இரண்டற்று பூரணமாகும் இரு பறவைகள் - பாபு ப்ரித்விராஜ்

கவிதை மொழி அனைவருக்கும் தேவையாயிருக்கிறது, உரைநடை வாசிப்பிலிருந்து விலகயியலாத ஒருவரால் வார்த்தைகளிலிருந்து விழும் அருவியில் நனைய முடியாது நதி செல்லும் அத்தனை திசைகளிலும் பயணிக்கமுடியாது. கவிதை மொழி அத்தகைய சாத்தியங்களை உருவாக்கும் ஒன்று. ஒரு பெரும் நாடகத்தை, தத்துவத்தை, பெரும் தரிசனத்தை ஓரிரு வார்த்தைகளில் உருவாக்கிவிடும் வல்லமை கவிதை மொழிக்கே உண்டு. மொழியின் வேர்கள் அல்லது விதைகள் கவிதைகளிலேயே இருக்கின்றன.

அவ்வகையில் நவீனக் கவிதை மொழிகளும் மரபின் கவிதை மொழிகளும் ஒருசேரவே கவிதைக் கூறுகளை கொண்டுள்ளன. 

உதாரணமாக உபநிடதங்களை எடுத்துக்கொள்ளலாம் உபநிடதங்கள் மனிதனுக்கும் பிரபஞ்சத்திற்கும் உள்ள உறவை, மனிதனுக்கும் இறைவனுக்குமுள்ள உறவை நாடகீயத் தருணங்களின் மூலம் சொல்பவை. அறுதி உண்மையை அடைவதின் அவசியத்தையும் அவ்வுண்மையை அடைவதின் வழிமுறைகளையும் பயிற்சிகளையும் முன்வைப்பவை. குருவின் அருகமர்ந்து கற்றலின் அர்த்தமே உபநிடதங்கள் எனும் வார்த்தையின் அர்த்தம். உபநிடதங்கள் பல உள்ளன முக்கியமாக பதினெட்டு உபநிடதங்கள் என்கின்றனர். ஒவ்வொரு உபநிடதமும் ஒவ்வொரு குருவின் மொழிகளில் உள்ளது. குருசிஷ்ய விவாதங்களே கேள்வி பதில் வடிவிலேயே பெரும்பாலும் அமைந்துள்ளன. உபநிடதங்கள் அமைந்துள்ள மொழி நவீனக் கவிதை மொழியினை ஒத்ததாகவே உள்ளது.

கடோபநிடதக் கவிதைகளில் மேற்சொன்ன கவிமொழிகள்

"ஸ ஹோவாச பிதரம் தத கஸ்மை மாம் தாஸ்யஸீதி

த்விதீயம் த்ருதீயம் தம் ஹோவாச ம்ருத்யவே த்வா ததாமீதி"

நசிகேதன் தனது தந்தையிடம் சென்று, "அப்பா, என்னை யாருக்குக் தானமாகக் கொடுக்கப்போகிறீர்கள்?" என்று இரண்டாம் முறையும் மூன்றாவது முறையும் கேட்டான். அதற்குத் தந்தை, உன்னை எமனுக்குக் கொடுக்கப் போகிறேன் என்றார்.

நசிகேதனின் தந்தை வாஜசிரவஸ், 'விசுவஜித்' என்னும் யாகம் செய்கிறார். உலகாயத வாழ்வில் மென்மேலும் செழிப்புற அதைச்செய்கிறார். யாகம் நிறைவடைகையில் தன்னிடமுள்ள சிறந்தவைகளை தானம் செய்தல் முறை. அவர் அவ்வாறில்லாது தன்னிடமுள்ள சிறந்தவைகளை தானம் செய்யாமல்  வயதான பால் வற்றிப்போன பசுக்களை தானம் செய்கிறார்.

இதன் பாதிப்பைத் தன் கேள்வியாக வைத்த நசிகேதனின் சொற்கள் ஒரு நவீனக் கவிதையின் பாங்கில் இருப்பதாகப்படுகிறது. இந்த வரிகளின் தொடர்ச்சியாக தனது சுயத்தைப் பரிசீலிக்கும் ஒரு கவிதையும் அடுத்ததாக வருகிறது. அத்தனை அவதானிப்பாக அவ்வரிகள் அவனால் சொல்லப்படுகிறது. இந்த உபநிடத வரிகளில் உறையும் பொருளை உணர்கையில் அவ்வரிகள் அளிக்கும் அனுபவம் அழகானவை.

தன்னை யாரிடம் கொடுக்கப்போகிறீர்கள் என்பதில், ஒரு தந்தைக்கு மகனை விட சிறப்பான செல்வம் ஒன்று இருக்கயியலாது என்னும் விசயத்தை உணரவைக்கிறான். அவரின் தவறை உணரச் செய்கிறான். சிறந்தவைகளை தானம் செய்வதே முறை என்பதையும் சுட்டுகிறான். இதில் நவீனக் கவிதையின் வடிவமும், உள்ளடுக்குகளும் மரபில் ஏற்கனவே இருக்கிறதெனக் கொள்ளலாம்.

"பஹூனாமேயி ப்ரதமே பஹூனாமேமி மத்யமே:

கிம் ஸ்வித் யமஸ்ய கர்த்தவ்யம் யன்மயாத்ய கரிஷ்யதி”

பல விசயங்களில் நான் முதல் நிலையில் இருக்கிறேன். பல விசயங்களில் இடைநிலையில் இருக்கிறேன். என்னை எமனிடம் அனுப்புவதன் மூலம் தந்தை என்ன சாதிக்கப் போகிறார்? என்பதே இக்கவிதையில் நசிகேதனின் கேள்வி?

சுய பரிசோதனையை நிகழ்த்தியபடி பயணம் செய்யும் இக்கவிதை அபாரமான ஒன்று. சிறந்தவொன்றை தானமளிப்பதின் நோக்கம் கெடுகிறதைக் கூட தன் தந்தை எண்ணாததையெண்ணி துயருருகிறான் நசிகேதன். பல அடுக்குகளைக் கொண்டெழும் இவ்வரிகளில் மிச்சங்கள் கொட்டிக்கிடக்கின்றன.  வாசிக்கும் மனத்தின் எண்ணங்களாலேயே அவை நிரம்புகின்றன.

நம்முள் இருவர் எனும் ஒரு கவிதை முண்டக உபநிடதத்தில் வருகிறது. ஆன்மா என்ற ஒன்று எப்போதும் மாறாதது எனில் ஏன் இன்ப துன்பங்கள் எனும் தர்க்கத்தை இக்கவிதை முன்வைக்கிறது.

த்வா ஸுபர்ணா ஸயுஜா ஸகாயா

ஸமானம்வ்ருக்ஷம் பரிஷஸ்வஜாதே|

தயோரன்ய: பிப்பலம் ஸவாத்வத்தி

அனச்னன் அன்யோ அபிசாகசீதி||

இணைபிரியாத, ஒரேபோன்று தோற்றமளிக்கக்கூடிய இரண்டு பறவைகள் ஒரே மரத்தில் அமர்ந்திருக்கின்றன. அவற்றுள் ஒன்று பழத்தை ருசித்துத் தின்கிறது. மற்றொன்று தின்னாமல் பார்த்துக்கொண்டிருக்கிறது. வாழ்வின் பெரும் துயரத்திலும் சில கணங்கள் இன்பதுன்பமற்ற ஒரு சிறு விடுதலை கிடைக்கும் தருணங்கள் அமைவதுண்டு.அதுபோல் மகிழ்விலும் விடுதலை தருணங்கள் அமையும். அதுவே ஆன்மவிடுதலை. அவ்விடுதலையை நோக்கி ஒவ்வொரு உயிரும் பயணிக்கிறது.

ஒரு பறவை எச்சுவையாயினும் உண்டு களிக்கிறது, ஒன்று ஒன்றும் செய்யாமல் அமைதியாக அமர்ந்திருக்கிறது. சுழற்சியின் விளைவுகளில் அலைக்கழிந்து மேல் நோக்கி நகர்கையில் அப்பறவை தாமேதான் எனக்கண்டுணர்கிறது. இரண்டற்று பூரணமாகிறது. 

காட்சிப்படிமத்தை கொண்டுள்ள இக்கவிதை நவீனக்கவிதை தரும் வாசிப்பின்பத்தை தரவல்லது என்றே கொள்ளலாம்.

***

Share:

0 comments:

Post a Comment

Powered by Blogger.

புதுக் கவிதை இரண்டு குறிப்புகள் - க.நா. சுப்ரமணியம்

[‘இலக்கிய வட்டம்’ இதழில் ‘புதுக்கவிதை’ என்கிற தலைப்பில் வெளியான இருவேறு குறிப்புகள் இந்த இதழில் இடம்பெறுகின்றன. முதலில் உள்ளது ‘மயன் கவிதைகள...

தேடு

Labels

அபி (11) அரவிந்தர் (1) அறிமுகம் (1) ஆக்டேவியா பாஸ் (2) ஆத்மாநாம் (2) ஆனந்த் குமார் (7) இசை (5) இந்தி (5) இளங்கோ கிருஷ்ணன் (2) உபநிடதம் (1) உரையாடல் (2) எதிர்வின (2) எம். கோபாலகிருஷ்ணன் (1) எஸ். ராமகிருஷ்ண (1) எஹுதா அமிக்ஹாய் (1) ஓக்ட்டாவியோ ப்பாஸ் (1) க. மோகனரங்கன் (4) க.நா. சுப்பிரமணியம் (3) க.நா. சுப்ரமணியம் (1) கட்டுரை (7) கப (1) கமலதேவி (1) கம்பன் (1) கலாப்ரியா (1) கலீல் கிப்ரான் (1) கல்பற்றா நாராயணன் (4) கல்பனா ஜெயகாந்த் (2) கவிதை (171) கவிதையின் மத (1) காரைக்கால் அம்மைய (1) காளிதாசன் (1) காஸ்மிக் தூசி (1) கிம் சின் டே (1) குமரகுருபரன் விருது (5) குன்வர் நாராயண் (1) கைலாஷ் சிவன் (1) கோ யுன் (1) ச. துரை (2) சங்க இலக்கியம் (2) சதீஷ்குமார் சீனிவாசன் (6) சந்திரா தங்கராஜ் (1) சபரிநாதன் (3) சீர்மை பதிப்பகம் (1) சுகுமாரன் (3) சுந்தர ராமசாமி (2) ஞானக்கூத்தன் (1) தாகூர் (1) தேவதச்சன் (4) தேவதேவன் (22) தேவேந்திர பூபதி (1) நகுலன் (3) நெகிழன் (1) நேர்காண (1) நேர்காணல் (1) பாபு பிருத்விராஜ் (1) பிப்ரவரி 2022 (2) பிரதீப் கென்னடி (1) பிரமிள் (3) பிரான்சிஸ் (1) பூவன்னா சந்திரசேக (1) பெரு. விஷ்ணுகுமார் (2) பெருந்தேவி (1) பொன்முகலி (1) போகன் சங்கர் (2) போர்ஹே (1) மங்களேஷ் டப்ரால் (1) மதார் (4) மரபு கவிதை (7) மனுஷ்யபுத்திரன் (1) மா. அரங்கநாதன் (1) மொழிபெயர்ப்பு (12) மோகனரங்கன் (1) யவனிகா ஸ்ரீராம் (2) யான் வாங் லீ (1) யுவன் சந்திரசேகர் (15) யூமா வாசுக (2) ரகுவம்சம் (1) ரமாகாந்த் ரத் (1) ராமாயணம் (1) ரியோகான் (1) லட்சுமி மணிவண்ணன் (2) லதா (1) லாரா கில்பின் (1) வ. அதியம (1) வண்ணதாசன் (2) வாசகர் (1) வாலஸ் ஸ்டீபன் (1) விக்ரமாதித்யன் (6) விவாத (1) வீரான்குட்டி (3) வே. நி. சூர்யா (5) வே.நி. சூர்யா (6) வேணு தயாநிதி (1) ஜெ. ரோஸ்ல (1) ஜெயமோகன் (2) ஜென் (1) ஷங்கர் ராமசுப்ரமணியன் (1) ஷாஅ (1) ஷெல்லி (1) ஸென் கவிதை (1) ஸ்ரீநேசன் (1)

Most Popular

Blog Archive