கல்பனா ஜெயகாந்தின் கவிதைளில் திரும்பத் திரும்ப வந்துகொண்டே இருப்பது ‘இனிமை’. நிறைய கவிதைகளின் தலைப்பே இனிமையைச் சுட்டுவதாக இருக்கிறது. ஒரு கவிதையில் (தேன் பிசுக்கு) தேன்பிசுக்கில் சிக்கிமடிய தன்னை ஒப்புக்கொடுக்கும் மனம் மற்றொன்றில் வீட்டில் நிறையும் மெளனத்தின் ஒலியை ‘இனிப்பென்று’ சுவைக்கிறது.
இந்தக் கவிதை பிரிவை அதன் முழுமையோடு இனிமையென ஏற்றுக்கொள்கிறது. தேனின் ஒழுகல் போல் சாந்தமாய் நடக்கும் நிறைவு. இனிப்பென தன்னை நிறைத்துவிட்டுப் போவதை பிரிகிறதென எப்படிச் சொல்ல முடியும்.
இந்தக் கவிதை பிரிவை அதன் முழுமையோடு இனிமையென ஏற்றுக்கொள்கிறது. தேனின் ஒழுகல் போல் சாந்தமாய் நடக்கும் நிறைவு. இனிப்பென தன்னை நிறைத்துவிட்டுப் போவதை பிரிகிறதென எப்படிச் சொல்ல முடியும்.
***
தேனின் ஒழுக்கு
முதன் முதலில் உன்னைப் பார்த்த போது
காற்றிலாடும் கொடியாய் படபடத்துக் கொண்டிருந்தாய்
துள்ளுதல் என்றே அறிந்திருந்தேன் உன்னை
சிட்டுக்குருவி
பின்
மெல்ல மெல்ல கால்கள் தரித்தன
கண்கள் சாந்தம் கொண்டன
உதடுகள் குறுநகை பூத்தன
அமைந்திருக்கலானாய்
இயைந்திருந்தோம்
இதோ விட்டகலவும் போகிறாய்
இனிய நினைவுகளாய்
உன்னை என்னில் நிறைத்து விட்டு
எல்லாருக்கும்
எல்லாவற்றிலும்
இது
இத்தனை இனிமையாய்
இத்தனை சுலபமாய்
தேனின் ஒழுக்காய்
அமைந்து விடுமா என்ன
காற்றிலாடும் கொடியாய் படபடத்துக் கொண்டிருந்தாய்
துள்ளுதல் என்றே அறிந்திருந்தேன் உன்னை
சிட்டுக்குருவி
பின்
மெல்ல மெல்ல கால்கள் தரித்தன
கண்கள் சாந்தம் கொண்டன
உதடுகள் குறுநகை பூத்தன
அமைந்திருக்கலானாய்
இயைந்திருந்தோம்
இதோ விட்டகலவும் போகிறாய்
இனிய நினைவுகளாய்
உன்னை என்னில் நிறைத்து விட்டு
எல்லாருக்கும்
எல்லாவற்றிலும்
இது
இத்தனை இனிமையாய்
இத்தனை சுலபமாய்
தேனின் ஒழுக்காய்
அமைந்து விடுமா என்ன
***
கவி கண்டடையும் பொக்கிஷங்கள் சில சமயங்களில், கடைசிவரை யாராலும் அடையாளம் காணப்படாமலேகூட போய்விடுபவை. ஆனாலும் குற்றமில்லை, அது பொக்கிஷமேதான். கண்டடைந்தனாலேயே அது பொக்கிஷமாகிறது. வைரம் என தலைப்பிட்ட இக்கவிதை ஒக்கலில் தூக்கி வைக்க வேறொன்றாகிறது. அதைச் சுமப்பதால் பேரழகுகொள்ளும் ஒரு பெண் எழுதுவதால் இன்னொன்றாகி விரிகிறது. ஆனாலும் எல்லோருக்குமான பொக்கிஷத்தை எவ்வளவு எளிமயாய் கண்டெடுத்துவிட முடியுமென காண்பிக்கிறது.
வைரம்
என்
மணற் பரல்களோடு
ஒன்றாய்
இதுவும்
கலந்திருக்கிறது
கண் கூசும் ஒளியில்லை
யாரும் கவனிக்கவுமில்லை
ஆனாலும்
இது வைரமே தான்
பார்க்கப்படாமல்
இருப்பதே
நல்லது
வெய்யில் படாத இடுப்பாய்
மேலும்
மெருகேறட்டும்
இன்னும் ஆழ
ஒக்கலில்
புதைத்துக் கொள்கிறேன்
என் பொக்கிஷம்
இதைச் சுமப்பதாலேயே
நான்
பேரழகு கொள்கிறேன்
தேடிப்
பித்துக் கொண்டு அலைபவர்
வரும் வரை
இன்னும் கொஞ்ச காலம்
இது
என்னுடனேயே இருக்கட்டும்
மணற் பரல்களோடு
ஒன்றாய்
இதுவும்
கலந்திருக்கிறது
கண் கூசும் ஒளியில்லை
யாரும் கவனிக்கவுமில்லை
ஆனாலும்
இது வைரமே தான்
பார்க்கப்படாமல்
இருப்பதே
நல்லது
வெய்யில் படாத இடுப்பாய்
மேலும்
மெருகேறட்டும்
இன்னும் ஆழ
ஒக்கலில்
புதைத்துக் கொள்கிறேன்
என் பொக்கிஷம்
இதைச் சுமப்பதாலேயே
நான்
பேரழகு கொள்கிறேன்
தேடிப்
பித்துக் கொண்டு அலைபவர்
வரும் வரை
இன்னும் கொஞ்ச காலம்
இது
என்னுடனேயே இருக்கட்டும்
***
0 comments:
Post a Comment