க.நா.சு வின் கவிதைக் கலை - ஸ்ரீனிவாச கோபாலன்
1
தமிழ்க்கவிதைக்கு கிழடு தட்டிய பருவம் இது என்பதில் யாருக்கும் சந்தேகம்
இருக்க முடியாது. உலக இலக்கியத்தை நோக்கினோமானால் இரண்டாயிரம் வருஷங்கள் வளர்ந்தது
உயிருள்ள கவிதையாக இருக்க முடியாது என்பது தெரியவரும்; அப்படி எந்தக்கவிதையும் இருந்ததில்லை. இப்போது
தமிழ்ப் ெருமை, தமிழ்க் கவிதை
சுமையாக இருக்கிறது - சுவையாக இல்லை. இன்று எழுதப்படுகிற கவிதையைவிட வசனம்
உயிருள்ளதாக இருக்கிறது - உயர்ந்ததாக இருக்கிறது.
கவிதையரசி மீண்டும் முன்போலத் தமிழில் கொலுவீற்றிருக்க வேண்டும் -உயிருள்ளவளாக
இருக்க வேண்டும் என்றால் புது முயற்சிகள் புதுசோதனைகள் நடைபெற்றாக வேண்டும்.
யாப்பு, எதுகை மோனை இருப்பது தவறில்லை. நல்ல கவிதைக்கு முட்டுக்கட்டை அதிலில்லை.
இன்றைய வாழ்க்கையின் சிக்கலைப் பிரதிபலிக்காமல், இன்றையச் சூழலின் குழப்பத்தை எடுத்துக்காட்டாமல்,
பழமையான மனப்பான்மையே, புதுக்கவிதை பிறப்பதற்குத் தடையாக உள்ளது.
யாப்பு அமைதியுள்ள கவிதையும் புதுக்கவிதையாக அமையலாம் என்று சொன்னால் அது
மிகையாகப்படலாம். ஆனால் தளைதட்டுகிற சீர் அற்ற கவிதைதான் புதுக்கவிதை என்பது சரியல்ல.
பழைய தாமரையையும் சந்திரனையும் உருவகங்களையும் புதுமுறையில் உபயோகித்துவிட்டதனால்
மட்டும் புதுக் கவிதை பிறக்காது.
புதுக்கவிதைக்கு அடிப்படையான இரண்டொரு கருத்துக்கள் — (ஒன்று) இன்றைய
வாழ்க்கைச் சிக்கலை அது உள்ளபடி எடுத்துக்காட்ட வேண்டும். (இரண்டு) சிடுக்கைச்
சிடுக்காகக் காட்ட வேண்டும். எளிமை நாடிய மகாத்மா காந்தியாலும்கூட நமது வாழ்வை
எளிமையானதாக ஆக்க இயலவில்லை. சிடுக்கு விழுந்தது சிடுக்குத்தான். சிடுக்கில்லை
என்று மூடி மறைக்கக் கூடாது. (மூன்று) வார்த்தைகளை, சிந்தனைகளை, உடைத்து புதுவளத்துடன் கையாள வேண்டும். பழங்கதையையே மீண்டும் பேசுவதில்
சாரமில்லை - பழைய வார்த்தைகளை அப்படியே உபயோகிப்பது சரியல்ல, பழைய வார்த்தைசேர்க்கைகள்
அரசியல்வாதிகளின் பிரசங்கங்களுக்குத் தவிர இன்று வேறு எதற்கும் பிரயோசனப்படா.
இந்த மாதிரி எழுதப்படுகிற புதுக் கவிதைகளுக்கு இலக்கிய வட்டம் அவ்வப்போது இடம்
தந்து வரும். புதுக் கவிதையில் விஷயம், நோக்குத்தான் புதிதே தவிர, புதுமை வெறி கொள்வதாக இருக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை. பழமை என்பது போல
புதுமையும் ஒரு கட்டாயமாகிலிடலாம் – தளையாகிவிடலாம். நல்ல என்பதற்கும் பழைய
அர்த்தத்தை மறந்துவிட்டு யாப்புள்ள செய்யுளிலும் புதுக்கவிதை செய்யலாம் என்பதை
நினைவில் வைக்க வேண்டும். யாராவது செய்கிறார்களா என்பதல்ல விஷயம் - செய்ய முடியும்;
இன்றில்லாவிட்டால் என்றாவது
செய்வார்கள் என்பதுதான் விஷயம். புதுக் கவிதை தனது கவிதை உத்திகளில் பழைய சங்க
இலக்கியங்களுக்கு சென்று அவற்றின் உத்திகளைக் கையாளுவதில் தவறில்லை என்றே நான் சொல்லுவேன்.
கவிதையைப் பற்றி சொல்லப்படுகிற எந்த விஷயத்தையும் விட, எந்த கருத்தையும் விடக் கவிதை
முக்கியமானது. இரண்டு மூன்று பக்க புதுக்கவிதை முயற்சிகளுக்கு இருபது முப்பது
வரி முன்னுரை அனாவசியம். அலசிப் பார்த்து ரஸனையுண்டாக்க முயலுபவர்கள் தோல்வியுறுவார்கள்.
ரஸனை நிற்கும். அலசல் முறை நிலைக்காது. ஒன்றன் பின் ஒன்றாகப் பல அலசல் அலைகள்
தேவைப்படும்.
புதுக் கவிதையைத் திரும்பத் திரும்ப எழுதிஎழுதித்தான் பழக்கத்துக்குக்
கொண்டுவர வேண்டும். இது ஒரு சோதனைத்துறை - அவசியம் செய்து பின்னர் மீண்டும்
தமிழின் கவிதைத் தரம் உயர வேண்டும். இன்னொரு கம்பன், இளங்கோவடிகள் தோன்றவேண்டிய சூழ்நிலை ஏற்படும்,
அதற்காக நாம் உழைக்கலாம் என்று
நம்புகிற எழுத்தாளர்கள், செய்ய
வேண்டும். “எனக்கு இது பிடிக்காது - கவிதை உண்டு, புதுக்கவிதை கிடையாது” என்று சொல்லி சிலர்
ஒதுங்கிவிடலாம். அவர்கள் போகட்டும். சிலராவது திரும்பத்திரும்ப உரக்கப் படித்து
அனுபவிக்கப் பழகிக்கொண்டால்தான் புதுக் கவிதை அனுபவமாக அமையும். கவிதைக்கு இசை
நயம் அவசியம் என்று பழகிக்கொண்டுவிட்டவர்களுக்கு புதுக்கவிதை இசைநயத்தை மறுப்பது
போல ஒரு பிரமை ஏற்படலாம். இது ஒரளவுக்கு உண்மையும்தான் இசைநயத்தோடு இருப்பது இன்று
உயர் கவிதையாக முடியாது. புதுக் கவிதையில் விஷயம், கருத்து, உருவம் முக்கியம். சிக்கலும் சிடுக்கும் அதன்
ஜீவாதாரம். வேகமின்மை அதன் உரிமை; அதனால் இசைநயம் இல்லாமையும் அதன் சிறப்பாகும்.
***
‘இலக்கிய வட்டம்’, இதழ் 10, 27-3-1964
2
“ஏனய்யா இந்த மாதிரிக் கவிதையல்லாத கவிதைகளையெல்லாம் போட்டு எங்கள் பிராணனை
வாங்குகிறீர்” என்று ஒரு நண்பர் புதுக் கவிதை முயற்சிகளைக் குறித்து எழுதிக்
கேட்டுள்ளார்.
‘மணிக்கொடி’ காலத்தில் சொ.வி. புதுமைப்பித்தன் என்கிற பெயரில் சிறுகதைகள்
எழுதத் தொடங்கிய காலத்தில் இதெல்லாம் கதைகளா - ஐயா கழுத்தறுப்பு என்று சொன்னவர்கள்
உண்டு.
அவர்களே இப்போது புதுமைப்பித்தன் என்றால் ஆஹா என்கிறார்கள்.
இந்தப் பாராட்டுக்கும் கண்டனத்துக்கும் அர்த்தமேயில்லை.
சிறுகதை என்கிற உருவம் போல புதுக் கவிதை என்கிற உருவம் தோன்றிவிட்டது - நிலைக்க
அதிக நாள் பிடிக்காது. தமிழில் செய்யுள் எழுதுவது மிகவும் சுலபமான காரியமாகி, எழுதப்பட்ட செய்யுள் எல்லாம் கவிதை
என்று சொல்கிற அளவுக்கு வந்தாகிவிட்டது. இது எல்லா மொழி இலக்கியங்களுக்குமே
பொதுவாக உள்ள விஷயம்தான்.
மரபு என்பதை மீறியே மரபுக்குப் புது அம்சங்களைச் சேர்க்கவேண்டியது அவசியமாகிறது.
இந்த அர்த்தத்திலே புரட்சியும் எல்லா மரபுகளிலுமே உள்ள ஒரு அம்சம்தான்.
கவிதை வழிகள் தடம் தேய்ந்து, தென்றல் காயவும், மதி தகிக்கவும், மலர் துர்க்கந்தம் வீசவும் (காதலால் அல்ல) தொடங்கிவிட்டது என்பதைத்
தற்காலக் கவிதையைப் படிப்பவர்களில் சிலராவது ஏற்றுக்கொள்வார்கள்.
இந்தக் கவிதை மொழி, வார்த்தைகள்,
பொருள்கள், மதி, மலர், தென்றல்,
ஒளி, இத்யாதியெல்லாம் உபயோகத்தால் தேய்ந்து
தேய்ந்து உருக்குலைந்துவிட்டன.
பழைய சந்தங்கள் போக, புதுச்
சந்தங்கள், புது வார்த்தைச்
சேர்க்கைகள், புது உவமைகள் இன்றுள்ள
நிலைமைக்கேற்ப தோன்றியாக வேண்டும்.
லட்சியத் தச்சன் தேடிக் கைப்பிரம்பு இழைப்பதும் உருப்படாத வழியில் பானைவனையும்
குயவனின் பாண்டம் உருக்குலைவதும் உருக்குலைந்த, சிறகொடிந்த, வலி குன்றிய சிந்தனைகள். இவை இன்று
கவிதையேயாகமாட்டா.
புதுக் கவிதை புது வாழ்வின் எதிரொலியாம். வாழ்க்கையின் இன்றையச் சிக்கலை சிக்கலாகக்
காட்டும் சிந்தனை வெறியாம். சிக்கலைச் சுலபமாக்கி சுகம் தேடும் மனப்பிராந்தி
அன்று.
புதுக் கவிதை சங்ககாலத்துப் பேச்சுச் சந்தத்தை அஸ்திவாரமாக்கிக்கொண்டு எழுதக்
கூடாது என்பதில்லை.
யாதும் ஊரே, யாவரும்
கேளிர் என்கிற சந்தம் எல்லாக் காலத்துக்கும் பொதுவானதுதான்.
புதுக் கவிதை ஏமாற்றத்தை, ஏக்கத்தைத்தான் எதிரொலிக்க வேண்டுமென்கிற கட்டாயமில்லை. மேலை நாடுகளில்
அப்படியென்றால், ஆனைக்கு அர்ரம் என்பதில்லை.
புதுக் கவிதை, சிறுகதை,
நாடகம், நாவல் போல, விமரிசனம் போல இலக்கியத்தில் - தமிழ்
இயக்கியத்தில் ஒரு புதுத்துறை.
அது இன்னும் கதையாகிவிடவில்லை. புதுக் கவிதை எழுதுகிற பத்திருபது பேர்
தொடர்ந்து எழுதிவந்தால் புதுக் கவிதை கவிதையாகிற பக்குவம் பெறலாம்.
அதுவரை அது ஒரு சோதனைத்துறை.
0 comments:
Post a Comment