காலம், கவிதை - இரண்டு உரையாடல்கள் - வே.நி. சூர்யா
கவிதையை எப்படி புரிந்து கொள்வது என்ற கேள்விக்கான பதில் எப்போதும் தீர்மானமற்ற ஒன்றாகவே எஞ்சி நிற்கும். வே.நி. சூர்யாவின் இந்தக் கட்டுரை அந்த பதிலை நெருங்க முயலும் ஒன்று.
- எழுத்தாளர் எம். கோபாலகிருஷ்ணன்
***
முக்கியமான பிரச்சனைகளை அடர்த்தியான மொழியில் எழுதி இருப்பது சிறப்பு. உரையாடல்தன்மை வாசிப்பை இளகுவாக்கி இருக்கிறது. வாசகனை நிதானமாக யோசிக்கவைக்கிறது. அதே சமயம், கலையையும், கலைப்ப்படைப்பையும் ரொமாண்டிக் வட்டத்தில் கொண்டுபோய் வைத்திருக்கிறது. கலைஞனின் தலைக்குப்பின் ஒளிவட்டத்தை வைத்து அலங்கரித்திருக்கிறதுபோல தோன்றுகிறது.
- மொழிபெயர்ப்பாளர் செங்கதிர்
***
உங்களுக்கு நல்ல வரிகளை கோடிடும் பழக்கம் உண்டென்றால் இந்தக் கட்டுரையின் முக்கால்வாசி வரிகளை கோடிட வேண்டியிருக்கும்.
- கவிஞர் இசை (முகநூல் பதிவு)
***
வே.நி. சூர்யாவின் “இரு உரையாடல்கள்” கட்டுரையை வாசித்தேன். அடுத்த பல பத்தாண்டுகளுக்கு மனதில் இந்த உரையாடல்கள் நிலைக்கப் போகின்றன. இவை கவிதைகள் குறித்தான உரையாடல்களாக சுருக்கியிருப்பது மட்டுமே இதன் மீதான எதிர்மறை விமர்சனம். கலையின் எந்த வடிவங்களை இட்டு நிரப்பினாலும் கட்டுரையின் பொருள் சாலப் பொருந்தும்.
கவிஞர் இசை குறிப்பிட்டது போல் இதன் ஒவ்வொரு வரியையும் அடிகோடிட வேண்டும். மனப்பாடம் செய்ய வேண்டும். மனதுள் தர்க்கம் புரிய வேண்டும். இக்கட்டுரை கலை வடிவத்தைக் காட்டிலும் மனித மனத்தையே மேலதிகமாக பகுப்பாய்வு செய்கிறது.
- கிருஷ்ண மூர்த்தி (முகநூல் பதிவிலிருந்து)
***
0 comments:
Post a Comment