வ. அதியமானின் குடைக்காவல் - மதார்

கவிஞன் ஒரு விஷயத்தை கவிதையாகப் பார்த்துவிடுகிறபோது பல சமயங்களில் அவன் அதை அப்படியே எழுதிவிடுவது மட்டும் கூட நல்ல கவிதையாகிவிடும். 

வ.அதியமானின் குடைக்காவல் தொகுப்பில் வரும் "அழகி" என்ற கவிதை

அழகி 

பிடுங்கி எடுத்துவிட்டப் பிறகுதான்

அடக்க ஒடுக்கமாய்

உங்கள் கைகளில்

கிழங்காய் இருக்கிறேன்

அதற்கு முன்புவரையில்

சூரியப் பையன்

முத்தமிட ஏங்கும்

அடங்காத

பாதாள

பேரழகியாக இருந்தேன்

புதையல் புதையலாக இருக்கும் கணம் மட்டுமே அது புதையல் என்பதை அழகாகச் சொல்லிவிடுகிறது கவிதை. இந்தக் கவிதை நிகழ மேலதிகமாக எதுவும் தேவைப்படவில்லை. உணர்ந்ததை உண்மையாகச் சொல்வது மட்டுமே நல்ல கவிதைக்கு போதுமானதாகிறது. 

இதே தொகுப்பில் வரும் இன்னொரு கவிதை

அசைவுகளை நடனத்திற்கு இழுத்து வரும் நளினம்

இமைக்காது

பார்த்துக்கொண்டே இருக்கிறேன்

அசைவுகள்

அசைவுகள்

அசைவுகள்

ஒன்றாய் 

பத்தாய் 

நூறாய் 

ஊறிப் பெருகிக்கொண்டே இருக்கும்

அசைவுகள்

எதிர்பாரா 

இமைக்கணத்தில் 

என் கண்களின் மீது 

தாவி குதித்துச் செல்கிறது 

ஒரு பச்சைத் தவளை

கடவுளே 

இப்போது 

அந்த அசைவுகள் 

அத்தனையும் 

நடனம் 

நடனம் 

நடனம் 

இதுவும் கிழங்கு கவிதை போலவே பார்த்ததை அப்படியே பதிகிற கவிதை. ஆனால் இந்தக் கவிதைக்கு கூடுதலாக ஒரு பச்சைத் தவளை கவிதையை நிகழ்த்தத் தேவையாய் இருக்கிறது. கவிதைக்கு எது தேவையோ அதைக் கவிதையே தேர்ந்துகொள்ளும். பின் தொடர்வது மட்டுமே கவிஞனின் வேலை. இந்தக் குடைக்காவல் தொகுப்பின் பல கவிதைகளில் வ.அதியமான் கவிதையை வழி பிசகாமல் பின்தொடர்ந்திருக்கிறார். 

தத்தலுக்கும் தாவலுக்கும் நடுவே ஒரு லபக்

இன்று

என்ன கொண்டாட்டமோ

தெரியவில்லை

தோட்டத்தில்

சதா

தத்தி

தத்தி

விளையாடிக் கொண்டேயிருக்கிறது

அடர்மஞ்சள்

ஓணான் ஒன்று

அங்கு வந்து சேர்ந்த

தெருநாய் ஒன்று

எதிர்பாரா கணத்தில்

தன் நான்கு கால்களையும்

நான்கு சிறகுகளாக்கி

சீறித் தாவுகிறது

சில கவிதைகளில் 'தலைப்பு' கவிதையை இயக்கும். இந்தக் கவிதை அப்படிப்பட்டது. காட்சியை சித்தரிப்பதை மட்டும் இந்தக் கவிதை செய்கிறது. 

குலசாமி

வேகவேகமாய் 

படியிறங்கிக் கொண்டிருக்கின்றன 

என் கால்கள் 

படிகளின் நடுவே 

உடைந்து 

உதிர்ந்து 

இல்லாமல் போய்விட்ட ஒரு படி 

இமைக்கணத்தில் 

என் குலசாமியானது 

அதற்கு அடுத்தப்படியிலிருந்து 

மெல்ல மெல்ல 

படியிறங்கிக் கொண்டிருக்கிறேன் 

நான் 

வாசகன் தன் அனுபவத்தில் விரித்துச் செல்ல பல தளங்களைக் கொண்ட கவிதை. உடைந்து உதிர்ந்து இல்லாமல் போன பல வாழ்க்கைகள் நினைவுக்கு வருகின்றன. 

பெருங்கை

ஏற்றப்படும்

சுடர் ஒன்று

ஓர் காட்சியை

வரைந்து கொடுக்கிறது

உங்கள் கண்களுக்கு

சமயங்களில்

வரைந்து கொடுக்காமலும்

போகலாம்

ஆனால்

அணைக்கப்படும்

சுடர் ஒன்று

மிக நிச்சயமாய்

எப்போதும்

ஓர் காட்சியை

மறைத்து வைக்கிறது

உங்கள் கண்களிடமிருந்து

அணைக்கப்படும்

சுடர் ஒன்றுக்கு

அத்தனை பெரிய கைகள்

ஒவ்வொரு இரவிலும் சூடம் அணைவதை நான் பார்த்து நிற்பதுண்டு. நெருப்பு பூமிக்கு அடியில் தினமும் ஒளிந்து கொள்வதைத்தான் நெருப்பு அணைகிறது என்று சொல்கிறோமோ என்று தோன்றும். அதை ஒரு கவிதையாக்க முயற்சித்தேன். இயலவில்லை (பின்னர் எழுதிவிடுவேன்). இந்தக் கவிதை அதுதான். இதில் சுடரின் கைகள் என்பது புதிதாகச் சேர்ந்து அழகாகிறது. 

இந்தத் தொகுப்பில் வரும் "வனவாசி" கவிதை அழகானது. 

வனவாசி

இத்தனை விரிந்த

திருவிழா வனத்தில்

ஒரு விழியும் அறியா

சின்னஞ்சிறு துயர் செடிகளை

மிகச் சரியாய்

அடையாளம் கண்டு கொள்ளும்

கண்கள்

உனக்கு

இத்தனை செறிந்த

துயர் கானகத்தில்

எவர் கைக்கும் எட்டா

சின்னஞ்சிறு திருவிழா பூக்களை

மிக லாவகமாய்

எட்டிப் பறித்துவிடும்

விரல்கள்

எனக்கு

உன்

கண்களையும்

என்

விரல்களையும்

ஒருங்கே கொண்டிருக்கும்

நம்முடைய இளைய மகள் இங்கிருக்கும் 

அத்தனை வனங்களிலும் 

ஒரே சமயத்தில் நுழைகிறாள்

அவள் கண்களை 

வருடிக் கொடுக்கின்றன 

குட்டிப் பூக்கள் 

அவள் விரல்களை 

தொட்டு உரசுகின்றன 

தளிர்ச் செடிகள்

அவளோ 

எதையும் 

பார்ப்பதுவும் இல்லை 

பறிப்பதுவும் இல்லை 

குழந்தைகளுக்கு 'இன்று' மட்டுமே. இந்தக் கவிதையும் 'இன்றில்' மகிழும் குழந்தையைப் பேசுகிறது.

வ.அதியமானின் மொழி எளிமையானது. கவிதைகள் நேரடியானவை. படித்து முடித்ததும் அழகை மனதில் உதிக்க வைப்பவை. இன்னும் அவர் நிறைய கவிதைகளை எழுத வேண்டும். கவிதையை வாழ்வாக்க வேண்டும்.  

***

தொகுப்பு : குடைக்காவல் - வ.அதியமான்

வெளியீடு : சால்ட் பதிப்பகம்

***

Share:

0 comments:

Post a Comment

Powered by Blogger.

ஆகாய மிட்டாய் - கல்பற்றா நாராயணன் கவிதை

ஆகாய மிட்டாய் ந ண்பனின் மகளின் பெயர் மழை என்று தெரிந்தபோது மனம் தெளிந்தது சாறாம்மாவுக்கும் கேசவன்நாயர்க்கும் இருந்த துயரம் சற்று பிந்தியானால...

தேடு

Labels

அபி (11) அரவிந்தர் (1) அறிமுகம் (1) ஆக்டேவியா பாஸ் (2) ஆத்மாநாம் (2) ஆனந்த் குமார் (7) இசை (4) இந்தி (5) இளங்கோ கிருஷ்ணன் (2) உபநிடதம் (1) உரையாடல் (2) எம். கோபாலகிருஷ்ணன் (1) எஸ். ராமகிருஷ்ண (1) எஹுதா அமிக்ஹாய் (1) ஓக்ட்டாவியோ ப்பாஸ் (1) க. மோகனரங்கன் (4) கட்டுரை (6) கப (1) கமலதேவி (1) கம்பன் (1) கலாப்ரியா (1) கலீல் கிப்ரான் (1) கல்பற்றா நாராயணன் (3) கல்பனா ஜெயகாந்த் (1) கவிதை (151) கவிதையின் மத (1) காரைக்கால் அம்மைய (1) காளிதாசன் (1) காஸ்மிக் தூசி (1) கிம் சின் டே (1) குமரகுருபரன் விருது (5) குன்வர் நாராயண் (1) கைலாஷ் சிவன் (1) கோ யுன் (1) ச. துரை (2) சங்க இலக்கியம் (2) சதீஷ்குமார் சீனிவாசன் (6) சந்திரா தங்கராஜ் (1) சபரிநாதன் (3) சீர்மை பதிப்பகம் (1) சுகுமாரன் (3) சுந்தர ராமசாமி (2) ஞானக்கூத்தன் (1) தாகூர் (1) தேவதச்சன் (4) தேவதேவன் (18) தேவேந்திர பூபதி (1) நகுலன் (3) நெகிழன் (1) நேர்காண (1) நேர்காணல் (1) பாபு பிருத்விராஜ் (1) பிப்ரவரி 2022 (2) பிரதீப் கென்னடி (1) பிரமிள் (2) பிரான்சிஸ் (1) பூவன்னா சந்திரசேக (1) பெரு. விஷ்ணுகுமார் (1) பெருந்தேவி (1) பொன்முகலி (1) போகன் சங்கர் (2) போர்ஹே (1) மங்களேஷ் டப்ரால் (1) மதார் (3) மரபு கவிதை (7) மனுஷ்யபுத்திரன் (1) மா. அரங்கநாதன் (1) மொழிபெயர்ப்பு (10) மோகனரங்கன் (1) யவனிகா ஸ்ரீராம் (2) யான் வாங் லீ (1) யுவன் சந்திரசேகர் (15) யூமா வாசுக (2) ரகுவம்சம் (1) ரமாகாந்த் ரத் (1) ராமாயணம் (1) ரியோகான் (1) லட்சுமி மணிவண்ணன் (2) லதா (1) லாரா கில்பின் (1) வ. அதியம (1) வண்ணதாசன் (2) வாசகர் (1) வாலஸ் ஸ்டீபன் (1) விக்ரமாதித்யன் (6) வே. நி. சூர்யா (3) வே.நி. சூர்யா (5) வேணு தயாநிதி (1) ஜெ. ரோஸ்ல (1) ஜெயமோகன் (1) ஜென் (1) ஷங்கர் ராமசுப்ரமணியன் (1) ஷெல்லி (1) ஸென் கவிதை (1) ஸ்ரீநேசன் (1)

Most Popular

Blog Archive