தே என் ரசனை சார்ந்து எடுத்தியம்பியுள்ளேன். தொடர்ந்து கல்யாண்ஜியின் கவிதைகளை வாசிக்கும் ஒருவருக்கு அகத்தின் அழகு கூடியவண்ணம் இருக்கும். ‘கவிதை எழுதி கழியுமென் வாழ்வு’ என்னும் விக்ரமாதித்யனின் கவிதை வரி இவருக்கு முற்றிலும் பொருந்தும்.

‘ஒவ்வொரு கவிஞனும் தான் அழிந்தபின்னும் தன் கவிதைகள் வாழ்ந்துக் கொண்டிருக்க வேண்டும் என விரும்புகிறான்’ எனும் சுந்தர ராமசாமியின் வரிகளுக்கேற்ப கல்யாண்ஜியின் படைப்புகள் காலத்தை மீறி வாழும். வாசிப்போரை நோக்கி அவரின் நேசக்கரங்கள் என்றுமே நீண்டபடியே இருக்கும்.

***

வண்ணதாசன் தமிழ் விக்கி பக்கம்

***

Share:

0 comments:

Post a Comment

Powered by Blogger.

புதுக் கவிதை இரண்டு குறிப்புகள் - க.நா. சுப்ரமணியம்

[‘இலக்கிய வட்டம்’ இதழில் ‘புதுக்கவிதை’ என்கிற தலைப்பில் வெளியான இருவேறு குறிப்புகள் இந்த இதழில் இடம்பெறுகின்றன. முதலில் உள்ளது ‘மயன் கவிதைகள...

தேடு

Labels

அபி (11) அரவிந்தர் (1) அறிமுகம் (1) ஆக்டேவியா பாஸ் (2) ஆத்மாநாம் (2) ஆனந்த் குமார் (7) இசை (5) இந்தி (5) இளங்கோ கிருஷ்ணன் (2) உபநிடதம் (1) உரையாடல் (2) எதிர்வின (2) எம். கோபாலகிருஷ்ணன் (1) எஸ். ராமகிருஷ்ண (1) எஹுதா அமிக்ஹாய் (1) ஓக்ட்டாவியோ ப்பாஸ் (1) க. மோகனரங்கன் (4) க.நா. சுப்பிரமணியம் (3) க.நா. சுப்ரமணியம் (1) கட்டுரை (7) கப (1) கமலதேவி (1) கம்பன் (1) கலாப்ரியா (1) கலீல் கிப்ரான் (1) கல்பற்றா நாராயணன் (4) கல்பனா ஜெயகாந்த் (2) கவிதை (171) கவிதையின் மத (1) காரைக்கால் அம்மைய (1) காளிதாசன் (1) காஸ்மிக் தூசி (1) கிம் சின் டே (1) குமரகுருபரன் விருது (5) குன்வர் நாராயண் (1) கைலாஷ் சிவன் (1) கோ யுன் (1) ச. துரை (2) சங்க இலக்கியம் (2) சதீஷ்குமார் சீனிவாசன் (6) சந்திரா தங்கராஜ் (1) சபரிநாதன் (3) சீர்மை பதிப்பகம் (1) சுகுமாரன் (3) சுந்தர ராமசாமி (2) ஞானக்கூத்தன் (1) தாகூர் (1) தேவதச்சன் (4) தேவதேவன் (22) தேவேந்திர பூபதி (1) நகுலன் (3) நெகிழன் (1) நேர்காண (1) நேர்காணல் (1) பாபு பிருத்விராஜ் (1) பிப்ரவரி 2022 (2) பிரதீப் கென்னடி (1) பிரமிள் (3) பிரான்சிஸ் (1) பூவன்னா சந்திரசேக (1) பெரு. விஷ்ணுகுமார் (2) பெருந்தேவி (1) பொன்முகலி (1) போகன் சங்கர் (2) போர்ஹே (1) மங்களேஷ் டப்ரால் (1) மதார் (4) மரபு கவிதை (7) மனுஷ்யபுத்திரன் (1) மா. அரங்கநாதன் (1) மொழிபெயர்ப்பு (12) மோகனரங்கன் (1) யவனிகா ஸ்ரீராம் (2) யான் வாங் லீ (1) யுவன் சந்திரசேகர் (15) யூமா வாசுக (2) ரகுவம்சம் (1) ரமாகாந்த் ரத் (1) ராமாயணம் (1) ரியோகான் (1) லட்சுமி மணிவண்ணன் (2) லதா (1) லாரா கில்பின் (1) வ. அதியம (1) வண்ணதாசன் (2) வாசகர் (1) வாலஸ் ஸ்டீபன் (1) விக்ரமாதித்யன் (6) விவாத (1) வீரான்குட்டி (3) வே. நி. சூர்யா (5) வே.நி. சூர்யா (6) வேணு தயாநிதி (1) ஜெ. ரோஸ்ல (1) ஜெயமோகன் (2) ஜென் (1) ஷங்கர் ராமசுப்ரமணியன் (1) ஷாஅ (1) ஷெல்லி (1) ஸென் கவிதை (1) ஸ்ரீநேசன் (1)

Most Popular

Blog Archive