நாம் இங்கிருந்துகொண்டு
பூமியின் எல்லா மரங்களிலும்
எத்தனை இலைகள் என்று
எண்ணத்தொடங்குகிறோம்
இலைகள் எவ்விதத்திலும்
ஒத்துழைப்பதில்லை
அவற்றிக்கு அதொன்றும் முக்கியமில்லை.
ஒவ்வோர் இலையும்
அதனதன் அதீத தனிமையில் உதிரும்போதுதான்
நாமதைத் தெரிந்துகொள்கிறோம்
அவ்வளவுதான்.
(வீரான் குட்டி, தமிழில்: சுஜா)
கவிதை வாசிப்பு மிக அந்தரங்கமானது.
அந்த வாசிப்பை பகிர்ந்து கொள்வதும் அப்படியே இருக்க இயலும்.
அதாவது அதீதத் தனிமையில்
அசைவற்ற கணத்தில் அகம் அறியும் ஒரே ஒரு எண்ணம் என.
அல்லது அதுவும் அற்ற நிலை என.
அகத்தின் அதீதத் தனிமையில்
நான் யார்?
எதிலிருந்து உதிர்கிறேன்? அல்லது
எது உதிர்கிறது?
அகத்தின் அதீதத்தனிமையில்
நாம் எதைத் தெரிந்துகொள்கிறோம்?
எது தெரிந்துகொள்கிறது?
பூமியின் மரங்களில் எல்லா இலைகளையும் எண்ணிக்கொண்டிருப்பது எது?
உதிரும் ஓர் இலையை அறிவது எது?
இலை உதிரும் கணத்தில்
தொடங்கும் ஓர் நடனம்.
இலை உதிரும் தருணம்
நிகழும் ஓர் நடனம்.
மரணம்.
எதன் மரணம்?
எதன் நடனம்?
பிறிதொன்றிலாதா அதீதத் தனிமையின் பெருவெளியில் நிகழும் நடனம் அது.
பிறகென்ன அறிந்ததினின்றும் விடுதலைதான்:)
***
0 comments:
Post a Comment