யுவனின் மொழிபெயர்ப்பு - மதார்

யுவன் சந்திரசேகர் மொழிபெயர்த்து தமிழில் வெளியான ஜென் கவிதைகள் தொகுப்பு - 'பெயரற்ற யாத்ரீகன்'. முதல் பதிப்பு வெளிவந்து இருபது ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது இரண்டாவது பதிப்பு வெளிவந்துள்ளது. முதல் தடவை படித்தபோது பெரும் உற்சாகம் அளித்த கவிதைகள். பல ஆண்டுகளுக்கு பிறகு இரண்டாவது பதிப்பை இரண்டாவது முறை படிக்கையிலும் அதே உற்சாகம் தொற்றிக் கொண்டது. இந்த நூலை முண்டந்துறை காடுகளின் ஆழ்ந்த அமைதிக்குள் வைத்து ஒருமுறையும், அவசரகதியில் இயங்கும் எனது அலுவலகத்தில் வைத்து ஒருமுறையும் போன மாதத்தில் படித்தேன். எங்கு வைத்து படித்தாலும் ஆழ்ந்த அமைதிக்குள் கொண்டு வந்துவிடும் மாய நூல். யுவனின் அட்டகாசமான மொழிபெயர்ப்பு. சமீபத்தில் வேரா பவ்லோவா என்ற பெண் கவிஞரின் ஒரு கவிதையை படித்தேன். 

I walk the tightrope.

A kid on each arm

for balance. 

ஒரு நல்ல கவிதை நாம் படித்து முடிக்கும் முன்பே நமக்கு உணர்த்தப்பட்டுவிடும் என்பார்கள். அந்த வகையில் பவ்லோவாவின் இந்தக் கவிதை நல்ல கவிதையாகப் பட்டது. சரி மூன்று வரிதானே சும்மா மொழிபெயர்த்து பார்ப்போம் என்ற குருட்டு ஆசையில் முயன்றேன். இயலவில்லை. கவிதை மொழிபெயர்ப்பில் கவிதைக்குள் அந்த உயிரைக் கொண்டு வந்துவிடுவது பெரும் பணி. அதற்கு அந்தக் கவிஞனின் கவிதையை அப்படியே அல்லாமல் அதே நேரத்தில் அதன் தன்மை மாறாமல் மொழிபெயர்ப்பவன் தன் கவிதையாக அதை உயிருடன் எழுதிவிடுவது ஒரு வழி. ஒரு கவிஞன் கவிதையை மொழிபெயர்ப்பு செய்யும்போது கவிதையில் நிகழும் அதிசயம் அதுதான். சமீபத்தில் க.மோகனரங்கனின் மொழிபெயர்ப்பு கவிதைகள் சிறந்த வாசிப்பு உணர்வை அளிப்பவையாக உள்ளன. யுவன் ஒரு கவிஞர் என்பதால் பெயரற்ற யாத்ரீகன் மொழிபெயர்ப்பில் மிளிர்கிறது. அதுவும் மற்ற கவிதைகளை விட ஜென், ஹைக்கூ போன்ற சிறிய வடிவங்களை மொழிபெயர்க்கும்போது ஒவ்வொரு சொல்லும் முக்கியமானது. ஒரு சொல் சற்றே இடறினாலும், மொத்த கவிதையும் "சூளை செங்கல் குவியலிலே தனிக்கல் ஒன்று சரிகிறது" போலாகிவிடும். அதை யுவன் இந்த தொகுப்பில் அட்டகாசமாகச் செய்துள்ளார். உதாரணத்துக்கு 

இரவு முழுவதும்

தூங்க முடியவில்லை

என் படுக்கையில்

நிலா வெளிச்சம் கிடந்ததால்.

எங்கிருந்தோ ஒரு

குரல் அழைப்பதைக்

கேட்டுக்கொண்டிருந்தேன், தொடர்ந்து.

ஆமோதிக்கிற மாதிரி 

பதிலளிக்கவில்லை எதுவும். 

இந்தக் கவிதையில் 'எதுவும்' என்ற ஒரு தனிச் சொல் எதையோ செய்துவிடுகிறது கவிதையில். அதை சேர்க்காதிருந்தால் கவிதையில் எதுவோ குறைந்திருக்கும். அதைச் சரியாகக் கண்டுணர்ந்து 'எதுவும்' என்ற சொல்லை வைக்கிறார் யுவன் அல்லது போகிறபோக்கில் தன்னுணர்ந்தும் வைத்திருக்கலாம். யுவனின் மொழிபெயர்ப்பு திறனுக்கு இன்னொரு உதாரணம்

உதிர்ந்த மலர்

திரும்புகிறதோ கிளைக்கு? 

அது, வண்ணத்துப் பூச்சி. 

      - மோரிடக்கோ

என்ற கவிதை. இதே கவிதையை யுவனைத் தவிர்த்து இரண்டு பேர் தமிழில் மொழிபெயர்ப்பு செய்திருக்கிறார்கள் (வேறு யாரும் கூட செய்திருக்கலாம்) 

சி.மணியின் மொழிபெயர்ப்பு

கிளைக்குத் திரும்பும்

விழுந்த சருகா?

பட்டுப் பூச்சி.

தி.லீலாவதியின் மொழிபெயர்ப்பு

வீழ்ந்த மலர்

கிளைக்குத் திரும்புகிறதா?

வண்ணத்துப் பூச்சி! 

இதில் மரத்திலிருந்து விழுகின்ற மலரை  வீழும் மலர் என்கிறார். யுவன் அழகாக உதிர்ந்த மலர் என்கிறார். கிளைக்குத் திரும்புவதை திரும்புகிறதோ கிளைக்கு? என்கிறார். இறுதியில் 'அது' என்ற தனிச்சொல்லும் அதன் அருகில் இடப்பட்ட காற்புள்ளியும் கவிதையை எங்கேயோ கொண்டு சென்றுவிடுகிறது. ஒரு நல்ல கவிதையில் ஒரு சொல் கூட வீணாக வைக்கப்படுவதில்லை. (பித்து நிலை கவிதைகளுக்கு இது பொருந்தா) 

தமிழில் கவிதை மொழிபெயர்ப்பு வகைகளில் முக்கியமான வரவு யுவன் மொழிபெயர்த்த 'பெயரற்ற யாத்ரீகன்'. செப்டம்பரில் இந்த நூல் குறித்த ஒரு கலந்துரையாடல் நிகழ்வை திருநெல்வேலியில் நடத்தினோம். இந்த நூலை வாசித்து வந்திருந்த ஒவ்வொருவரின் முகத்திலுமே ஒரு பிரமிப்பை, மகிழ்ச்சியை பார்க்க முடிந்தது. யுவனின் இலக்கிய உலகம், இலக்கிய பார்வை, மொழிபெயர்ப்பில் அவர் செய்யும் மாயம், இன்னும் பிற விஷயங்கள் குறித்தெல்லாம் பேசிக்கொண்டோம். 2023 ஆம் ஆண்டிற்கான விஷ்ணுபுரம் விருது பெறும் யுவன் சந்திர சேகர் சாருக்கு இனிய அன்பும், வாழ்த்துகளும்.. 

***

***
Share:

0 comments:

Post a Comment

Powered by Blogger.

புதுக் கவிதை இரண்டு குறிப்புகள் - க.நா. சுப்ரமணியம்

[‘இலக்கிய வட்டம்’ இதழில் ‘புதுக்கவிதை’ என்கிற தலைப்பில் வெளியான இருவேறு குறிப்புகள் இந்த இதழில் இடம்பெறுகின்றன. முதலில் உள்ளது ‘மயன் கவிதைகள...

தேடு

Labels

அபி (11) அரவிந்தர் (1) அறிமுகம் (1) ஆக்டேவியா பாஸ் (2) ஆத்மாநாம் (2) ஆனந்த் குமார் (7) இசை (5) இந்தி (5) இளங்கோ கிருஷ்ணன் (2) உபநிடதம் (1) உரையாடல் (2) எதிர்வின (2) எம். கோபாலகிருஷ்ணன் (1) எஸ். ராமகிருஷ்ண (1) எஹுதா அமிக்ஹாய் (1) ஓக்ட்டாவியோ ப்பாஸ் (1) க. மோகனரங்கன் (4) க.நா. சுப்பிரமணியம் (3) க.நா. சுப்ரமணியம் (1) கட்டுரை (7) கப (1) கமலதேவி (1) கம்பன் (1) கலாப்ரியா (1) கலீல் கிப்ரான் (1) கல்பற்றா நாராயணன் (4) கல்பனா ஜெயகாந்த் (2) கவிதை (171) கவிதையின் மத (1) காரைக்கால் அம்மைய (1) காளிதாசன் (1) காஸ்மிக் தூசி (1) கிம் சின் டே (1) குமரகுருபரன் விருது (5) குன்வர் நாராயண் (1) கைலாஷ் சிவன் (1) கோ யுன் (1) ச. துரை (2) சங்க இலக்கியம் (2) சதீஷ்குமார் சீனிவாசன் (6) சந்திரா தங்கராஜ் (1) சபரிநாதன் (3) சீர்மை பதிப்பகம் (1) சுகுமாரன் (3) சுந்தர ராமசாமி (2) ஞானக்கூத்தன் (1) தாகூர் (1) தேவதச்சன் (4) தேவதேவன் (22) தேவேந்திர பூபதி (1) நகுலன் (3) நெகிழன் (1) நேர்காண (1) நேர்காணல் (1) பாபு பிருத்விராஜ் (1) பிப்ரவரி 2022 (2) பிரதீப் கென்னடி (1) பிரமிள் (3) பிரான்சிஸ் (1) பூவன்னா சந்திரசேக (1) பெரு. விஷ்ணுகுமார் (2) பெருந்தேவி (1) பொன்முகலி (1) போகன் சங்கர் (2) போர்ஹே (1) மங்களேஷ் டப்ரால் (1) மதார் (4) மரபு கவிதை (7) மனுஷ்யபுத்திரன் (1) மா. அரங்கநாதன் (1) மொழிபெயர்ப்பு (12) மோகனரங்கன் (1) யவனிகா ஸ்ரீராம் (2) யான் வாங் லீ (1) யுவன் சந்திரசேகர் (15) யூமா வாசுக (2) ரகுவம்சம் (1) ரமாகாந்த் ரத் (1) ராமாயணம் (1) ரியோகான் (1) லட்சுமி மணிவண்ணன் (2) லதா (1) லாரா கில்பின் (1) வ. அதியம (1) வண்ணதாசன் (2) வாசகர் (1) வாலஸ் ஸ்டீபன் (1) விக்ரமாதித்யன் (6) விவாத (1) வீரான்குட்டி (3) வே. நி. சூர்யா (5) வே.நி. சூர்யா (6) வேணு தயாநிதி (1) ஜெ. ரோஸ்ல (1) ஜெயமோகன் (2) ஜென் (1) ஷங்கர் ராமசுப்ரமணியன் (1) ஷாஅ (1) ஷெல்லி (1) ஸென் கவிதை (1) ஸ்ரீநேசன் (1)

Most Popular

Blog Archive