1
மலை
தத்தளிப்பது
போன்று
குளம்
காட்டும் சித்திரம்
கம்பீரமான,
பலமான
கரையில்லை,
எனினும்
மெய்யாகவே
மலையின்
உடைவு அது
நிரம்பி
வழிந்திடினும்
வெளியேற
முடியாதது
பறந்து
செல்வதும்
திரும்பி
வருவதுமான
பறவையை
அசைந்தசைந்து
பிடித்திழுக்க
முனைகிறது
போதாதென்று
அது
இருந்த
மரத்தை
யாரோ
வெட்டிக் கொண்டிருக்கிறார்கள்
***
2
கொடிமரத்தின்
இரு
கயிறேறி
திகம்பரமாய்
பறக்கிறது
காற்று
எண்ணெய்க்குள்
வழுவி
விடாது
தன்னிருப்பில்
எரிகிறது
அக்னி
கரையாது
மூழ்கும்
திருமேனிக்கு
தீர்த்தவாரி
மண்டபப்
படியேறும்
நதிப்புனல்
ஒப்பனையின்
எழில்
நிறைந்த
இறையின்
சொல்லில்
நெற்றி
அணிந்தது
திருமண்
மறைந்திலாது
தெரியும்
ஒன்றுதான்
இக்கோவில்
தூணிலிருந்து
பிளந்து வரும் வெளி
***
3
மிருகங்கள்
பூத
கணங்கள்
அஷ்டதிக்
பாலகர்கள்
நாட்டியப்
பெண்கள்
இசைப்பாணர்கள்
ரிஷிகள்
கடவுளர்கள்
அத்தனையையும்
செதுக்கிச்
சுமந்து
நானிழுத்து
ஏன்
வர
வேண்டும்
இச்சுமைகளின்றி
மனம்
பறந்த
போது
நிலை
கொண்டது
தேர்
***
4
அந்தந்த
பொழுதுகள்
சக்கரமென
சுற்றி
வரும்
சலித்து
நடக்கையில்
கல்லெறிந்த
குளம்
வட்டத்தைக்
காட்டியது
குதித்து
மூழ்கினேன்
சக்கரம்
என்னிலிருந்ததை
கண்டு
கொண்டேன்
இப்போது
நானொரு
சுதர்சனன்…!
***
0 comments:
Post a Comment