றாம் சந்தோஷ் கவிதைகள் - இரா.பூபாலன்

 அந்நியனின் காதலி 

நவீன கவிதைகளின் முன்னால் நவீன பாடுபொருட்கள் பரந்து விரிந்துகிடக்கின்றன. தேய்வழக்கில் உள்ளவற்றை மீண்டும் தேடி எடுத்துவர அவசியமற்றுப் போகிறது. றாம் சந்தோஷின் இந்தக் கவிதை எப்போதும் நம்முடன் இன்னொரு உடலாக ஒட்டியபடி இருக்கும் நவீன உபகரணமான அலைபேசியைப் பற்றியது. எப்போதும் அனிச்சையாக நம் கரங்களில் ஏந்தியிருக்கும் அலைபேசி எனும் நவீன கருவி நம் வாழ்வின் எல்லா திசைகளிலும் நின்றபடி நம் விழித்திரையை மறைக்கிறது.  நமது காலம் அதன் காலடியில் கிடக்கிறது. அது தின்றுவிட்டு மிச்சம் வைக்கும் காலத்தைத்தான் நாம் லெளகீக வாழ்க்கைக்கும் இன்ன பிறவற்றுக்கும் பயன்படுத்திக்கொள்கிறோம் என்று சொல்கிறது இந்தக் கவிதை.

அலைபேசித் திரையில் ஆழ்ந்து கிடக்கும் விழிகளை சற்று உயர்த்தி அவ்வப்போது இந்த ஊரின் அழகையும் பார்க்கிறேன் ஆனால் அது அலைபேசியில் பார்ப்பது போல அழகாக இல்லை என்று பேசுகிறது இந்தக் கவிதை. சுயபகடியுடன், சுய விமர்சனத்தைச் செய்து கொள்ளும் ஒருவனுக்கான கவிதை இது. அலைபேசியின் காலடியில் கிடத்தப்பட்டிருக்கிற நம் பொன்னான காலங்கள் கரைந்து வீணாகிக் கொண்டிருக்கின்றன என்பதை நேரடியாக ஒரு பிரசங்கம் போலச் சொல்லாமல் வாசகனுக்கு உணரும் படி ஒரு மென் முனுமுனுப்பாக இந்தக் கவிதையின் குரல் ஒலிக்கிறது.

***

என் காதற் கைப்பாவாய்

-

நான் உன் திரையினில் மட்டுமே வாழத்தகுந்த

உயிரியாகிவிட்டேன்

எப்போதும் என் கரங்கள் அனிச்சையாய்ப்

பற்றிக்கொண்டே இருக்கின்றன

உன்னை

நீ மிச்சம் வைக்கும் காலம்தான்

எனது இதர லெளகீக வாழ்க்கைக்கானது

நீதான் அவளைக் கண்டறிந்தாய்

எனக்கு அவள் என்பது நீதான்

அவளுக்கு நான் என்பதும் நீயேதான்

அவளும் நானும் இன்னும் ஒருமுறை கூட

நேரில் சந்தித்துக்கொண்டதில்லை

என்று சிலர் புகார் கூறுகின்றனர்

அவர்களுக்கு இன்னுமா தெரியவில்லை

என் கண்களின் விழித்திரைகளே நீதான் என்று

உன் திரையில் ஆழ்ந்துபோன என் பார்வையின் மீதியை

அவ்வப்போது மீட்டு இந்த ஊரையும் பார்க்கிறேன்

உன் ஊடாய்க் கண்டதை விடவும்

அத்தனை வனப்பானது ஒன்றுமில்லை

கண்ணே மணியே ஃபோனே

***

அந்நியர்களின் சகவாசம் எனும் றாம் சந்தோஷின் இன்னுமொரு கவிதை அந்நியன் எனும் சொல்லுக்குள் சுழல்கிறது. அந்நியன் எனும் சொல்லை தன்னை, தன்னைச் சுற்றிலுமுள்ள யாவரையும் சுட்டிச் சுழல்கிறது. இதுவும் நவீன வாழ்வின் அழுத்தத்தில் விளைந்த கவிதைதான். நவீன வாழ்வின் பிரதியாகத்தான் இந்தக் கவிதையைப் பார்க்க வேண்டியுள்ளது. யாரும் யாருக்கும் அந்நியமில்லை என்றொரு காலம், யாரும் யாருக்கும் தூரமில்லை என்றொரு காலம் இருந்தது. நவீன வாழ்வில் மனிதர்கள் இயற்கையைவிட்டு, உறவுகளை விட்டு, மனிதர்களை விட்டு தூரமானார்கள். தற்போதோ தங்களைத் தாங்களே விட்டு தூரமாகி நிற்கிறார்கள். யாரும் யாருடனும் இல்லை எனும் நிலைக்கு வந்து வசதியாக வாழ்கிறோம். அதன் பிரதிபலிப்பாகவும் இருக்கிறது இந்தக் கவிதை...

மேலும் கவிதை இப்படி முடிகிறது

"உன் கண்ணீரை விரையமாக்காதே என் புதிய சிட்டே

ஒரு புதிய அந்நியன் சுவைக்க

அதைப் பத்திரப்படுத்திக்கொள்ள

 வேண்டியுள்ளது நீ"

நம் கண்ணீரை யாரோ சுவைக்க வேண்டியிருப்பதான கட்டாயத்தில் நகர்த்தி வரப்பட்டிருக்கிறது வாழ்க்கை. சிட்டே எனும் குறியீட்டில் இந்த வரிகளை பெண்ணுக்கானவையாகக் கொண்டால் இன்னும் கவிதைக்கு அழுத்தம் கூடுகிறது. பெண்ணின் கண்ணீரைச் சுவைக்க எப்போதும் ஓர் அந்நியன் அவளது வாழ்க்கைக்குள் நுழைகிறான். அதுவரை இருந்த அவளது வாழ்க்கையைக் கலைத்துப் போடுகிறான். பிறந்தது முதல் தேக்கிவைத்திருந்த மொத்தக் கண்ணீரையும் ஒரு பேரருவியென வடிய விடுகிறான். பெண் வாழ்வின் பேரவலத்தைச் சொல்கிறதாக இந்தக் கவிதை கடைசி வரிகளில் எடுக்கும் உரு திடுக்கிட வைக்கிறது. சொற்களுக்குள் சுழன்ற படியிருந்த கவிதையைக் கச்சிதமாக முடித்துவைக்கிறது.

***

அந்நியர்கள் சகவாசம்

 ஓர் அந்நியன் என் பெயரைக் கேட்டான்

ஓர் அந்நியனுக்கு உன்  பெயர் ஏற்கனவே தெரிந்திருந்தது

ஓர் அந்நியன் ஒரு கதை அளந்தான்

ஓர் அந்நியள் என் மீதும் உன் மீதுமாய்

மோகம் கொண்டாள்

அவள் நம் சிநேகிதி அவளை யாமும் காதலித்தோம்

அந்நியர்களுள் ஓர் அந்நியன்

இதோ இன்று நம் அறை அடைகிறான்

திரை விலக்கினான்

அவனும் அந்நியன்

அவனை என்ன செய்வது

சென்று வா எனத் தேற்றி அனுப்பும் போது

அவன் குரலுடைந்து அழுகிறான்

அவன் அந்நியன் நான் அந்நியன் நீயும் அந்நியன்

நாங்களுமே அந்நியருள் அந்நியர்கள்

நம்மைப் போலொரு பிறிதொருவன் இல்லாமல் இல்லை

இது ஊர்ஜிதம்

உன் கண்ணீரை விரையமாக்காதே என் புதிய சிட்டே

ஒரு புதிய அந்நியன் சுவைக்க

அதைப் பத்திரப்படுத்திக்கொள்ள

 வேண்டியுள்ளது நீ

***

“ இரண்டாம் பருவம் “ தொகுப்பிலிருந்து,

றாம் சந்தோஷ் : இயற்பெயர் சண்முக . விமல் குமார். தனது இரண்டு பெயர்களிலும் எழுதிவரும் இவர், தொல்காப்பியக் கோட்பாடுகள் தொடர்பான ஆய்வை மேற்கொண்டு வரும் தமிழ்த்துறை மாணவர். வாணியம்பாடியை அடுத்த உதயேந்திரத்தில் பிறந்த றாம், கடந்த ஏழு ஆண்டுகளுக்கும் மேலாக ஆந்திர மாநிலம் குப்பம் திராவிடப் பல்கலைக்கழக விடுதியில் வசித்து வருகிறார். 'சொல் வெளித் தவளைகள்' என்ற தனது முதல் கவிதைத் தொகுப்பிற்காக ‘ஆத்மாநாம் விருது' (2020) பெற்றவர். 'மேலும்' அறக்கட்டளையும் இவரை அங்கீகரித்துள்ளது. இவருடைய இரண்டாவது கவிதைத் தொகுப்பு 'இரண்டாம் பருவம்' சமீபத்தில் வெளிவந்துள்ளது. தெலுங்கிலிருந்து மொழிபெயர்ப்புகள் செய்து வருகிறார்; மற்பாவைகள் செய்வதில் ஈடுபாடு கொண்டவர். மின்னஞ்சல் : tramsanthosh@gmail.com

***

தொகுப்பைப் பெற தொடர்புக்கு : எதிர் வெளியீடு , 99425 11302

கவிதை தேர்வு மற்றும் குறிப்புகள்: இரா. பூபாலன்

***

Share:

0 comments:

Post a Comment

Powered by Blogger.

நெல்லை சந்திப்பு - மதார்

நெல்லையில் ஒவ்வொரு மாதமும் கடைசி சனிக்கிழமைதோறும் இலக்கியச் சந்திப்பை கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக நடத்தி வருகிறோம். ஆகஸ்ட் 2024 ல் கவிஞர்...

தேடு

Labels

அபி (11) அரவிந்தர் (1) அறிமுகம் (1) ஆக்டேவியா பாஸ் (2) ஆத்மாநாம் (2) ஆனந்த் குமார் (7) இசை (5) இந்தி (5) இளங்கோ கிருஷ்ணன் (2) உபநிடதம் (1) உரையாடல் (2) எதிர்வின (2) எம். கோபாலகிருஷ்ணன் (1) எம்.எஸ். கல்யாணசுந்தரம் (1) எஸ். ராமகிருஷ்ண (1) எஹுதா அமிக்ஹாய் (1) ஓக்ட்டாவியோ ப்பாஸ் (1) க. மோகனரங்கன் (5) க.நா. சுப்பிரமணியம் (3) க.நா. சுப்ரமணியம் (3) கட்டுரை (7) கப (1) கமலதேவி (1) கம்பன் (1) கலாப்ரியா (1) கலீல் கிப்ரான் (2) கல்பற்றா நாராயணன் (4) கல்பனா ஜெயகாந்த் (2) கவிதை (181) கவிதையின் மத (1) காரைக்கால் அம்மைய (1) காரைக்கால் அம்மையார் (1) காளிதாசன் (1) காஸ்மிக் தூசி (1) கிம் சின் டே (1) குமரகுருபரன் விருது (5) குன்வர் நாராயண் (1) கைலாஷ் சிவன் (1) கோ யுன் (1) ச. துரை (2) சங்க இலக்கியம் (2) சதீஷ்குமார் சீனிவாசன் (6) சந்திரா தங்கராஜ் (1) சபரிநாதன் (3) சீர்மை பதிப்பகம் (1) சுகுமாரன் (3) சுந்தர ராமசாமி (2) ஞானக்கூத்தன் (1) தாகூர் (1) தேவதச்சன் (4) தேவதேவன் (24) தேவேந்திர பூபதி (1) நகுலன் (3) நெகிழன் (1) நேர்காண (1) நேர்காணல் (1) பாபு பிரித்விராஜ் (1) பாபு பிருத்விராஜ் (1) பிப்ரவரி 2022 (2) பிரதீப் கென்னடி (1) பிரமிள் (3) பிரான்சிஸ் (1) பூவன்னா சந்திரசேக (1) பெரு. விஷ்ணுகுமார் (2) பெருந்தேவி (1) பொன்முகலி (1) போகன் சங்கர் (2) போர்ஹே (1) மங்களேஷ் டப்ரால் (1) மதார் (5) மரபு கவிதை (7) மனுஷ்யபுத்திரன் (1) மா. அரங்கநாதன் (1) மொழிபெயர்ப்பு (12) மோகனரங்கன் (1) யவனிகா ஸ்ரீராம் (2) யான் வாங் லீ (1) யுவன் சந்திரசேகர் (15) யூமா வாசுக (2) ரகுவம்சம் (1) ரமாகாந்த் ரத் (1) ராமாயணம் (1) ரியோகான் (1) லட்சுமி மணிவண்ணன் (2) லதா (1) லாரா கில்பின் (1) வ. அதியம (1) வண்ணதாசன் (2) வாசகர் (1) வாசிப்பு (1) வாலஸ் ஸ்டீபன் (1) விக்ரமாதித்யன் (6) விவாத (1) வீரான்குட்டி (3) வே. நி. சூர்யா (5) வே.நி. சூர்யா (6) வேணு தயாநிதி (1) ஜெ. ரோஸ்ல (1) ஜெயமோகன் (2) ஜென் (1) ஷங்கர் ராமசுப்ரமணியன் (1) ஷாஅ (1) ஷெல்லி (1) ஸென் கவிதை (1) ஸ்ரீநேசன் (1)

Most Popular

Blog Archive