முதல் குழந்தையின் சொல் - அஸ்லான்

பங்களிப்பு

இந்த வரியை

நான் எழுதும்போது

கொஞ்சப்பேர் செத்துப்போனார்கள்.

கொஞ்சப்பேர் கொல்லப்பட்டார்கள்.

சில பேர் சத்தியத்துக்காக

சிலபேர் காரணமறியாமல்.

கொஞ்சப்பேர் பிறந்தார்கள்.

சிலபேர் சாவதற்காக

சிலபேர் கொல்லப்படுவதற்காக.

மீதிப்பேர் இடைவெளியை

நிரப்பவென்று ஏதேதேதோ

செய்து விட்டார்கள்

ஒருவருமே கவனிக்காது

கடந்து போய்விட்ட நிமிஷத்துக்கு

என்னுடைய பங்களிப்பாய்

ஒரு பதினாறு வரிகள்.

எம்.யுவனின் இந்தக் கவிதை காலத்தை ஒரு கணம் நிறுத்துகிறது. எப்போது வாசித்தாலும் இந்தக் கவிதை காலத்தை ஒரு கணம் நிறுத்தி விடத்தான் செய்கிறது. கவிதையின் பணியே அதுதானே. காலத்தை இல்லாமலாக்கும் மாயமாக்கும் வல்லமை பெற்றது. ஒவ்வொரு கவிதையும் அதைத்தான் செய்கிறது. இந்தக் கவிதை நேரடியாகவே அதைச் சொல்லிவிடுகிறது. 

எம்.யுவனின் இன்னொரு கவிதை விலாசம். ஒரு நாள் குழந்தைகளுடன் அமர்ந்து வார்த்தை விளையாட்டு விளையாடிக் கொண்டிருந்தேன். முதலாமவர் காதில் ஒரு வார்த்தை சொல்ல அடுத்தவர் அதே வார்த்தையை அடுத்துள்ளவர் காதில் சொல்ல வேண்டும். இப்படியே ஒவ்வொருவராக அந்தச் சொல்லை அல்லது வாக்கியத்தை பரிமாறி கடைசி நபரிடம் வரும்போது அவர் அந்த வார்த்தையைச் சொல்ல வேண்டும். முதல் நபர் சொன்னதிலிருந்து எவ்வளவு வித்தியாசத்துடன் அது அமைகிறது என்பதே அந்த வேடிக்கை விளையாட்டு. எம்.யுவனின் இந்த கவிதையை படியுங்களேன்.

விலாசம்

தீர்மானத்தின் ஆணிகள்

அறையப்படாத சவப்பெட்டி

என்று என் கபாலத்தைச்

சொல்லலாம் நீங்கள்.

ஒரு பதம் ஒரு வாக்கியம் தேடி

மொழியின் புதைமணலில்

கழுத்திறுக மூழ்கும்

முட்டாள் ஜென்மம் என்றும்.

இரவின் வைரம் விடிந்

ததும் காக்காப்பொன்னாக

மறுகும் லோபியாய்

தூண்டிமுள்ளில் மாட்டி

கூடைக்குச் சேரும் மடமீனென்று.

நழுவிப்போகும்

கணத்தின் சிலிர்ப்பை

ஒற்றை அதிர்வில் சிறைப்படுத்தும்

வீணைத்தந்தி என்று.

அல்லது

இரா.சு.குப்புசாமி,

23 செக்கடித்தெரு,

மேலகரம்,

காறையூர் (வழி)

என்று.

இதில் கடைசி குழந்தை எப்படி சொல்கிறது பார்த்தீர்களா. ஒவ்வொரு தடவை இந்தக் கவிதையைப் படிக்கும்போதும் எனக்கு குழந்தைகள் கைமாற்றி விளையாடும் வார்த்தைகள் தான் நினைவுக்கு வருகின்றன. அழகான கவிதை. 

***
***
Share:

0 comments:

Post a Comment

Powered by Blogger.

புதுக் கவிதை இரண்டு குறிப்புகள் - க.நா. சுப்ரமணியம்

[‘இலக்கிய வட்டம்’ இதழில் ‘புதுக்கவிதை’ என்கிற தலைப்பில் வெளியான இருவேறு குறிப்புகள் இந்த இதழில் இடம்பெறுகின்றன. முதலில் உள்ளது ‘மயன் கவிதைகள...

தேடு

Labels

அபி (11) அரவிந்தர் (1) அறிமுகம் (1) ஆக்டேவியா பாஸ் (2) ஆத்மாநாம் (2) ஆனந்த் குமார் (7) இசை (5) இந்தி (5) இளங்கோ கிருஷ்ணன் (2) உபநிடதம் (1) உரையாடல் (2) எதிர்வின (2) எம். கோபாலகிருஷ்ணன் (1) எஸ். ராமகிருஷ்ண (1) எஹுதா அமிக்ஹாய் (1) ஓக்ட்டாவியோ ப்பாஸ் (1) க. மோகனரங்கன் (4) க.நா. சுப்பிரமணியம் (3) க.நா. சுப்ரமணியம் (1) கட்டுரை (7) கப (1) கமலதேவி (1) கம்பன் (1) கலாப்ரியா (1) கலீல் கிப்ரான் (1) கல்பற்றா நாராயணன் (4) கல்பனா ஜெயகாந்த் (2) கவிதை (171) கவிதையின் மத (1) காரைக்கால் அம்மைய (1) காளிதாசன் (1) காஸ்மிக் தூசி (1) கிம் சின் டே (1) குமரகுருபரன் விருது (5) குன்வர் நாராயண் (1) கைலாஷ் சிவன் (1) கோ யுன் (1) ச. துரை (2) சங்க இலக்கியம் (2) சதீஷ்குமார் சீனிவாசன் (6) சந்திரா தங்கராஜ் (1) சபரிநாதன் (3) சீர்மை பதிப்பகம் (1) சுகுமாரன் (3) சுந்தர ராமசாமி (2) ஞானக்கூத்தன் (1) தாகூர் (1) தேவதச்சன் (4) தேவதேவன் (22) தேவேந்திர பூபதி (1) நகுலன் (3) நெகிழன் (1) நேர்காண (1) நேர்காணல் (1) பாபு பிருத்விராஜ் (1) பிப்ரவரி 2022 (2) பிரதீப் கென்னடி (1) பிரமிள் (3) பிரான்சிஸ் (1) பூவன்னா சந்திரசேக (1) பெரு. விஷ்ணுகுமார் (2) பெருந்தேவி (1) பொன்முகலி (1) போகன் சங்கர் (2) போர்ஹே (1) மங்களேஷ் டப்ரால் (1) மதார் (4) மரபு கவிதை (7) மனுஷ்யபுத்திரன் (1) மா. அரங்கநாதன் (1) மொழிபெயர்ப்பு (12) மோகனரங்கன் (1) யவனிகா ஸ்ரீராம் (2) யான் வாங் லீ (1) யுவன் சந்திரசேகர் (15) யூமா வாசுக (2) ரகுவம்சம் (1) ரமாகாந்த் ரத் (1) ராமாயணம் (1) ரியோகான் (1) லட்சுமி மணிவண்ணன் (2) லதா (1) லாரா கில்பின் (1) வ. அதியம (1) வண்ணதாசன் (2) வாசகர் (1) வாலஸ் ஸ்டீபன் (1) விக்ரமாதித்யன் (6) விவாத (1) வீரான்குட்டி (3) வே. நி. சூர்யா (5) வே.நி. சூர்யா (6) வேணு தயாநிதி (1) ஜெ. ரோஸ்ல (1) ஜெயமோகன் (2) ஜென் (1) ஷங்கர் ராமசுப்ரமணியன் (1) ஷாஅ (1) ஷெல்லி (1) ஸென் கவிதை (1) ஸ்ரீநேசன் (1)

Most Popular

Blog Archive