சுட்டும் விரல் சுட்டும் எழில் - கமலதேவி

அமைதியான உச்சிவேளையில் பறவைகளின் குரல்களுக்கிடையில் ஒலிக்கும் சிட்டுக்களின் கிச்கிச் ஒலிகள் அந்த நேரத்து உக்கிரத்திற்கு எங்கிருந்தோ வரக்கூடிய மாற்று. அடர்ந்த வெயிலை இந்த மெல்லிய குரல் என்ன செய்து விட முடியும்? ஆனாலும் அது ஏதோ செய்கிறது.

அப்போது தான் ஈன்ற பசு தன் நாவால் கன்றின் உடலை தன்னிச்சையாக தடவி மாசை எடுப்பதைப்போல இந்த உலகை ஔியாலான தன் கண்களாலேயே அள்ளத்துடிக்கும் துடிப்பை உணரமுடிகிறது. கண்களே உடலான கவிதைகள் இவை.

பார்வை ஒன்று மட்டுமே சிறகடித்துக்கொண்டிருக்கும்

அன்புவெளி

மலர்களை, சறுகுகளை, இலைகளை ,குருவிகளை, புல்வெளியை, மரங்களை தொடும் ஔியை தானும் சென்று தொட்டுவிட துடிக்கும் மொழி. பார்வையின் தழுவலை மொழிக்குள் வைத்து விட எத்தனிக்கும் காட்சி சித்திரங்கள். சிறுவனின் பைக்குள் இருக்கும் ஔிரும் பொன்வண்டுகள். 

புறத்தில்,பார்வையில்,உணர்தலில் அனைத்துமே  ‘ஸ்க்ரோலாக’ ஓடிக்கொண்டிருக்கிறது. மனித உணர்வுகள் கூட மிக வேகமாக ஸ்க்ரோல் ஆவது கொஞ்சம் பதட்டத்தை தருகிறது. இதனால் உள்ளுக்குள் முட்டி மோதி தவிக்கிறது அகம். அகம் ஒருபக்கம் எடை கொண்ட துலாதட்டு போல அந்தரத்தில் ஊசலாடுகிறது. இன்று மட்டுல்ல என்றுமே இது அப்படிதான். அதன் தட்டில் ஏற்றி வைக்கும் அனைத்தையும் ஒரு சிறகசைவின் உலுக்கலில் உதறிவிடுகிறது அகம். ஆனால் அந்த தட்டின் நிகர் மிக மெல்லியது. ஒருதட்டானின் ஔி ஊடுருவும் சிறகைப் போல.

குப்புறக் கிடந்த மலர் ஒன்று

வானத்தைக் சுட்டிக் காட்டிக் கொண்டு

மல்லாந்து கிடந்த மலர் ஒன்று

மண்ணைச் சுட்டிக் காட்டிக்கொண்டு

உதிராத மலர் ஒன்று

எந்தப் பிரச்சனைகளைச் சந்திக்கையிலும்

சந்திக்க வாய்ப்பில்லாமலிருக்கையிலும்

ஔிரும் பேரழகுடன்

சுட்டும் விரல் சுட்டும் எழிலே

தானாக

இந்த உபவனத்தில் மலர்கள் ‘உதிர் மலராகவே’ இருக்கின்றன. அப்படியே உதிர்ந்தாலும் அது பட்டாம்பூச்சியாகிவிடுகிறது. நொடிகளின் ஸ்க்ரோலிற்கு மாற்றாக ‘உதிர்’ இலைகளை வைக்கிறது இந்தக்கவிதைகள்.

மேலும் கவிதை என்பது எப்போதுமே துலாத்தட்டில் விழும் ஒற்றை மலர். அது  தன் மணத்தை இப்பூமி முழுக்க பரப்பி விடலாம் என்று தான் நினைக்கிறது. சொல்லால் அகத்தை நிகர் செய்ய நினைக்கும் கவிஞனைப்போலவே.

முதலில் இயற்கையைப் படைத்தார்

அப்புறம் மனிதனைப் படைத்தார்

அப்புறம் அன்னையைப் படைத்தார்

அப்புறம் கவிஞர்களைப் படைத்ததும்

நிம்மதியாய் துயிலச் சென்றுள்ளார்.

ஆனால் அவர் துயிலச்செல்லும் முன் தன் கண்களை கவிஞனுக்கு அளித்துச்சென்றுள்ளார். அதன் தீட்சண்யத்தால் மட்டுமே ஒரு பிடி அரிசியை கைகளில் வைத்துக்கொண்டு ‘எத்தனை கோடி இன்பம் வைத்தாய் எங்கள் இறைவா’ என்று சொல்ல இயலும். ஸ்க்ரோல்கள் போல இயங்கும் நகர் நடுவே அதே தீட்சண்யத்தால் தான்,

ஔிவண்ணத்திலிருந்து

மெல்ல மெல்ல பச்சையாகி

பழுத்து பொன்னாகி

உதிர்ந்த இலைகள்

மண் வண்ணமாகி

மண்ணோடு கலக்க

பரந்து கிடக்கும்

பொற்களமாய்…

இந்த நிலத்தை காண முடிகிறது. நிலம் பொன்னாகும் இடத்தில் அகத்திலும் அனிச்சையாய் ஒரு சுடர் அசையத்தொடங்குகிறது. ஸ்க்ரோல்களுக்கு மாற்றான சுடர்கள் இந்தக்கவிதைகள்.

சுடராய் இருக்கும் அந்த ஔி எங்கோ முடிவிலின் அடிவானமாக மறுகிறது. இங்கு ஔி என்பது ஔியாக இருந்து மெல்ல மெல்ல ஆதுரமாய் மாறுவதை காணமுடிகிறது.  கவிஞன் மானுடத்திற்கான பாதையாக ஔியை உணர்கிறான். ஔியால் உலகை மாற்றமுடியும் என்று கவிஞனல்லாது யாரால் நம்பமுடியும்.   கவிஞன் ஒரு தாவரம் போல ஔிக்காக தவமிருக்கிறான். தன்னுள் அதை நிறைத்துக்கொண்டப் பின் அது மானுட ஔிக்கான ஏக்கமாகிறது. இந்த கவிதை வெளியில் ஔி என்பது வெறும் ஔிமட்டும் தானா?

பூக்களை நினைவூட்டின

பகலில் ஔிர்ந்த விளக்குகள்

பூக்கள்

இருளால் தான் ஔி வீசுகின்றனவா?

பிரிவில்லாத பேரொளியை அல்லவா

பாடுகின்றன பூக்கள்

அந்த ஔி மெல்ல மெல்ல உணர்வாக மாறும் நகர்வை இந்தக்கவிதைகளில் அடையமுடிகிறது. அது யாதும் ஊரே என்ற வைரத்தின் பலநூறுபட்டைகளில் ஒரு பட்டை ஔி. ஈராயிரம் ஆண்டுகளாக கவிஞன் உருட்டிப்பார்க்கும் சோழி இதுதானா என்று தோன்றியது. இந்த தாயம் விழ வேண்டும் என்று தான் காலமெல்லாம் இந்த மொழி விளையாட்டு. 

உண்மையை

முழுமுற்றான உலக நன்மையை

கடவுளின் ராஜ்ஜியத்தை 

கண்டுபிடித்துவிட 

யாதொரு பாதையும் இல்லையா…

என்று ஒருகவிதையில் கேள்வி கேட்டு இன்னொரு கவிதையில் தானே சொல்லி கொள்ளும் பதிலாக இந்தக்கவிதை உள்ளது.

உனக்கு மட்டுமல்ல

உலகு புரக்க

நீ பெற்றுக் கொண்டேயாக வேண்டிய

ஒன்று உண்டு

ஓட்டையில்லாத

தூய்மையான

பிச்சா பாத்திரத்துடன் வந்து நில்

நானும் உன்னிடம் வந்து

இப்படி இரந்து நிற்பதைப் போலவே

இரந்து நிற்பதும் பெறுவதும் ஒன்றே தான். அது இதுவரை நிறையாத பாத்திரம். அதை நோக்கியே இறுதியில் கலை இலக்கியம் வந்து நிற்கிறது. அது பல பெயர்களில் சுட்டப்படுவது. அது மண்ணில் கனி என ஆவது. அந்த ஔியே இந்த வாழ்வை  தித்திப்பாக்க வந்துவிட்ட புளிப்பில் நிறைவது. எங்கும் பசுமையை விரிக்கும் ஈரம். விண்ணில் மழை என கனிவது. அதையே கவிமனம் கன்றுகுட்டியாய் முட்டிமுட்டி பார்க்கிறது. மிக ஆச்சரியமாக இங்கு பாறையாய் அல்லாமல் பசுவின் மடி போன்ற ஒன்றாக இருக்கிறது. மனிதனில் அதற்கு விதவிதமான பெயர்கள். அவனால் ஒரு பெயரில் சுட்ட முடியாத அது இந்தத்தொகுப்பில் ஔி என்று ஆகி வந்துள்ளது. இந்த ஔியை ஒரு சுட்டு பொருளாக்கிக்கொண்டு இந்தக்கவிதைகள் மண்ணிலிருந்து விண்நோக்கி எழதுடிக்கும் ஔியை உணர்த்த முயல்கிறது. மண்ணிலிருந்து மனிதன் பறந்தெழும் விண் எதுவாக இருக்கும்? மண்ணில் விழுந்து அனைத்தையும் ஔிர வைக்கும் ஒன்று மனிதனுக்கு அளிப்பது என்ன? என்று தொட்டு தொட்டு எடுக்கும் கவிதைகள் இந்த அனைத்தையும் உணரும் பிரக்ஞையே தன்னுள் உள்ள ஔி என்று கண்டு கொள்கிறது. அந்த பிரக்ஞையின் பார்வை தளத்தை தொட முயலும் ஒரு தேனியின் தேடல். 

ஒருபக்கம் உலகை படைத்துவிட்டு நிம்மதியாய் துயில சென்றவனின் பிரதிநிதியாகவும் மறுபக்கம் அவன் படைப்பாகவும் மாறி மாறி நின்று விளையாடும் விளையாட்டாகவும் இந்தக்கவிதைகள் இருப்பதால், தித்திக்க வந்த புளிப்பில் உள்ள இனிப்பை சென்று தொட்டு தொட்டு எடுக்கும் ஔிகீற்றுகளாய் காணும் காட்சிகளை துலங்க செய்கின்றன.

***

தேவதேவன் தமிழ் விக்கி பக்கம்

***

Share:

0 comments:

Post a Comment

Powered by Blogger.

புதுக் கவிதை இரண்டு குறிப்புகள் - க.நா. சுப்ரமணியம்

[‘இலக்கிய வட்டம்’ இதழில் ‘புதுக்கவிதை’ என்கிற தலைப்பில் வெளியான இருவேறு குறிப்புகள் இந்த இதழில் இடம்பெறுகின்றன. முதலில் உள்ளது ‘மயன் கவிதைகள...

தேடு

Labels

அபி (11) அரவிந்தர் (1) அறிமுகம் (1) ஆக்டேவியா பாஸ் (2) ஆத்மாநாம் (2) ஆனந்த் குமார் (7) இசை (5) இந்தி (5) இளங்கோ கிருஷ்ணன் (2) உபநிடதம் (1) உரையாடல் (2) எதிர்வின (2) எம். கோபாலகிருஷ்ணன் (1) எஸ். ராமகிருஷ்ண (1) எஹுதா அமிக்ஹாய் (1) ஓக்ட்டாவியோ ப்பாஸ் (1) க. மோகனரங்கன் (4) க.நா. சுப்பிரமணியம் (3) க.நா. சுப்ரமணியம் (1) கட்டுரை (7) கப (1) கமலதேவி (1) கம்பன் (1) கலாப்ரியா (1) கலீல் கிப்ரான் (1) கல்பற்றா நாராயணன் (4) கல்பனா ஜெயகாந்த் (2) கவிதை (171) கவிதையின் மத (1) காரைக்கால் அம்மைய (1) காளிதாசன் (1) காஸ்மிக் தூசி (1) கிம் சின் டே (1) குமரகுருபரன் விருது (5) குன்வர் நாராயண் (1) கைலாஷ் சிவன் (1) கோ யுன் (1) ச. துரை (2) சங்க இலக்கியம் (2) சதீஷ்குமார் சீனிவாசன் (6) சந்திரா தங்கராஜ் (1) சபரிநாதன் (3) சீர்மை பதிப்பகம் (1) சுகுமாரன் (3) சுந்தர ராமசாமி (2) ஞானக்கூத்தன் (1) தாகூர் (1) தேவதச்சன் (4) தேவதேவன் (22) தேவேந்திர பூபதி (1) நகுலன் (3) நெகிழன் (1) நேர்காண (1) நேர்காணல் (1) பாபு பிருத்விராஜ் (1) பிப்ரவரி 2022 (2) பிரதீப் கென்னடி (1) பிரமிள் (3) பிரான்சிஸ் (1) பூவன்னா சந்திரசேக (1) பெரு. விஷ்ணுகுமார் (2) பெருந்தேவி (1) பொன்முகலி (1) போகன் சங்கர் (2) போர்ஹே (1) மங்களேஷ் டப்ரால் (1) மதார் (4) மரபு கவிதை (7) மனுஷ்யபுத்திரன் (1) மா. அரங்கநாதன் (1) மொழிபெயர்ப்பு (12) மோகனரங்கன் (1) யவனிகா ஸ்ரீராம் (2) யான் வாங் லீ (1) யுவன் சந்திரசேகர் (15) யூமா வாசுக (2) ரகுவம்சம் (1) ரமாகாந்த் ரத் (1) ராமாயணம் (1) ரியோகான் (1) லட்சுமி மணிவண்ணன் (2) லதா (1) லாரா கில்பின் (1) வ. அதியம (1) வண்ணதாசன் (2) வாசகர் (1) வாலஸ் ஸ்டீபன் (1) விக்ரமாதித்யன் (6) விவாத (1) வீரான்குட்டி (3) வே. நி. சூர்யா (5) வே.நி. சூர்யா (6) வேணு தயாநிதி (1) ஜெ. ரோஸ்ல (1) ஜெயமோகன் (2) ஜென் (1) ஷங்கர் ராமசுப்ரமணியன் (1) ஷாஅ (1) ஷெல்லி (1) ஸென் கவிதை (1) ஸ்ரீநேசன் (1)

Most Popular

Blog Archive