கவியின் இயற்கை - டி.ஏ. பாரி

குழந்தை கவிதைகளை அடுத்து வாசகர்களை எளிதில் அதிகம் கவர்வது  இயற்கை சார்ந்த கவிதைகள் எனலாம். மொழி சார்ந்த நுட்பங்களோ அல்லது மதம், பண்பாடு சார்ந்த  கவிதைகளையோ முழுமையாக வாசிப்பதற்கு வாசகனுக்கு குறைந்தபட்ச பயிற்சி அவசியமாகிறது.  ஆனால் இயற்கை சார்ந்த கவிதைகளில் உள்ள பேசுபொருளோ மானுடப் பொதுவானது என்பதால் அதை ஒருவர் பெரும்பாலும் தன் அனுபவத்தைக் கொண்டே தொடர்புறுத்திக் கொள்ள முடியும். இயற்கை என்பது ஒட்டுமொத்த மானுடம் முன்னும் நிகழும் மாபெரும் அரங்கேற்றம் அல்லவா?. சரி, இவ்வாறு நம் கண்முன் நிகழும் மானுடப் பொதுவான இயற்கையிலிருந்து ஒரு கவியால் மட்டும் எப்படி நாம் காணாத முற்றிலும் வேறொன்றை காண முடிகிறது?

ஒரு சராசரியான இயற்கை விரும்பியாக நாம் நம்மை நினைத்துக் கொள்கிறோம். வீதி நாய்களிடம் கனிவுடன் நடந்து கொள்வது, மாடியில் குருவிகளுக்கு உணவும் நீரும் வைத்து கூடுகட்ட அனுமதிப்பது, மொட்டை மாடி இரவில் விண்மீன்களை வெறித்துப் பார்ப்பது, மலர்களை கண்டு பரவசம்.. எல்லாம் நாமும் தானே செய்து பார்க்கிறோம்? இத்தனைக்குப் பிறகும் அந்திச் சூரியனின் வண்ணங்களோ சிட்டுக்குருவியின் சிறகடிப்போ சொல்லும் விஷேச சேதிகள் ஏன் நம்மை மட்டும் வந்தடைவதேயில்லை. இயற்கை நிகழ்வுகளை அறிவியல் நோக்கில் பார்த்தால் அனைத்தையும் காரண காரிய தொடராகவே விளக்கிவிட இயலும். தத்துவ நோக்கில் பார்த்தால் ஒருவகையில் நாம் காணும் இயற்கை அனைத்தும் புலன்வழி அறிதலில் உண்டாகும் தோற்ற மயக்கங்களே என்று கூட வகுத்துவிட முடியும். எனில் ஒரு கவிஞன் இயற்கை நிகழ்விலிருந்து கண்டு சொல்லும் விசேஷ உண்மைகள் எங்கிருந்து வருகிறது? நம் கண்முன் நிகழ்ந்த ஒன்றே கவிதையில் நிகழும்போது பல்வேறு அர்த்த சாத்தியங்கள் கொண்டதாகி விடும் மாயமே ஒவ்வொரு முறையும் நிகழ்கிறது. இங்குதான் ஒரு கவியின் நோக்கு அவசியமாகிறது. ஏனெனில் நாம் கவிதையில் காணும் விசேஷ உண்மைகள் இயற்கையிடமிருந்து வருவதில்லை, அவை கவியிடமிருந்தே பிறக்கின்றன. ஒரு கவி இயற்கையை ’பார்த்து’ கவிதை எழுதுவதில்லை, மாறாக அவன் கவியாக இருந்துகொண்டு இயற்கையை காண்கிறான். அவன் தன்னுள் இருக்கும் உண்மைக்கு இயற்கையிடமிருந்து பெறுவது ஓர் ஆமோதிப்பை மட்டுமே. அந்த ஆமோதிப்பு அளிக்கும் பரவசமே மொழி வழியாக நம்மை வந்தடைகிறது. மொழிவழியாக அந்த பரவசத்தை நாமும் அடைந்து குதூகலிக்கிறோம். அவ்வகையில் நான் சமீபத்தில் மிகவும் விரும்பி வாசித்த கமலதேவியின் இரு கவிதைகளை இங்கு குறிப்பிடுகிறேன்.  

ஒவ்வொருமுறையும்
அந்தச்சிட்டுக்குருவி
மண்ணிலிருந்து
சிறகை உதறிக்கொண்டு
வானத்தில் எழுகிறது...

அந்த கம்பத்தில்,
கிணற்றின் சுற்றுசுவரில்,
செம்பருத்தி செடியின் கிளையில்,
வீட்டுத்திண்ணையில்,
ஒவ்வொருமுறை எழும்போதும்
சிறகை உதறிக்கொள்கிறது.

எத்தனை இயல்பாய்
சிறகுகளை விரித்து
சிறுஉடலை ஆட்டி
தலையை உயர்த்தி
விரிந்த ஒரு பூவைப்போல
தன்னை உலுக்கிக்கொள்கிறது.

அதன் சிறகில்
சிறு பூவிதழோ,
சிறு மகரந்தத்துகளோ ,
சிறு புழுதியோ
இருக்கலாம்.
இல்லை
எதுவுமே இல்லாமலும் இருக்கலாம்.

என்றாலும் உதறிக்கொள்கிறது.
ஒவ்வொரு முறையும்
உதறி எழுவது...
அமர எத்தனிக்கும்
தன்னையே தானோ...

இல்லை
பறக்க எத்தனிப்பதை
சிலிர்த்துக்கொள்கிறதா?

இல்லை
பறத்தல் என்பதே
ஒவ்வொருமுறையும்
சின்னஞ்சிறிய சிறகிற்கு
அத்தனை பெரிய பேரின்பமா?

மண்ணிலிருந்து எழுந்து சிறகடிக்கும் சிட்டுகுருவியைப் பற்றி பேசி வரும் கவிதை அது தன்னை தானே உதறிக்கொண்டு மேலெழும் இடத்தில் முற்றிலும் புதிய கண்டடைதலை அடைகிறது. நாம் எப்போதும் நம்முடைய பறக்க இயலாமைக்கு மண்ணின் விசைகளை சுட்டிக்காட்ட விரும்புகிறோம். மண்ணின், இவ்வுலகின் விசையை காட்டிலும் மாபெரும் எதிர்விசை என்பது அமர எத்தனிக்கும் சுயத்தின் விசை. அந்தக் கண்டடைதலை அடைந்த பிறகு மீண்டும் பறத்தலின் சிலிர்ப்பாக அல்லது பேரின்பமாக என அக்கணத்தின் வெவ்வேறு சாத்தியங்களையும் புனைந்து பார்க்கிறது இக்கவிதை. நம்முள் இருக்கும் எதிர்விசையை சுட்டிக்காட்டும் இக்கவிதை உண்மையில் உத்வேகமூட்டும் வரிகளாக நம் மனதில் பதிவது ஆச்சர்யமானது.

அடுத்ததாக கமலதேவியின் ‘அம்மையப்பன்’ கவிதை நேரடியாகவே முன்வைப்பது ஒரு தரிசனத்தை. ஒரு ஓவியத்தை போலவோ அல்லது வெகுநேரம் காத்திருந்து எடுத்த ஒரு புகைப்படத்தைப் போலவோ செப்பனிட்டு இயற்கையின் ஒரு தீற்றலை முன்வைக்கிறது கவிதை. கவிதையை வாசிக்கையில் ஒரு திடுக்கிடலைப் போல அக்காட்சியை நாமும் கண்டுவிடுகிறோம்.

அம்மையப்பன்
கொல்லிமலையின் முகடுகளில்
அந்தியின்  செவ்வொளி தயங்கி நின்று பரவ..
தென்மேற்கில் மென்நீலம் விரிகிறது.
அந்த அணையும் சிலநிமிசங்களில்.
நீண்டமலையின் ஒருஉச்சியில்
வானை வாள்கீறிய தடமாய் மூன்றாம்பிறை

***

கமலதேவி தமிழ் விக்கி பக்கம்

***

Share:

0 comments:

Post a Comment

Powered by Blogger.

ஆகாய மிட்டாய் - கல்பற்றா நாராயணன் கவிதை

ஆகாய மிட்டாய் ந ண்பனின் மகளின் பெயர் மழை என்று தெரிந்தபோது மனம் தெளிந்தது சாறாம்மாவுக்கும் கேசவன்நாயர்க்கும் இருந்த துயரம் சற்று பிந்தியானால...

தேடு

Labels

அபி (11) அரவிந்தர் (1) அறிமுகம் (1) ஆக்டேவியா பாஸ் (2) ஆத்மாநாம் (2) ஆனந்த் குமார் (7) இசை (4) இந்தி (5) இளங்கோ கிருஷ்ணன் (2) உபநிடதம் (1) உரையாடல் (2) எம். கோபாலகிருஷ்ணன் (1) எஸ். ராமகிருஷ்ண (1) எஹுதா அமிக்ஹாய் (1) ஓக்ட்டாவியோ ப்பாஸ் (1) க. மோகனரங்கன் (4) கட்டுரை (6) கப (1) கமலதேவி (1) கம்பன் (1) கலாப்ரியா (1) கலீல் கிப்ரான் (1) கல்பற்றா நாராயணன் (4) கல்பனா ஜெயகாந்த் (1) கவிதை (156) கவிதையின் மத (1) காரைக்கால் அம்மைய (1) காளிதாசன் (1) காஸ்மிக் தூசி (1) கிம் சின் டே (1) குமரகுருபரன் விருது (5) குன்வர் நாராயண் (1) கைலாஷ் சிவன் (1) கோ யுன் (1) ச. துரை (2) சங்க இலக்கியம் (2) சதீஷ்குமார் சீனிவாசன் (6) சந்திரா தங்கராஜ் (1) சபரிநாதன் (3) சீர்மை பதிப்பகம் (1) சுகுமாரன் (3) சுந்தர ராமசாமி (2) ஞானக்கூத்தன் (1) தாகூர் (1) தேவதச்சன் (4) தேவதேவன் (18) தேவேந்திர பூபதி (1) நகுலன் (3) நெகிழன் (1) நேர்காண (1) நேர்காணல் (1) பாபு பிருத்விராஜ் (1) பிப்ரவரி 2022 (2) பிரதீப் கென்னடி (1) பிரமிள் (2) பிரான்சிஸ் (1) பூவன்னா சந்திரசேக (1) பெரு. விஷ்ணுகுமார் (1) பெருந்தேவி (1) பொன்முகலி (1) போகன் சங்கர் (2) போர்ஹே (1) மங்களேஷ் டப்ரால் (1) மதார் (3) மரபு கவிதை (7) மனுஷ்யபுத்திரன் (1) மா. அரங்கநாதன் (1) மொழிபெயர்ப்பு (12) மோகனரங்கன் (1) யவனிகா ஸ்ரீராம் (2) யான் வாங் லீ (1) யுவன் சந்திரசேகர் (15) யூமா வாசுக (2) ரகுவம்சம் (1) ரமாகாந்த் ரத் (1) ராமாயணம் (1) ரியோகான் (1) லட்சுமி மணிவண்ணன் (2) லதா (1) லாரா கில்பின் (1) வ. அதியம (1) வண்ணதாசன் (2) வாசகர் (1) வாலஸ் ஸ்டீபன் (1) விக்ரமாதித்யன் (6) வீரான்குட்டி (1) வே. நி. சூர்யா (5) வே.நி. சூர்யா (6) வேணு தயாநிதி (1) ஜெ. ரோஸ்ல (1) ஜெயமோகன் (2) ஜென் (1) ஷங்கர் ராமசுப்ரமணியன் (1) ஷெல்லி (1) ஸென் கவிதை (1) ஸ்ரீநேசன் (1)

Most Popular

Blog Archive