இருள் வெளியில் எரியும் சொற்கள் 2 - கடலூர் சீனு

முந்தைய கட்டுரையில் சதீஷ்குமார் சீனிவாசனின் ‘உன்னை கைவிடவே விரும்புகிறேன்’ என்ற முதல் கவிதை தொகுப்பை முன்வைத்து அவற்றில் உள்ள  கவிதைகளை எடுத்து பேசினேன். இந்த தொகுப்புக்கு பிறகான கவிதைகளில் என் கட்டுரையில் குறிப்பிட்ட வகையில் அமைந்த மூன்று கவிதைகள்  கீழே

ஆகா என்றொரு அசைவு

சரியாக அதை சொல்லனும் எனில்

ஆகா என்றுதான் சொல்ல முடியும்

இந்தப் பத்து வருடத்தில்

திருப்பூரில் நான் கண்ட முதல் அசைவு போல இருந்தது அது

வளர்மதி ஸ்டாப்

பாலம் கடக்கும் போது

சரியாகப் பின்னாலிருந்து அவளைத் தொட்டான் அவன்

மீனை நீர் தொடுவது மாதிரி

ஒரு கணம் திரும்பி

தலையை இரு கைகளாலும் தாங்கி அதிசயித்தாள்

இந்த நகரத்தில் இப்போதைக்கு அவள் தான் அழகு என மலர்ந்தாள்

எனக்கு அதை கண்டதும்

’ஆகா’ என்று இருந்தது

இந்த ஆகா இல்லாமல்தானே

இதெல்லாம் சீரழிந்தது

இந்த ஆகாவுக்காகத்தானே

கனவுகள் துடித்தன

இந்த ஆகா இல்லாமல்தானே

உடல்கள் உடல்களாக மட்டுமே

அறை திரும்பின தனித்திருந்தன

அவர்களுக்குள் என்ன என்று கூட

எனக்குத் தெரியாது

இப்போது சொற்களுக்குள் நடக்க ஆரம்பித்திருந்தார்கள்

ஆனால்

அவளுடைய இன்றைய அற்புதம் அவன் தான்

இந்த நகரத்தின் இன்றைய அசைவு அந்த ஆகா தான்.

*

கொஞ்சம் இசையின் கவி உலகுக்கு நெருங்கி வரும் கவிதை. எல்லாமே வழக்கப்படி நடக்கும் சக்கையான மற்றொரு தினம். அதில் நிகழும் சின்னதொரு உடைப்பு. அந்த நாளையே உயிர்ப்புள்ளதாக மாற்றிவிடுகிறது. பிழைத்துக் கிடக்கப் போராடி யந்திரம் என்றாகிவிட்ட வெறும் உடலில்  வாழும் தருணம் ஒன்று வந்து உயிரும் உணர்வும் நிகழும் கணம். 

அழைக்கும் தீ

காற்றில் அலையும்

ஒரு சுடர்போல் 

தீண்டு என ஏங்குகிறாய்

தீண்டிவிட்டு விலக முடிந்த

தீயா இதுவென

யோசித்தவன்

குளத்தில் குதிக்கும் சிறுவன்போல்

அச்சுடரில் ஆழக் குதிக்கிறேன்

சுடர் அணையும்வரை

அத்தனை வெளிச்சம்

இருளென்ற ஒன்று

இல்லவே இல்லை என்பது மாதிரி.

*

முதல் வாசிப்பில் ஒரு காதல் கவிதையாக இதை வாசிக்கலாம் என்றாலும் இந்த மொழிக்கட்டுமானமும் உணர்வுக் கட்டுமானமும் அளிக்கும் கற்பனை சாத்தியம் இன்னமும் ஆழம் கொண்டது. 

விஷ்ணுபுரம் நாவலில் காமம் வழியே மெய்வழி காண்பவனாக மிகுந்த சஞ்சலம் கொண்டவனாக பிங்கலன் இருப்பான். அவன் யாக நெருப்புக்குள் விரலை விடுபவனாக அறிமுகம் ஆவான். பின்னர் வளர்ந்து வளர்ந்து இறுதியில் ஒரு கணமும் தயங்காது பச்சை நெருப்பில் பாய்ந்து விழுந்து காணாமல் போய் முடிவான். பிங்கலனின் அல்லது அத்தகு ஆத்மீக தவிப்பின் மற்றொரு கவிதை வெளிப்பாடாக மேற்கண்ட கவிதையை வாசிக்க முடியும்.

நீ மற்றும் நான்

நீ ஆம்பவிலை

நானதில் வழிந்தோடும் எத்தனையோ  திவலைகளில் ஒரு திவலை

நீ தரு

நான் உன்னில் துளிர்த்து பச்சையத்தில் ஒளிர்ந்து

பழுப்பேறி அகாலத்தில் உதிரும் எவ்வளவோ இலைகளில் ஓர் இலை

நீ வான்

நான் உன்னில் அலைந்து தடயமற்று மறையும் கோடிப் பறவைகளில் ஒரு பறவை

நீ அண்டவெளி

நானதில் எரிந்துதிரும் எண்ணிறந்த மீன்களில் ஒரு மீன்

நீ கடல்

நானதில் ஜனித்து

அலைந்தலைந்தோய்ந்து மரிக்கும் கோடி கோடி அலைகளில் ஓரலை

நீ காளி

நானுன் கழுத்தில் முண்டமற்று விழிதிறந்து கிடக்கும் தலைகளில் ஒரு தலை.

*

இலை, தரு, வானம், பேரண்டம் என்று விரியும் இதன் வைப்புமுறை வழியே எழும் காளியின் விஸ்வரூப சித்திரம் தீவிர கவிதைகள் அடைந்த வெகு சில அபூர்வங்களில் ஒன்று.

மொழியால், கூறுமுறையால், படிமங்களால்,  தனித்துவமான உள்ளடக்கத்தால், உண்மையான உணர்வுகளால், அவற்றின் ஆத்மீகமான பெருமதியால் குறிப்பிடத்தக்க கவிதைகளை எழுதி தீவிரத் தமிழ் இலக்கியக் களத்துக்குள் அடி எடுத்து வைத்திருக்கும், இவ்வாண்டுக்கான குமரகுருபரன் விருது பெரும் திரு. சதீஷ்குமார் சீனிவாசன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

***

சதீஷ்குமார் சீனிவாசன் தமிழ் விக்கி பக்கம்

***

Share:

0 comments:

Post a Comment

Powered by Blogger.

ஆகாய மிட்டாய் - கல்பற்றா நாராயணன் கவிதை

ஆகாய மிட்டாய் ந ண்பனின் மகளின் பெயர் மழை என்று தெரிந்தபோது மனம் தெளிந்தது சாறாம்மாவுக்கும் கேசவன்நாயர்க்கும் இருந்த துயரம் சற்று பிந்தியானால...

தேடு

Labels

அபி (11) அரவிந்தர் (1) அறிமுகம் (1) ஆக்டேவியா பாஸ் (2) ஆத்மாநாம் (2) ஆனந்த் குமார் (7) இசை (4) இந்தி (5) இளங்கோ கிருஷ்ணன் (2) உபநிடதம் (1) உரையாடல் (2) எம். கோபாலகிருஷ்ணன் (1) எஸ். ராமகிருஷ்ண (1) எஹுதா அமிக்ஹாய் (1) ஓக்ட்டாவியோ ப்பாஸ் (1) க. மோகனரங்கன் (4) கட்டுரை (6) கப (1) கமலதேவி (1) கம்பன் (1) கலாப்ரியா (1) கலீல் கிப்ரான் (1) கல்பற்றா நாராயணன் (3) கல்பனா ஜெயகாந்த் (1) கவிதை (146) கவிதையின் மத (1) காரைக்கால் அம்மைய (1) காளிதாசன் (1) காஸ்மிக் தூசி (1) கிம் சின் டே (1) குன்வர் நாராயண் (1) கைலாஷ் சிவன் (1) கோ யுன் (1) ச. துரை (2) சங்க இலக்கியம் (2) சதீஷ்குமார் சீனிவாசன் (6) சந்திரா தங்கராஜ் (1) சபரிநாதன் (3) சீர்மை பதிப்பகம் (1) சுகுமாரன் (3) சுந்தர ராமசாமி (2) ஞானக்கூத்தன் (1) தாகூர் (1) தேவதச்சன் (4) தேவதேவன் (18) தேவேந்திர பூபதி (1) நகுலன் (3) நெகிழன் (1) நேர்காண (1) நேர்காணல் (1) பாபு பிருத்விராஜ் (1) பிப்ரவரி 2022 (2) பிரதீப் கென்னடி (1) பிரமிள் (2) பிரான்சிஸ் (1) பூவன்னா சந்திரசேக (1) பெரு. விஷ்ணுகுமார் (1) பெருந்தேவி (1) பொன்முகலி (1) போகன் சங்கர் (2) போர்ஹே (1) மங்களேஷ் டப்ரால் (1) மதார் (3) மரபு கவிதை (7) மனுஷ்யபுத்திரன் (1) மா. அரங்கநாதன் (1) மொழிபெயர்ப்பு (10) மோகனரங்கன் (1) யவனிகா ஸ்ரீராம் (2) யான் வாங் லீ (1) யுவன் சந்திரசேகர் (15) யூமா வாசுக (2) ரகுவம்சம் (1) ரமாகாந்த் ரத் (1) ராமாயணம் (1) ரியோகான் (1) லட்சுமி மணிவண்ணன் (2) லதா (1) லாரா கில்பின் (1) வ. அதியம (1) வண்ணதாசன் (2) வாசகர் (1) வாலஸ் ஸ்டீபன் (1) விக்ரமாதித்யன் (6) வே. நி. சூர்யா (2) வே.நி. சூர்யா (1) வேணு தயாநிதி (1) ஜெ. ரோஸ்ல (1) ஜெயமோகன் (1) ஜென் (1) ஷங்கர் ராமசுப்ரமணியன் (1) ஷெல்லி (1) ஸென் கவிதை (1) ஸ்ரீநேசன் (1)

Most Popular

Blog Archive