பிரிந்தோடும் காலம் - ஜி.எஸ்.எஸ்.வி.நவீன்

சிவஞானபோதத்தின் சூத்திரங்கள் வரிசையாக நம் ஆன்மா அறியும் ஒவ்வொன்றாக சொல்லி வருகிறது. சத்து, அசத்து என்ற இரண்டினை பிரித்தறியும் அறிவை பெற்ற ஆன்மா எனச் சொல்கிறது. இங்கிருந்து சிவஞானபோதத்தின் மற்ற சூத்திரங்களை வாசிக்கும் போது அதில் பயின்று வரும் ஆன்மா தன்னுள் ஒவ்வொன்றாக அடைந்து அதன்பின் ஒவ்வொன்றாய் துறந்து இறுதியில் தன்னையே துறந்து மெய் ஞானத்தை அடைவதைப் பற்றிச் சொல்கிறது.

“செம்மலர் நோன்தாள் சேரல் ஒட்டா

அம்மலங் கழீஇ அன்பரொடு மரீஇ”

என்றே இறுதி சூத்திரம் சொல்கிறது.

அபியின் பிரிவினை கவிதையை வாசிக்கும் போது அந்த மெய் ஞானத்தின் கவிதை வடிவாகவே அதனை வாசிக்க தோன்றுகிறது. “புற்றுக்குள் விரையும்; பெயர் உரித்த; ஒரு பசி; நீ உன் தவமும் கலைவாய்” என்னும் இடம் சுட்டி நிற்பது “அம்மலங் கழீஇ” என்னும் ஞானத்தை தான்.

வாழ்வின் சாரமென்பது ஒவ்வொன்றாய் அடைந்து அடைந்து, அடைவன முடிந்து முன் ஒவ்வொன்றாய் பிரிந்து நாமும் நம் தவமும் இல்லாமல் ஆன பின்பு எஞ்சி நிற்கும் ஒன்றை அடைவது தான். அபியின் கவிதைகள் எல்லாம் அந்த எஞ்சி நிற்கும் அருவமான ஒன்றை தான் தேடுகின்றன. இந்த கவிதையில் இருந்து அபியின் மற்ற கவிதைகளை வாசிக்கும் போது அபி தன் கவிதையில் வாழ்வில் மெய் ஞானிகள் தேடும் அதே வாழ்க்கை தரிசனத்தை தான் தன் கவிதையில் தேடுகிறார் என்று தோன்றுகிறது.

***

பிரிவினை

வார்த்தைகள்

பிறந்த மேனியிலேயே

பிரிந்து தொடர்பற்று

எங்கேனுமொரு

அனாதை ஆசிரமத்தின்

சவ்வுக்கதவு தட்டும்

கால்கள்

திடுமென விழித்துக்கொள்ளும்;

அடிவான் மறைந்து

அங்கே

காரியம் கவிழ்ந்து

காரணத்தைக் கூடிக் கலந்து

இரண்டும் ஆவியாகித் தொலைவது

கண்டு

திடுக்கிடும்;

சுற்றிச் சூழ்ந்த

நார்க்காட்டிடையே

இரண்டு நாக்குகளையும்

உதறி எறிந்துவிட்டுப்

படுத்துக்கொள்ளும்

தம் அடையாளம் மறந்து

கடித்துக் கவ்விய காம்புகளுடன்

கடைவாயில்

பால்கலந்து ரத்தம் வழிய

கன்றுகள். 

கன்றுகள்

பிரளயமாய்க் குரலுடன்

இருளுடன்.

தாயாக உன்மனம்

தனிக்கும்

இருந்தும் எப்படியோ

உருவம் சுமந்து

இடந்தோறும்

கணந்தோறும்

நிறுத்திவைத்து

மேலும் மேலும்

உருவம் சுமந்து

போகிறாய்

உன்னைப் பிரிந்து விலக்கிக்கொண்டே

உன்னைத்தேடி

உன் தவம் மட்டும் உடன்வரப்

போகிறாய்

உன் வற்றலிலிருந்து

கெட்டியாய்ச் சொட்டிவிடும்

காலத்தின்

கடைசிச் சொட்டு

கணம் உலரும் அக்கணம் - 

கண்ணில் ஒரு படலம் கிழிய

வாலைச் சுழற்றி

ஆங்காரமாய் அடித்துவிட்டுப்

புற்றுக்குள் விரையும்

பெயர் உரித்த

ஒரு பசி

நீ உன் தவமும் கலைவாய்

- அபி

***

மேலே உள்ள பிரிவினை கவிதையின் வேறு வடிவமாக தான் கீழே உள்ள காலம் கவிதையையும் வாசித்தேன். மேலே சொன்னது போல் அபி கவிதைகள் மனித பிரக்ஞைக்கு அப்பால் சாத்தியமான ஒரு தரிசனத்தை தன் கவி மொழி மூலம் தொட்டு பார்க்க முயல்பவை.

காலம் என்னும் தொகுதியும் அந்த அறிய முடியா காலத்தை அறிய எத்தனிக்கும் கவிஞன், ஒரு படிமத்தை அதனுள் நிரப்பி பார்ப்பது கொள்பவை. இந்த கவிதையில் புழுதியை.

புழுதி அள்ளித்

தூற்றினேன்

கண்ணில் விழுந்து

உறுத்தின

நிமிஷம் நாறும் நாள்கள்

அபி சுட்டி செல்லும் படிமம் அல்லது காட்சி சுட்டி நிற்கும் பொருள் அழகாக வந்தமைந்த தொகுப்பு காலமும், மாலையும். கவிஞர் காலத்தையும், மாலையையும் வெவ்வேறு பொருளில் போட்டு அந்த படிமத்தை கவிதையாக்குகிறார்.

இந்த கவிதையில் காலம் புழுதியாக மாறுகிறது. புழுதி காலமாக. நிசப்தமாய் கரைந்து செல்லும் காலம், கண்ணில் படாமல் மறையும் போது அதனை கையால் அள்ளித் தூற்றி தள்ளினேன் அவை கண்ணில் விழுந்து உறுத்துகின்றன என்ற வரியில் காலம் என்னும் அருவம் நானென்னும் புழுதியோடு கலந்து இவ்வாழ்வென்னும் வினாவின் தேவை எழுப்புகிறது.

***

காலம் – புழுதி

எங்கிலும் புழுதி

வாழ்க்கையின் தடங்களை

வாங்கியும் அழித்தும்

வடிவு மாற்றியும்

நேற்று நேற்றென நெரியும் புழுதி

தூரத்துப் பனிமலையும்

நெருங்கியபின் சுடுகல்லாகும்

கடந்தாலோ

ரத்தம் சவமாகிக் கரைந்த

செம்புழுதி

புழுதி அள்ளித்

தூற்றினேன்

கண்ணில் விழுந்து

உறுத்தின

நிமிஷம் நாறும் நாள்கள்

- அபி

***

கவிஞர் அபி விக்கி பக்கம்

அபி கவிதைகள் வாங்க: அபி கவிதைகள்

Share:

0 comments:

Post a Comment

Powered by Blogger.

தமிழில் புதுக் கவிதை - க.நா.சு

க.நா.சு வின் கவிதைக் கலை - ஸ்ரீநிவாச கோபாலன் ‘எளிய பதங்கள்‌, எளிய சந்தம்‌’ என்றும்‌, ‘தெளிவுறவே அறிந்திடுதல்‌, தெளிவு தர மொழிந்திடுதல்‌’ என்...

தேடு

Labels

அபி (11) அரவிந்தர் (1) அறிமுகம் (1) ஆக்டேவியா பாஸ் (2) ஆத்மாநாம் (2) ஆனந்த் குமார் (7) இசை (4) இந்தி (5) இளங்கோ கிருஷ்ணன் (2) உபநிடதம் (1) உரையாடல் (2) எம். கோபாலகிருஷ்ணன் (1) எஸ். ராமகிருஷ்ண (1) எஹுதா அமிக்ஹாய் (1) ஓக்ட்டாவியோ ப்பாஸ் (1) க. மோகனரங்கன் (4) க.நா. சுப்பிரமணியம் (2) கட்டுரை (6) கப (1) கமலதேவி (1) கம்பன் (1) கலாப்ரியா (1) கலீல் கிப்ரான் (1) கல்பற்றா நாராயணன் (4) கல்பனா ஜெயகாந்த் (2) கவிதை (161) கவிதையின் மத (1) காரைக்கால் அம்மைய (1) காளிதாசன் (1) காஸ்மிக் தூசி (1) கிம் சின் டே (1) குமரகுருபரன் விருது (5) குன்வர் நாராயண் (1) கைலாஷ் சிவன் (1) கோ யுன் (1) ச. துரை (2) சங்க இலக்கியம் (2) சதீஷ்குமார் சீனிவாசன் (6) சந்திரா தங்கராஜ் (1) சபரிநாதன் (3) சீர்மை பதிப்பகம் (1) சுகுமாரன் (3) சுந்தர ராமசாமி (2) ஞானக்கூத்தன் (1) தாகூர் (1) தேவதச்சன் (4) தேவதேவன் (18) தேவேந்திர பூபதி (1) நகுலன் (3) நெகிழன் (1) நேர்காண (1) நேர்காணல் (1) பாபு பிருத்விராஜ் (1) பிப்ரவரி 2022 (2) பிரதீப் கென்னடி (1) பிரமிள் (2) பிரான்சிஸ் (1) பூவன்னா சந்திரசேக (1) பெரு. விஷ்ணுகுமார் (1) பெருந்தேவி (1) பொன்முகலி (1) போகன் சங்கர் (2) போர்ஹே (1) மங்களேஷ் டப்ரால் (1) மதார் (3) மரபு கவிதை (7) மனுஷ்யபுத்திரன் (1) மா. அரங்கநாதன் (1) மொழிபெயர்ப்பு (12) மோகனரங்கன் (1) யவனிகா ஸ்ரீராம் (2) யான் வாங் லீ (1) யுவன் சந்திரசேகர் (15) யூமா வாசுக (2) ரகுவம்சம் (1) ரமாகாந்த் ரத் (1) ராமாயணம் (1) ரியோகான் (1) லட்சுமி மணிவண்ணன் (2) லதா (1) லாரா கில்பின் (1) வ. அதியம (1) வண்ணதாசன் (2) வாசகர் (1) வாலஸ் ஸ்டீபன் (1) விக்ரமாதித்யன் (6) வீரான்குட்டி (3) வே. நி. சூர்யா (5) வே.நி. சூர்யா (6) வேணு தயாநிதி (1) ஜெ. ரோஸ்ல (1) ஜெயமோகன் (2) ஜென் (1) ஷங்கர் ராமசுப்ரமணியன் (1) ஷெல்லி (1) ஸென் கவிதை (1) ஸ்ரீநேசன் (1)

Most Popular

Blog Archive