கிர்ரென்று மோட்டார் ஊர்ந்தது
அழுகை நின்றது
குதித்தான்
சிரித்தான் அம்பி கைதட்டி.
நரை தட்டிய
நானும்
அதிசயித்தேன்
விசையின் ஆற்றல்
என்னே!
பிள்ளை மனக்கவியை
அறிவுடன் நினைத்தேன்.
“விளையாட்டு
வில்வண்டியே
அன்று போலின்றும்
உன்னைக் கண்டு
மனம் துள்ளுகிறேன்
என்றும்
மாறாதிருப்பேனாக
அல்லது சாவேனாக”
என்றேன்.
இரும்புச்
சுருளின் மூலக அமைப்பை,
உண்ட ஆற்றலை
மீண்டும் தருவதை
நினைந்து நினைந்து
அதிசயித்தேன்
திடீரென ஒரு
நினைவு—
பானகத் துரும்பு—
மகிழ்ச்சியின்
கறுநிழல்
அம்பி அழுதான்.
அம்மாள்
விரட்டினாள்.
முடுக்கிய
விசைபோல் கடைத்தெரு அடைந்தேன்
வில்வண்டி
வாங்கினேன்.
அதிசயப்பொருள்—
அதுவா?
நானா?
(‘எழுத்து’ இதழ் 62, பிப்ரவரி 1964)
***
[எம்.எஸ். கல்யாணசுந்தரம் எழுதிக் கிடைத்துள்ள ஒரே கவிதை இது. ‘எழுத்து’ இதழில் ‘ம.சீ. கல்யாணசுந்தரம்’ என்று தமிழ் முன்னெழுத்துகளுடன் வெளியாகியுள்ளது. (ஆ-ர்)]
***
எம்.எஸ். கல்யாணசுந்தரம் தமிழ் விக்கி பக்கம்
***
0 comments:
Post a Comment