காலம் - புழுதி
எங்கிலும்புழுதி
வாழ்க்கையின்தடங்களை
வாங்கியும்அழித்தும்
வடிவுமாற்றியும்
நேற்றுநேற்றெனநெரியும்புழுதி
தூரத்துப்பனிமலையும்
நெருங்கியபின்சுடுகல்லாகும்
கடந்தாலோ
ரத்தம்சவமாகிக்கரைந்த
செம்புழுதி
புழுதிஅள்ளித்
தூற்றினேன்
கண்ணில்விழுந்து
உறுத்தின
நிமிஷம்நாறும்நாள்கள்
புழுதியை
காலமென உருவகிக்கும் அபியின் இக்கவிதையை இறந்த கால துயரின் உக்கிரத்தை உணர்த்துவதாக
உள்ளது. துயர் என்பது கடக்கப்பட வேண்டியது. நம்மைச்சுற்றி எங்குமெனசூழ்ந்திருக்கும்
துயரைக் கடக்க, துயரென புறத்தில் உருகொள்ளும் காலத்தை அகத்தில் முழுதுணரும் ஒரு தருணத்தை
சிறை என்னும் கவிதையில் நிகழ்த்தி காட்டுகிறார் அபி.
காலம் - சிறை
பிரக்ஞையின்
அறாவிழிப்பு
இரவிலிநெடுயுகம்
இடந்தொலைத்தஆழ்வெளி
சிறையிருப்பது
காலமும்தான்
அறுபடாத
விழிப்பு நிலையென இரவுகளற்ற நெடுயுகமென இன்மையின் ஆழ்வெளியில் சிறையிருக்கும் காலம்
என்னும் பேரிருப்பை ஆழ்மவுன கணமொன்றில் உணரச் செய்கிறார் அபி. புழுதியென உறுத்திய காலம்
என்பது நாம் கட்டமைத்தது மட்டுமே.காலம் அதன் புறச்சூழலின் கட்டுகளிலிருந்து இருந்து
விடுபட்டு அகாலம் என வெளிப்படும் தருணத்தை அபியின் வடிவங்கள் என்னும் கவிதையின் இப்பகுதியில்
உணரலாம்.
வடிவங்கள்
வடிவங்களைநெருக்கிநிறுத்தி
அதிகாரம்செலுத்திய
போல்போலில்லைஇரண்டும்
செத்துப்போகும்
வடிவங்கள்இன்றித்
தொடர்புகள்ஏது
வேய்ந்ததொடர்புகள்நாலாபுறமும்
விலகிட
வெளிச்சம்வியாபிக்க
இதோ
காலம்
கண்ணில்படும்
அபியின்
கவிதை கூறுமுறை என்பது புறக்காட்சி படிமங்கள் மூலம் ஒன்றை சுட்டி பின்னர் ரத்து செய்து
அரூப படிமமாக, அகஅனுபவமாக மாற்றுவது. இக்கவிதை வரிகள் காலம்,
அதனை சுற்றி நெருக்கிப் பின்னப்பட்ட வடிவங்கள் அழிந்து தொடர்புகள் அறுந்து வெளிச்சமென
காலம் வெளிப்படும் சித்திரத்தை அளித்து காலத்தை உணரச்செய்வதுடன் அபியின் கவிதைசெயல்முறையையும்
புரிந்து கொள்ள செய்கிறது.
***
***
0 comments:
Post a Comment