இக்யு ஸோஜன் |
இப்படைப்பின் ஜென் கவிதைகளை வாசிக்கும் பொழுது நீரில் மிதக்கும் தக்கவை போல ஏதோ ஒரு உணர்வு என்னை மயக்கியது. ஒவ்வொரு முறை வாசிக்கும் போதும் அதே உணர்வு. எத்தனையோ நூறு ஆண்டுகளுக்கு முன்பாக எழுதப்பட்ட கவிதைகள். சில கவிதைகளை வாசிக்கையில் எனக்கானதாய் எண்ணிடத் தோன்றுகிறது. வாசிப்பவர்களை பொறுத்து அவரவர் எண்ணக் கீற்றுகளுக்கு ஒப்ப, அவரவர் வாழ்கைக்கு ஒப்புமை கொள்ளலாம். வாசித்தவற்றில் எனக்காய் பிடித்தவை பல, அவற்றில் சில..
எல்லாம் இழந்து விட்டாலும் இருப்பதைக் கொண்டு இன்புற்று இரு என்பதாக அமைகின்றது இத்தவிதை,
"பண்ணை வீட்டின்
கூரை எரிந்து விட்டது
இனி, என்னால்
பார்க்க முடியும்
நிலவை"
- மிஸுட்டா மஸாஹிடெ
ஜப்பான்
(1657-1723)
இவ்வுலகில் வாழும் பொழுதுகளில் எதை நோக்கியோ ஓடிக் கொண்டே இருக்கின்றோம். முடிவானது என்பது எல்லோருக்கும் பொதுவானது என்பதை குறிப்பதாய் இக்கவிதை,
"உண்கிறோம், கழிக்கிறோம்
உறங்குகிறோம், விழிக்கிறோம் -
இது தான் நம் உலகம் - இதன் பிறகு
நாம் செய்ய வேண்டியதெல்லாம்
ஒன்றுதான்,
இறப்பது"
- இக்யு ஸோஜன்
வாழ்க்கையின் எதார்த்தத்தை பிரதிபலிக்கும் கவிதையாக,
"இறுதியில்
இந்தச் சாலையில் தான்
வந்து போவேன் நான் என
நன்றாகத் தெரியும்
ஆனால்,
இன்றுதான்
அந்த நாள் என்று
எனக்குத் தெரியாது
நேற்று
- நாரிஹிரா (ஜப்பான் 825-880)
நமது அன்றாட வாழ்க்கையில் எதுவும் நடக்கலாம். எல்லாம் நன்மைக்கானது என்ற எண்ணத்தோடு வாழ்தல் என்பதை பறைசாற்றுகிறது -
இக்கவிதை,
"உனது மரணகாலம்
நெருங்குகிறது நீ
இறந்து விடுகிறாய்
என்றால் மிக நல்லது!
உனது மரணகாலம்
நெருங்குகிறது நீ
இறக்காதிருக்கிறாய்
என்றால் - மிக மிக நல்லது"
- ஸெங்காய் கிபன்
நாரிஹிரா |
உலகில் உள்ள அத்தனை உயிரினங்களும் இனப்பெருக்கத்தில் ஈடுபடுகின்றது. இந்த உலகம் முழுவதும் உடலுறவில் கட்டுண்டு கிடக்கிறது. அதுவே உலகை இயக்குகிறது என்பதை சுட்டுகிறது இந்த கவிதை,
எட்டங்குல நீளம் அது
உறுதியானது
என்
செல்லப்பொருள்
இரவில்
தனித்திருக்கும் போது
முழுக்க தழுவி கொள்கிறேன் - அதை வெகுகாலமாயிற்று அழகான பெண் ஒருத்தி அதை
தொட்டு. என் கோவணத்துக்குள்
கிடக்கிறது ஒரு
முழுப் பிரபஞ்சம்"
- இக்யு ஸோஜன்
வாழ்க்கையின் அத்தனை நிதர்சனங்களையும், இயற்கையின் அத்தனை உன்னதங்களையும் அப்பட்டமாய் அம்பலப்படுத்துகின்றன இந்த தொகுப்பில் உள்ள அத்தனை ஜென் கவிதைகளும்.
***
0 comments:
Post a Comment