ச. துரை கவிதைகள் - ஆனந்த் குமார்

நவீனத்துவதிற்கு பின் கவிதைகளில் பரிசு என்பது ஒரு முக்கியமான படிமமாக உருவாகி வந்திருக்கிறது. கிடைக்கபெறும்  பரிசுகளின் மேலுள்ள தீராத குழந்தையின் வியப்பு கவிஞனுக்கு எப்போதுமே பிடித்தமான ஒன்றாய் இருக்கிறது.  துரையின் இந்த இரண்டு கவிதைகள் இரு வேறு பரிசுகள் பற்றி பேசுகின்றன. ஒன்று, சரிசெய்துகொள்ளவே முடியாத இந்த உலகம் ரத்தம் வடிய வடிய தன்னிலிருந்து எடுத்து தரும் பரிசு. ஒரு பக்கம் அதையும் தொலைத்துவிட்டு ஏங்கும் மிகச் சாதாரணனாக இருப்பவன்; இன்னொரு பக்கம் இவ்வுலகம் வழங்கும் ஒவ்வொன்றிலும் தனக்கான அதிசிறந்த பரிசை கண்டடைகிறான்.  அப்பரிசே பாம்புக் குஞ்சுகளாக நெளிந்து உயிர் பெறும்போது இக் கவிதை வேறொரு தளத்திற்கும் நகர்கிறது.
 
***

கர்தோன்

இன்று முழுக்க ஏனோ கர்தோன் நினைவு

அவன் எனக்கு கொடுத்த சங்குமுள்ளை

எங்கு வைத்தேன் என நினைவில்லை

கர்தோன் ஒரு நாய்

கடைசியாக அவனைப் பார்த்தபோது

நான் சரியாகமாட்டேன் என

கண்களால் சொன்னான்

இங்கு யாரும் சரியானவர்கள் இல்லை

கர்தோன் என நானும் சொன்னேன்

பிறகு தன் தலையை குப்புற கவிழ்த்தி

தொண்டையிலிருந்து

இரத்தம் வடிய வடிய சங்குமுள்ளொன்றை

துப்பி எனக்கு பரிசாகக் கொடுத்தான்
மகிழ்ச்சியான முடிவு

-

உங்களை நீங்கள்தான்

தெளிவுபடுத்திக்கொள்ள வேண்டும்

அன்று ரசீதுகளை திருப்பி பெற

பல்பொருள் அங்காடிக்குச் சென்றேன்

கடைக்காரர் இலவச இணைப்புச் சீட்டொன்றை

தீட்டச்சொன்னார்

அதில் எனக்கு கம்பி சுருள்களால்

ஆன பாத்திர தேய்ப்பான் விழுந்தது

அவர் என்னை பெருமையாக பார்த்து

உனக்கிது விழுந்ததில் பெருமகிழ்ச்சி என்றார்

நான் எதுவும் சொல்லவில்லை

அதை அப்படியே தூக்கி வந்து

சமையல் மேஜையின் மேல் வைத்தேன்

அடர்ந்த அந்த வெளீர் கம்பிச்சுருள்கள்

மெல்லிய உடல்வாகுள்ள

பாம்புக் குஞ்சுகளைப்போல நெளிகின்றன

இதனால் எந்த பாத்திரத்தையும்

தேய்க்கக் கூடாதென முடிவெடுத்து விட்டேன்.
 
***
 
உடலை விலகி நின்று பார்க்கும் அல்லது உடல் வழியாக மட்டுமே உலகைப் பார்க்கும் கோணங்கள் கவிதையில் எழுதப்பட்டுவிட்டன. தனது உடலின் பாகங்களையே தனித்த இருப்பாக மனமிறங்கி காண்பதென்பது மொத்தமாக வேறொரு கருணையின் வடிவாக இந்த கவிதையில் வெளிவருகிறது. இங்கு வலியே குழந்தையாக கொஞ்சப்படுகிறது. எல்லா பிரார்த்தனைகளும் கைவிட்டுவிட்ட ஒன்றை, எல்லா வாய்ப்புகளும் தவறிப்போய்விட்ட ஒன்றை ஒரு அன்னை மட்டுமே இப்படி அள்ளி அணைத்துக்கொள்ள முடியும்.  அசையாத தனது காலை ஒரு குழந்தையென அவளால் கொஞ்ச முடிகிறது.  அதற்கு மூச்சு முட்டுவது அவளுக்குத் தெரிகிறது, அவள் கொஞ்சக்கொஞ்ச காலும் கேட்டுக்கொள்கிறது. அன்னை கொஞ்ச தேறாத பிள்ளை உண்டா என்ன.

மூச்சு விடு காலே

-

"மிக மிகக் கடினமாய் இருந்தாலும் சரி

கொஞ்சம் சிரமப்பட்டாவது  மூச்சுவிடு காலே"

அவள் எப்போதும் தனது கால்களிடம்

இப்படித்தான் கெஞ்சுவாள்

கால்களுக்கு மூக்கு இருக்கிறது என்பதை சமீபத்தில்தான் கண்டறிந்தாள்

தனது எல்லாம் வல்ல வார்த்தைகள் இறந்த பிறகு தனது எல்லாம் வல்ல இறைவன் கைவிட்ட பிறகு

அவளுக்கு வேறுவழி தெரியவில்லை

தனது காலிலே விழுந்துவிட்டாள்

"கொஞ்சம் மூச்சு விடு காலே"

நீ மூச்சு விட விடத்தான் எனது

பிரம்மை கலைகிறது

என்னுடைய எல்லா பிராத்தனைகளும்

ஏதேன் தோட்டத்தின் பறிக்கப்பட்ட பாவங்கள் எனது பிஞ்சுக்காலே , பட்டுக்காலே கொஞ்சம் மூச்சு விடு

இந்த மரத்த காலால் இனி

எதை  உதைக்கப் போகிறேன்

சுவர்களின் மேல் பூனை தாவுகிறது

முழுமை பெறாத சித்திரங்கள்

தங்களைத் தாங்களே வரைகின்றன

தூரத்தின் இசை ரயிலாய் இடிகிறது

விண்மீனும் மழையும்

ஒருசேர பொழியும் இரவாகின்றன

தயவுசெய்து மூச்சு விடு காலே!

ஆஹா!

அப்படித்தான் நன்றாக இழுத்து மூச்சுவிடு

நீ தேறுகிறாய் காலே

நீ விடும் மூச்சு

எனக்கு சகலத்தையும் காண்பிக்கிறது

என்னால் உன்னைத் தூக்க முடிகிறது ஒரு தேன்சிட்டு போல நீயிடும் ஓசை கேட்கிறது என கொஞ்சியவள்

அன்றிரவும் தனது கால்களைத்

தூக்கி அவ்வளவு மென்மையான

அந்த தலையணையின் மேல் வைத்தாள்

இப்போது அவளுக்குத் அந்தத் தலையணைதான் மகன்.
 
***
 
ச. துரை ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மண்டபம்  கிராமத்தை சேர்ந்தவர். இளங்கலை கணினி அறிவியல் படித்த இவர் தனது சொந்த ஊரில் பலசரக்கு கடை  நடத்தி வருகிறார். இவரது முதல் கவிதை தொகுப்பு ‘மத்தி’ 2019 ஆம் ஆண்டுக்கான குமரகுருபரன்- விஷ்ணுபுரம் விருது பெற்றது. இவரது புதிய கவிதை தொகுப்பு ‘சங்காயம்’ தற்போது வெளிவந்துள்ளது.

கவிதை தேர்வு: சபரிநாதன்

குறிப்பு: ஆனந்த் குமார்
 
***Share:

0 comments:

Post a Comment

Powered by Blogger.

ஆகாய மிட்டாய் - கல்பற்றா நாராயணன் கவிதை

ஆகாய மிட்டாய் ந ண்பனின் மகளின் பெயர் மழை என்று தெரிந்தபோது மனம் தெளிந்தது சாறாம்மாவுக்கும் கேசவன்நாயர்க்கும் இருந்த துயரம் சற்று பிந்தியானால...

தேடு

Labels

அபி (11) அரவிந்தர் (1) அறிமுகம் (1) ஆக்டேவியா பாஸ் (2) ஆத்மாநாம் (2) ஆனந்த் குமார் (7) இசை (4) இந்தி (5) இளங்கோ கிருஷ்ணன் (2) உபநிடதம் (1) உரையாடல் (2) எம். கோபாலகிருஷ்ணன் (1) எஸ். ராமகிருஷ்ண (1) எஹுதா அமிக்ஹாய் (1) ஓக்ட்டாவியோ ப்பாஸ் (1) க. மோகனரங்கன் (4) கட்டுரை (6) கப (1) கமலதேவி (1) கம்பன் (1) கலாப்ரியா (1) கலீல் கிப்ரான் (1) கல்பற்றா நாராயணன் (4) கல்பனா ஜெயகாந்த் (1) கவிதை (156) கவிதையின் மத (1) காரைக்கால் அம்மைய (1) காளிதாசன் (1) காஸ்மிக் தூசி (1) கிம் சின் டே (1) குமரகுருபரன் விருது (5) குன்வர் நாராயண் (1) கைலாஷ் சிவன் (1) கோ யுன் (1) ச. துரை (2) சங்க இலக்கியம் (2) சதீஷ்குமார் சீனிவாசன் (6) சந்திரா தங்கராஜ் (1) சபரிநாதன் (3) சீர்மை பதிப்பகம் (1) சுகுமாரன் (3) சுந்தர ராமசாமி (2) ஞானக்கூத்தன் (1) தாகூர் (1) தேவதச்சன் (4) தேவதேவன் (18) தேவேந்திர பூபதி (1) நகுலன் (3) நெகிழன் (1) நேர்காண (1) நேர்காணல் (1) பாபு பிருத்விராஜ் (1) பிப்ரவரி 2022 (2) பிரதீப் கென்னடி (1) பிரமிள் (2) பிரான்சிஸ் (1) பூவன்னா சந்திரசேக (1) பெரு. விஷ்ணுகுமார் (1) பெருந்தேவி (1) பொன்முகலி (1) போகன் சங்கர் (2) போர்ஹே (1) மங்களேஷ் டப்ரால் (1) மதார் (3) மரபு கவிதை (7) மனுஷ்யபுத்திரன் (1) மா. அரங்கநாதன் (1) மொழிபெயர்ப்பு (12) மோகனரங்கன் (1) யவனிகா ஸ்ரீராம் (2) யான் வாங் லீ (1) யுவன் சந்திரசேகர் (15) யூமா வாசுக (2) ரகுவம்சம் (1) ரமாகாந்த் ரத் (1) ராமாயணம் (1) ரியோகான் (1) லட்சுமி மணிவண்ணன் (2) லதா (1) லாரா கில்பின் (1) வ. அதியம (1) வண்ணதாசன் (2) வாசகர் (1) வாலஸ் ஸ்டீபன் (1) விக்ரமாதித்யன் (6) வீரான்குட்டி (1) வே. நி. சூர்யா (5) வே.நி. சூர்யா (6) வேணு தயாநிதி (1) ஜெ. ரோஸ்ல (1) ஜெயமோகன் (2) ஜென் (1) ஷங்கர் ராமசுப்ரமணியன் (1) ஷெல்லி (1) ஸென் கவிதை (1) ஸ்ரீநேசன் (1)

Most Popular

Blog Archive