நகரங்களின் மனம் அதிகமாகி விட்டது. எதிர் நிற்கும் சுவற்றை கூட முரண் கொள்ளும் அளவுக்கு பாழில் வீழ்ந்த உணவாகிவிட்டது தற்கால வாழ்வு. கவிஞன் எங்கோ வேற்று கிரகத்தில் அமர்ந்து இருப்பவன் அல்ல. எளிய மனங்கள் தன் பழக்கமாக்கி விட்ட அந்த அந்த நேரத்து வாழ்வே ஜெ. ரோஸ்லின் கவிதையாக இருப்பது. நிகழ்காலத்து அப்பால் செல்லாத உயிரிருப்பும் இன்மையும் அங்கே நிகழ்ந்துக்கொண்டே இருப்பது. தன்னெழுச்சியாக.
சமூகத்தின் முன் தனியுணர்வு மேலோங்க வெட்டவெளியில் தயங்கமின்றி பாடும் வால். எதையும் வேண்டுவதே இல்லை என்பதே உச்சம். பின் நவீன சிதைவாக்க உறுப்புகளால் சமூகம் பன்மைபடுத்தப்பட்டாலும் உணர்வின் அடிப்படைகள் உறங்கவில்லை. தனிமையின் நீண்ட நடையை அவர் கவிதைகள் கொண்டிருக்கிறது. There will be sollitude and loneliness. தனிமையில் கனிவு கொண்டிருக்கிற கணம். மனிதன் ஒரு சமூக விலங்கு என்ற கிரேக்க வாசகம் உறுத்தினாலும். தனிப்பட்ட விருப்பிலே தீமையின் ஆழங்கள் உறங்குகிறது. மேலும், Social Essentiality என்று முன்னிறுத்தும் மனித அடையாளங்கள், உள் அகமாக வளர்க்கப்படும் இன்றைய சமூக அமைப்பை, களைவதற்கு குறைந்தது ஆயிரம் கயிறுகளாவது நெரித்து கொண்டிருக்கும்.
அவற்றில் எதுவுமேயில்லாமல் பறப்பது எதுவென காட்டுவதற்கு கலைஞன் வேண்டும். எடையற்ற நிலத்திற்கான ஏக்கமாக அல்லாமல், அந்நிலமாகவே மாறிடுவது ஜெ. ரோஸ்லின் கவிதைகள்.
கவிதையின் மொழி மெலிதானது. எல்லோரும் இளைப்பாறும் ஒரு மரத்தை உருவாக்கி விட்டு தனித்தலையும் ஒருவரை மட்டுமே அங்கே அனுமதிக்கும் விளிம்பில் நிற்பார். பெரும்பாலும் இதுவே அடிப்படையாக மதம், நிறுவனம், இனம், மொழியால் உருவாக்கப்பட்ட சுமையோடு நாம் நிற்கும் இடம். Poems played subjectively or objectively. Though it is whole in seeing beauty. Solitude sometimes mishappen into loneliness. கவிதையை பற்றி பேசும் போது கவிதையை பற்றி மட்டும் பேச முடியாது. சமூகம் ஒழுங்கமைந்து இயங்க அறம் ஒரு பண்பட்ட கூட்டியக்கத்தின் கருவியும் அமர்ந்து கொள்ளும். நிகழ்காலத்தை மட்டுமே பார்க்கிற விளிம்பில் விளையாடுவது குழந்தை மனம். இன்னும் நாம் சென்றடைய வேண்டிய புள்ளி. அந்த வழியின் தொடர்ச்சியாகவே, விழிப்பின் கண்கொண்ட வியப்பில் ஆழ்தல் அக்கவிதைகளில் ரீங்கரித்து கொண்டிருக்கிறது,
***
ஞாபகம்
அலைபேசியில் தோழி கேட்டாள்
"உனது உடலில்
ஓடுகிற ரத்தத்தின் சப்தமே
கேட்குமளவுக்கான அமைதியை
எப்பவாவது
நீ உணர்ந்திருக்கிறாயா" என்று.
நான் கொஞ்சம் யோசித்து பிறகு
"எனது காதல் முடிவுக்கு வந்த தருணத்தில்" என்றேன்.
பின்பு இரவிலும்
கூட்டம் கூட்டமாகப் போகும்
மேகங்களைப்
பார்க்க ஆரம்பித்தேன்.
அவள் அநேகமாக நிலவைப்
பார்க்க ஆரம்பித்திருக்கவேண்டும்.
நிலவை மேகங்கள் மூடியபோது
அலைபேசி இணைப்பைத் துண்டித்தேன்.
படிக்கட்டில் வந்து உட்கார்ந்தேன்.
எதிரில் ஒரு பெரிய மரம்.
அதன் அத்தனை இலைகளும்
ஒரே நொடியில்
உதிர்ந்தால்
பரவாயில்லை என்றிருந்தது.
***
நீயே நிரந்தரம்.."
இன்று சோகமான நாள்.
அனைத்து விஷயங்களின் போதும்
சோகமாகவே இருந்தேன்.
கண்ணாடி முன்பு
"என்ன ஆச்சு உனக்கு" என்று
கேட்டுப்பார்த்தேன்.
தோட்டத்திற்குப் போனேன்.
ஒவ்வொரு செடியையும் நிதானமாகக் கவனித்தேன்.
மறுபடியும் அறைக்கு வந்தேன்.
கூகுளில்
"இந்நேரம் ரெஜினா
என்ன அலங்காரத்தைப் பற்றி
யோசிக்கிறாள்?" எனத் தட்டச்சு செய்தேன்.
பைத்தியக்காரத்தனம்தான்.
கொஞ்சநேரம் சம்பந்தமில்லாத
பதில்களில் சுற்றினேன்.
அப்புறம் பால்கனியில் நின்றேன்.
கொஞ்ச கொஞ்சமாக
இருட்டிக்கொண்டிருந்தது.
ரொம்பவும் அலட்டிக்கொள்ளாதே என
வானத்தைப் பார்த்து
சொல்லவேண்டும் போலிருந்தது.
சமையலறைக்குச் சென்றேன்.
நீயே நிரந்தரம் பாடலை
முணுமுணுத்தபடி அம்மா
வேலைகளில் மும்முரமாக இருந்தாள்.
"காத்திருப்பதற்கும்
நம்பிக்கையுடன் இருப்பதற்கும்
வித்தியாசமே இல்லை" என்று
ஒரு வரி தோன்றியது.
பதினைந்து நிமிடத்திற்கு முன்பிருந்த
வெளிச்சத்தை நினைத்துப்பார்த்தேன்.
இன்று சோகமான நாள்தான்.
***
தீவு
நிறையக் காலத்திற்குப் பிறகு
தோழிகளுடன் சந்திப்பு.
காலையிலிருந்து மாலை வரை
ஏறக்குறைய என்னுடனேயே இருந்தனர்.
சிரித்தோம்.
பிடித்த திரைப்படத்தைப் பார்த்தோம்.
விளையாடினோம்.
வதந்தி பேசிக்கொண்டோம்.
அழுதோம்.
ஆறுதல் சொல்லிக்கொண்டோம்.
கடைசியில்
ஒவ்வொருவராகப் பிரிந்தும் சென்றுவிட்டனர்.
எல்லோரும் சென்றுவிட்ட பிறகும் கூட
எனக்குத் தோன்றிக்கொண்டே இருந்தது,
இன்னும் யாரோ
பிரிய மனமில்லாமல்
இங்கேயே இருக்கிறார்கள் என்று.
ஒவ்வொரு அறையாகச்
சென்று பார்த்தேன்.
ஆனால் நான் மட்டும்தான் இருந்தேன்.
பிறகு எனது கையை
நானே பிடித்துக்கொண்டு
வாசலுக்கு வெளியே
என்னை அழைத்துச்சென்றேன்.
அப்புறம்
கைகளை விட்டுவிட்டு
வேகமாக
வீட்டுக்குள் நுழைந்து
கதவைச் சார்த்திக்கொண்டேன்.
இப்படியும் நடக்கும்தானே?
***
0 comments:
Post a Comment