வீரான்குட்டி கவிதைகள்

 வாசிப்பு 

வலையில் சிக்கிய பட்டாம்பூச்சி                                                                  

சிலந்தியிடம் சொன்னது 

உன்னுடைய வலை 

ஒரு அபாரமான கலைப்படைப்பு 

அதில் மூழ்கி 

இல்லாமலாகவே நான் வந்தேன்.

கலைக்கு நம்மை 

இழுத்து முறுக்கிக் கொல்வதற்கான

வல்லமை வேண்டும்.

ஒவ்வொரு வாசிப்பிலும் 

குருதி கொதிக்க 

மூச்சடைத்து துடிக்கவைக்கும் 

உனது வலையில் 

எனக்கது முழுமையாக 

கிடைக்கப்பெறட்டும்

"சிறகுள்ள வாசகியே,

மரணத்தருவாயிலும் 

உன்னால் இப்படியெல்லாம் 

சிந்திக்க முடிகிறதே" என 

சிரித்தபடி சிலந்தி 

வலையை மெல்ல அதனைச் சுற்றி 

இறுக்கத் தொடங்கியது 

"துடிக்கத் துடிக்க 

என்னை நீ உனதாக்கிக்கொள்"

கண்களை மூடி 

பட்டாம்பூச்சி ஊக்கப்படுத்தியது

"கலைப்படைப்பை அணுக 

புனித தூரம் ஒன்று உண்டு"

வலையில் சிக்காமல் 

சுற்றிப் பறந்த உயிர்கள் 

அழைத்துச் சொன்னது 

பட்டாம்பூச்சிக்கு கேட்கவில்லை 

ஒவ்வொரு வாசிப்பும் 

ஒவ்வொரு மரணம் 

என்ற அறிதலில் 

அனுபூதியின்

கடைசி இறுகி அணைத்தலின் ஏக்கத்தில் 

ஒரு ஊஞ்சலில் கிடப்பது போல 

அது சாய்ந்து கொண்டது

***

நியூட்டனும் ஆப்பிளும் - ஒரு முரண் கவிதை

"Gravitation is not responsible 

for people falling in love. "

                                          Albert Einstein

“ஒரு ஆப்பிளால்

 நியூட்டன் எப்படி 

இவ்வளவு பெரிய

தத்துவத்தில் வீழ்ந்தார்?

வியப்பாக உள்ளது”

“அதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை

தலையில் விழுந்த ஆப்பிளை எடுத்து 

மேலே பார்த்த நியூட்டன்

அங்கே ஆப்பிள் மரத்தை

காணவில்லை.

எங்கிருந்து வீழ்ந்தது ஆப்பிள்?

விண்ணிலிருந்து வீழ்ந்திருக்கலாம்.

ஆப்பிளில் பதிந்திருந்த

பற்தடங்கள் சொல்லின.

ஏதேன் தோட்டம் ஞாபகத்தில் வந்தது 

சொர்க்கத்தின் முதல் காதலர்கள்

கடித்த கனி

பிரபஞ்சத்தின் ஆகப் பெரிய

ஈர்ப்பு விசையைப் பிழைத்து 

ஏராளம் ஒளியாண்டுகள் கடந்துவந்த

ஞானப்பழம்

விலக்கப்பட்ட கனியை

கையில் வத்திருந்தது குறித்து

கேட்க வந்த மதகுருவிடம்

நியூட்டன் சொன்ன பொய்யாய் இருக்கலாம் 

'புவியீர்ப்பு விசை'

அதன் பிறகு

நியூட்டனை நிரூபிக்க 

எல்லா பொருட்களும்

பூமியிலேயே விழவேண்டியிருந்தது 

என்பதுதான் உண்மை

தொடுக்கப்பட்ட அம்புகள்

ஏவுகணைகள்

நடனமங்கையின் பாதங்களென

புவியீர்ப்பின் விதியை

சவால்விட வந்த எல்லாமும்

அதை மேலும் 

உறுதிப்படுத்தவே செய்தன 

ஆனால்

மரணத்திற்கு பின்

பூமியிலிருந்து சொர்கத்திற்கு

உயர்ந்துயர்ந்து செல்லும்

நியூட்டன் தத்தாவை கண்ட 

குழந்தையின் சாட்சியாய்

நான் சொல்வேன்:

ஒவ்வொரு அற்புதமும்

நிகராகவும் அதற்கு எதிராகவுமான

ஒரு முரணை

தன்னகத்தே வைத்திருக்கிறதென "

- வீரான்குட்டி

தமிழில் (கவிஞர் ஆனந்த் குமார்)

***

Share:

0 comments:

Post a Comment

Powered by Blogger.

கவிதை - இந்திய, உலக இலக்கியப்‌ போக்குகள் – 2: க.நா.சு

மனித இனத்தின்‌ முதல்‌ இலக்கிய வடிவம்‌ கவிதையே காவியங்களை பற்றி இவ்வளவு போதும்‌. இப்போது கவிதை என்று பார்க்கலாம்‌. பொதுவாக உலக மொழிகளில்‌ எல்...

தேடு

முந்தைய இதழ்கள்

Labels

அபி (12) அரவிந்தர் (1) அறிமுகம் (1) ஆக்டேவியா பாஸ் (2) ஆதித்ய ஸ்ரீநிவாஸ் (1) ஆதிமந்திய (1) ஆத்மாநாம் (2) ஆனந்த் குமார் (7) இசை (8) இந்தி (7) இளங்கோ கிருஷ்ணன் (2) உபநிடதம் (1) உரையாடல் (2) உன்னத சங்கீத (1) எதிர்வின (2) எம். கோபாலகிருஷ்ணன் (2) எம்.எஸ். கல்யாணசுந்தரம் (1) எஸ். ராமகிருஷ்ண (1) எஹுதா அமிக்ஹாய் (1) ஓக்ட்டாவியோ ப்பாஸ் (1) க. மோகனரங்கன் (5) க.நா. சுப்பிரமணியம் (3) க.நா. சுப்ரமணியம் (7) கட்டுரை (11) கண்டராதித்தன் (1) கப (1) கமலதேவி (1) கம்பன் (1) கலாப்ரியா (1) கலீல் கிப்ரான் (2) கல்பற்றா நாராயணன் (4) கல்பனா ஜெயகாந்த் (2) கவிதை (201) கவிதையின் மத (1) காரைக்கால் அம்மைய (1) காரைக்கால் அம்மையார் (1) காளிதாசன் (1) காஸ்மிக் தூசி (1) கிம் சின் டே (1) கிரிராஜ் கிராது (3) குமரகுருபரன் விருது (5) குன்வர் நாராயண் (1) கே. சச்சிதானந்தன் (1) கேரி ஸ்னிடர் (1) கைலாஷ் சிவன் (1) கோ யுன் (1) ச. துரை (3) சங்க இலக்கியம் (3) சதீஷ்குமார் சீனிவாசன் (6) சந்திரா தங்கராஜ் (1) சபரிநாதன் (4) சீர்மை பதிப்பகம் (1) சுகுமாரன் (3) சுந்தர ராமசாமி (2) ஞானக்கூத்தன் (1) தாகூர் (1) தேவதச்சன் (6) தேவதேவன் (24) தேவேந்திர பூபதி (1) நகுலன் (3) நெகிழன் (1) நேர்காண (1) நேர்காணல் (1) பாபு பிரித்விராஜ் (1) பாபு பிருத்விராஜ் (1) பிப்ரவரி 2022 (2) பிரதீப் கென்னடி (1) பிரமிள் (4) பிரான்சிஸ் (1) பூவன்னா சந்திரசேக (1) பெரு. விஷ்ணுகுமார் (2) பெருந்தேவி (1) பைபிள் (1) பொன்முகலி (1) போகன் சங்கர் (2) போர்ஹே (1) மங்களேஷ் டப்ரால் (1) மதார் (5) மரபு கவிதை (8) மலையாள (1) மலையாளம் (1) மனுஷ்யபுத்திரன் (1) மா. அரங்கநாதன் (1) முகாம் (2) மொழிபெயர்ப்பு (16) மோகனரங்கன் (1) யவனிகா ஸ்ரீராம் (2) யான் வாங் லீ (1) யுவன் சந்திரசேகர் (15) யூமா வாசுக (2) ரகுவம்சம் (1) ரமாகாந்த் ரத் (1) ராமாயணம் (1) ரியோகான் (1) லட்சுமி மணிவண்ணன் (2) லதா (1) லாரா கில்பின் (1) வ. அதியம (1) வண்ணதாசன் (3) வாசகர் (1) வாசிப்பு (1) வாலஸ் ஸ்டீபன் (1) விக்ரமாதித்யன் (7) விவாத (1) வீரான்குட்டி (3) வே. நி. சூர்யா (5) வே.நி. சூர்யா (6) வேணு தயாநிதி (1) வேணு வேட்ராய (1) ஜெ. ரோஸ்ல (1) ஜெயமோகன் (2) ஜெயமோகன் தேர்வு (1) ஜென் (1) ஷங்கர் ராமசுப்ரமணியன் (1) ஷாஅ (1) ஷெல்லி (1) ஸென் கவிதை (1) ஸ்ரீநேசன் (1)

Most Popular

Blog Archive