பாபு பிருத்விராஜ் கவிதைகள் - மதார்

அறைக்கு திரும்பும் ஓவியர் வான்கா தனது காலணிகளை ஓவியமாகத் தீட்டும் ஒரு காட்சி eternity's gate திரைப்படத்தில் வரும். இந்த காட்சியை பார்த்ததும்  நட்ஹாம்சனின் 'பசி' நாவலின் நாயகன் என் நினைவுக்கு வந்தான். அவன் தான் வான்காவாக அந்த காலணியை வரைகிறான் என்று உள்மனம் சொன்னது. பசிக்கும் ஓவியத்துக்கும் என்ன தொடர்பு?

ஒருவேளை இப்போது அந்த நாவலை மீள்வாசிப்பு செய்தால் வான்காவை மனதில் நிறுத்தித்தான் அதைச் செய்ய முடியும் என்று தோன்றுகிறது. "பசியின் நிறம்" என்ற தலைப்பு இந்தக் கவிதையை முழுமையாக்குகிறது. பாபு பிரித்விராஜின் தூரிகை வான்காவின் தூரிகையாக, நட்ஹாம்சனின் தூரிகையாக ஆகிறது.

***

பசியின் நிறம்

சுற்றிலும் நிறைந்து வழியும்
வண்ணக்கோப்பைகள்
பொழுதை ஒருவாறு
தீட்டிக் கொண்டிருந்தேன்
உச்சிப்பொழுது
மெல்ல மெல்ல,
கருமை கொண்டது.
மயக்கத்தில் லேசாக
துலங்கியது
ஓவியம்.

*** 

'நிலா பார்த்தல்' என்ற தலைப்பை முதன்முதலில் வாசித்தபோது ஆச்சரியமாக இருந்தது. கவிஞர் கல்யாண்ஜியின் கவிதைத் தொகுப்பு அது. எனக்கு பிடித்த கவிதை தொகுப்புகளின் தலைப்புகளில் அதுவும் ஒன்று. இதை விட நேரடியாக, அழகாக ஒரு கவிதைத் தொகுப்புக்கு தலைப்பிட முடியாது. 'நிலா பார்த்தல்'. நிலா பார்த்தலுக்கு நிகரானது கடல் பார்த்தல். பாபு பிரித்விராஜின் இந்தக் கவிதையில் ஒரு வரி வருகிறது.

"ஆழமான ஒன்றை
வெளித்தள்ளுகிறது
எப்போதும்
கடல்" 

இப்போது யோசித்தால் அலை என்பது வேறொன்றாவதை கவனிக்கலாம். பாபு பிரித்விராஜின் 'இம்மொழி பெருங்கூடு' தொகுப்பில் கடல் பற்றியும் பறவைகள் பற்றியும் நிறைய கவிதைகள் வருகின்றன. அதில் இது அழகான ஒன்று.

***

அலைகளில்
மிதந்து வரும்
சிறு மேகத்துண்டென
மூழ்காத
தன்னிழலை
சிறகமர்த்தி
காப்பாற்றியது
அப்பறவை

ஆழமான ஒன்றை
வெளித்தள்ளுகிறது
எப்போதும்
கடல்

***

Share:

0 comments:

Post a Comment

Powered by Blogger.

சதீஷ்குமார் சீனிவாசன்

இருள் வெளியில் எரியும் சொற்கள் 1 - கடலூர் சீனு

2023 ஆண்டுக்கான குமரகுருபரன் விஷ்ணுபுரம் இலக்கிய விருது இளம் கவிஞர் சதீஷ்குமார் சீனிவாசன் அவர்களுக்கு அறிவிக்கப்பட்ட பிறகு, இதுவரையிலான முதல...

தேடு

Labels

அபி (10) அறிமுகம் (1) ஆக்டேவியா பாஸ் (1) ஆனந்த் குமார் (7) இசை (3) இந்தி (5) இளங்கோ கிருஷ்ணன் (2) எம். கோபாலகிருஷ்ணன் (1) எஸ். ராமகிருஷ்ண (1) க. மோகனரங்கன் (2) கட்டுரை (5) கப (1) கமலதேவி (1) கம்பன் (1) கலாப்ரியா (1) கலீல் கிப்ரான் (1) கல்பனா ஜெயகாந்த் (1) கவிதை (93) காரைக்கால் அம்மைய (1) காளிதாசன் (1) காஸ்மிக் தூசி (1) குன்வர் நாராயண் (1) கோ யுன் (1) ச. துரை (2) சங்க இலக்கியம் (1) சதீஷ்குமார் சீனிவாசன் (6) சபரிநாதன் (2) சீர்மை பதிப்பகம் (1) சுகுமாரன் (3) சுந்தர ராமசாமி (1) ஞானக்கூத்தன் (1) தேவதச்சன் (3) தேவதேவன் (12) தேவேந்திர பூபதி (1) நகுலன் (2) நேர்காண (1) பாபு பிருத்விராஜ் (1) பிப்ரவரி 2022 (2) பிரதீப் கென்னடி (1) பிரமிள் (1) பூவன்னா சந்திரசேக (1) பெரு. விஷ்ணுகுமார் (1) பெருந்தேவி (1) போகன் சங்கர் (1) மங்களேஷ் டப்ரால் (1) மதார் (2) மரபு கவிதை (5) மோகனரங்கன் (1) யுவன் சந்திரசேகர் (2) ரகுவம்சம் (1) ரமாகாந்த் ரத் (1) ராமாயணம் (1) லட்சுமி மணிவண்ணன் (1) லதா (1) லாரா கில்பின் (1) விக்ரமாதித்யன் (5) வே. நி. சூர்யா (2) வே.நி. சூர்யா (1) வேணு தயாநிதி (1) ஜெ. ரோஸ்ல (1) ஜென் (1) ஷங்கர் ராமசுப்ரமணியன் (1)

Most Popular

Blog Archive