சில மராட்டி கவிதைகள் - தமிழில் ஆர். தீபா

வாமாங்கி (இடபாகத்தாள்)

சமீபத்தில் ஒரு நாள் பண்டர்பூர் கோயிலுக்கு சென்றிருந்தேன். 

அங்கு விட்டலனைக் காணவில்லை.

ரகுமாயியின் பக்கத்தில் அவன் நின்றிருக்கும் பீடம் மட்டுமே இருந்தது.

நான் நினைத்துக் கொண்டேன்.

 சரி , 

   விட்டலன் இல்லையென்றால்  

என்ன?

   ரகுமாயி இருக்கிறாளே! யாரோ ஒருவரது காலில் தலையை வைத்து வணங்கி விட்டால் போதும்.

முன்னும் பின்னும் மோதிய கூட்டத்தின் நடுவே ரகுமாயியிடம் கேட்டேன்?

எங்கே உன் விட்டலனைக் காணும்? ,எங்கே போனான்?

அவள் ஆச்சரியத்துடன் , எங்கே போனான் என்றால்?

அவன் என் வலது பக்கம் தானே நின்று கொண்டிருந்தான், ஏன் இப்போது இல்லையா ? 

நான் திரும்பவும் ஒருமுறை பார்த்து விட்டுச் சொன்னேன், அங்கு அவன் இல்லை! 

அவள் உடனே,

என் பக்கத்தில் இருப்பது கூட எனக்கு சரியாகத் தெரிவதில்லை! 

கல்லைப்போல ஆகிவிட்டது 

என் கழுத்து. 

அதை இப்படி அப்படி கூடத் திருப்ப முடியவில்லை! 

அவன்,

எப்போது வருகிறான்? எப்போது செல்கிறான்? 

எங்கே செல்கிறான்?   

என்ன செய்கிறான்? என்று எனக்கு ஒன்றுமே தெரியவில்லை!

அவன் என் தோளோடு தோள் தொட்டபடி எப்போதும் பக்கத்தில் இருக்கிறான் என, முட்டாள்தனமாக இங்கேயே காத்துக் கொண்டிருக்கிறேன்!

ஆடி மாத ஏகாதசி காலங்களில் எத்தனை கோடி மக்கள் வருகிறார்கள்! ஆனால், ஒருவரும் ஏன் என்னிடம் ஒன்றுமே 

சொல்லவில்லை?

இன்று ஏன் திடீரென என்னைச் சந்திக்க ஓடி வந்திருக்கிறது இருபத்தெட்டு யுகங்களாகக் காத்திருந்த  தனிமை!

அவள் திரும்பவும் கல்லானாள்!

- அருண் கோல்ஹட்கர்

***

அம்மாவின் மறைவுக்கு பின்  அப்பா

அம்மாவின் மறைவுக்கு பின் தான் அப்பா மௌனமானார்.

முன்பு போல் சமையலறை மூலையில் உள்ள பூஜை அறையில்  

  கடவுளைக் குளிப்பாட்டி, 

உணவு படைக்கிறார்.   

  ஆனால், ஆரத்தி எடுக்கும்போது 

கை நடுங்குகிறது. 

அம்மா வைத்த பாதாம் மரத்தின் கீழ் சேர்ந்த குப்பைகளை சுத்தம் செய்யும் பொருட்டு,

அவள் நினைவில் வாழ அங்கேயே நிழல் ஆகிறார்.

வீட்டு திண்ணையில் அமர்ந்தபடி வானத்தையே பார்த்துக் கொண்டிருக்கிறார்.

கட்டி வைத்த பழைய நூல்களை எடுத்து மீண்டும் கட்டி வைக்கிறார்.

செய்தித்தாளை கண்ணுக்கு மிக அருகில் வைத்து படிக்க முடியாதபடி படிக்கிறார்.

சாப்பாட்டுக்குப் பிறகு ஊதுபத்திக் குச்சியால் பல்லின் இடுக்குகளைக்

குத்தியபடியே இருக்கிறார்.

காய்ந்த மாம்பழக் கொட்டையிலி ருந்து வரும் 

தளிர் பச்சை முளை போல, பழைய நினைவுகளைச் சொல்ல எண்ணித் தன் மௌனத்தைக் கலைக்கிறார்,

ஆனால் எப்போதாவது.!

- தாஸு  வைத்ய்

***

நிழல்

மதிய நேரமிது.

நான் சாலையின் ஓரத்தில் நின்றிருக்கிறேன். என் வலது பக்கமாய் ஒரு பெரிய அடர்ந்த மரம். 

அதன் நிழல் என் முன்னால் விழுகிறது.

மரத்தின் தண்டு கருமையானதாகவும் ,

கிளைகள் சாம்பல் பழுப்பிலும், இலைகள் தளிர் கரும் பச்சையாகவும், அழகிய வண்ண மலர்களும் கூடியதாய்,

 நீல வானின் கீழ் நின்றிருக்கிறது.

அதன் கிளையில் மின்னும் கருப்பில் காகம் அமர்ந்திருக்கிறது.

மரம் தன்னுள் பல நிறங்களைக் கொண்டிருந்தாலும்,

 அதன் நிழலில் இலைகள், தண்டு கிளைகள், பூ, காகம்,  என அனைத்துமே கருப்பானது.

நிழல் மரத்தின் அத்தனையையும் ஒன்றாக்கிவிட்டது. 

 பார்க்க போனால் பேதமற்ற நிழலில் தான் மரத்தின் ஒட்டுமொத்தமும் ஒன்றாய் உயிர்த்துள்ளது!

- ஷாந்தா  ஷேல்கே

***

கவிதைகள், தமிழில் ஆர். தீபா

Share:

0 comments:

Post a Comment

Powered by Blogger.

இருப்பின் நெசவு - அஜிதன் நேர்காணல்

புனைவெழுத்துக்கு அப்பால் நீங்கள் கவிதை எழுத முயற்சி செய்தது உண்டா? கவிதையுடனான உங்களது உறவு குறித்துச் சொல்லுங்கள்?  ஆம். நான் முதன்முதலாக ஏ...

தேடு

முந்தைய இதழ்கள்

Labels

அபி (13) அரவிந்தர் (1) அருண் கோல்ஹட்கர் (1) அறிமுகம் (1) அஜிதன் (1) ஆக்டேவியா பாஸ் (2) ஆதித்ய ஸ்ரீநிவாஸ் (1) ஆதிமந்திய (1) ஆத்மாநாம் (3) ஆனந்த் குமார் (8) இசை (11) இந்தி (7) இரா. கவியரசு (1) இளங்கோ கிருஷ்ணன் (2) உபநிடதம் (1) உரையாடல் (3) உன்னத சங்கீத (1) எதிர்வின (2) எம். கோபாலகிருஷ்ணன் (2) எம்.எஸ். கல்யாணசுந்தரம் (1) எஸ். ராமகிருஷ்ண (1) எஹுதா அமிக்ஹாய் (1) ஓக்ட்டாவியோ ப்பாஸ் (1) க. மோகனரங்கன் (5) க.நா. சுப்பிரமணியம் (3) க.நா. சுப்ரமணியம் (15) கட்டுரை (11) கண்டராதித்தன் (1) கப (1) கமலதேவி (1) கம்பன் (1) கலாப்ரியா (1) கலீல் கிப்ரான் (2) கல்பற்றா நாராயணன் (5) கல்பனா ஜெயகாந்த் (2) கவிதை (246) கவிதையின் மத (1) கவிதையின் மதம் (1) காரைக்கால் அம்மைய (1) காரைக்கால் அம்மையார் (2) கார்த்திக் பாலசுப்ரமணியன் (1) காளிதாசன் (1) காஸ்மிக் தூசி (1) கிம் சின் டே (1) கிரிராஜ் கிராது (3) குமரகுருபரன் விருது (8) குன்வர் நாராயண் (1) கே. சச்சிதானந்தன் (1) கேரி ஸ்னிடர் (1) கைலாஷ் சிவன் (1) கோ யுன் (1) ச. துரை (4) சங்க இலக்கியம் (4) சசி இனியன் (1) சஞ்சய் சௌத்ரி (1) சதீஷ்குமார் சீனிவாசன் (6) சந்தப்பாடல்கள் (1) சந்திரா தங்கராஜ் (1) சபரிநாதன் (5) சாரு நிவேதிதா (1) சீர்மை பதிப்பகம் (1) சுகந்தி சுப்ரமணிய (1) சுகுமாரன் (5) சுந்தர ராமசாமி (2) சுனில் கிருஷ்ணன் (1) செல்வசங்கரன் (2) சோ. விஜயகுமார் (4) ஞானக்கூத்தன் (1) டி.எஸ். எலியட் (1) தாகூர் (1) தாஸ் வைத்ய் (1) தூயன் (1) தேவதச்சன் (6) தேவதேவன் (28) தேவேந்திர பூபதி (1) நகுலன் (3) நித்ய சைதன்ய யதி (1) நெகிழன் (1) நேர்காண (1) நேர்காணல் (3) பாபு பிரித்விராஜ் (1) பாபு பிருத்விராஜ் (1) பிப்ரவரி 2022 (2) பிரதீப் கென்னடி (1) பிரமிள் (4) பிரான்சிஸ் (1) பூவன்னா சந்திரசேக (1) பெரு. விஷ்ணுகுமார் (2) பெருந்தேவி (1) பைபிள் (1) பொன்முகலி (1) போகன் சங்கர் (3) போர்ஹே (1) மங்களேஷ் டப்ரால் (1) மதார் (8) மரபு கவிதை (8) மராட்டி (2) மலையாள (1) மலையாளம் (1) மனுஷ்யபுத்திரன் (1) மா. அரங்கநாதன் (1) மு. சுயம்புலிங்கம் (1) முகாம் (2) மொழிபெயர்ப்பு (16) மோகனரங்கன் (1) யவனிகா ஸ்ரீராம் (2) யான் வாங் லீ (1) யுவன் சந்திரசேகர் (15) யூமா வாசுக (2) ரகுவம்சம் (1) ரமாகாந்த் ரத் (1) ரமேஷ் பிரேதன் (1) ராமாயணம் (1) ரியோகான் (1) ரூமி (1) ரெயினர் மரியா ரீல்க (1) லட்சுமி மணிவண்ணன் (3) லதா (1) லாரா கில்பின் (1) வ. அதியம (1) வண்ணதாசன் (3) வாசகர் (1) வாசிப்பு (1) வாலஸ் ஸ்டீபன் (1) வி. சங்கர் (2) விக்ரமாதித்யன் (8) விவாத (1) வீரான்குட்டி (3) வெய்யில் (1) வே. நி. சூர்யா (5) வே.நி. சூர்யா (7) வேணு தயாநிதி (1) வேணு வேட்ராய (1) ஜெ. ரோஸ்ல (1) ஜெயமோகன் (2) ஜெயமோகன் தேர்வு (1) ஜென் (1) ஷங்கர் ராமசுப்ரமணியன் (1) ஷாஅ (1) ஷாந்தா ஷேலகே (2) ஷெல்லி (1) ஸென் கவிதை (1) ஸ்ரீநேசன் (1)

Most Popular

Blog Archive