சுகுமாரன் கவிதைகள் - க.நா.சு

புதுக்கவிதை என்கிற இயக்கம் பாரதியாரில் தொடங்கி, பல கிளைகளாகக் கிளைத்து, புதுமைப்பித்தன், பிச்சமூர்த்தி முதலியவர்கள் தந்த வேகத்திலிருந்து மீண்டும், புதுமை, புதுமை என்று தேடி, ஒரு கிளை, சர்வஜனரஞ்சகமான பத்திரிகைகளுக்குத் துணுக்குத்தரமாகவும், சினிமா கிசுகிசுப்புக்கும், மேலோட்டத்துக்கும் பரபரப்புக்கும், ஈடு கொடுக்கிற மாதிரி, ஒரு கிளையாக செயல்படுவதை மறந்து ஒதுக்கி, கவிதை முயற்சிகளை மட்டும் விமர்சனபூர்வமாகச் சேர்த்துப் பார்ப்பதற்கு இன்னும் காலம் வரவில்லை என்றுதான் தோன்றுகிறது.

மதிப்புரை சொல்ல இங்கு எடுத்துக்கொண்ட, ‘கோடைகாலக் குறிப்புகள்’ என்கிற சுகுமாரன் கவிதைகளை எடுத்துக்கொண்டால் இவர் எழுதியுள்ள இந்த இருபது கவிதைகளும் நாம் சமீப காலத்திலே நல்ல புதுக் கவிதையாளர்கள் என்று சொல்லக்கூடிய இருபது பேர்வழிகளில் எவருடைய கவிதைக்கும் மட்டமானதில்லை என்று சொல்ல வேண்டும். இது ஒரு விதத்தில் Negative அபிப்பிராய விமர்சனம். பாஸிடிவ்வாகச் சொல்லியும் பார்க்கலாம், அதற்கு இடம் தருகிறார் கவிஞர் சுகுமாரன்.

ஒரு தனிக் குரலாக இவர் குரல், இந்த இருபது கவிதைகளில் ஒலிப்பதைக் காண்கிறோம். தனிமையில் - ஒரு முழு மனிதனாக அவர் குரல் எழுப்புகிறார். அது நம் உள்ளத்தில் எதிரொலி எழுப்புகிறது. முகவுரையில் பிராம்மராஜன் இவரை சோக மலைகளினால் நசுக்குறப் பெறும் மனிதராகக் காண்கிறார். அதற்கு அவசியம் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. சோகமும், சுகமும் ஒரு மனித முழுமையில் சிறு அம்சங்கள்தான். சோகம் தொனிக்கிற அளவில் சுகமும், இந்தக் கவிதைகளில் தொனிப்பதாகவே எனக்குத் தோன்றுகிறது.

“எங்கும் மின் விளக்குகளின் ஊளை

அகண்ட ஸிம்பனியொன்றின் சாயலை நெருடவிட்டு

என்ஜின்கள் பிளிரும் இடையிடையே

ஒரு பேய்க்கனவின்

ஒற்றைக் கண்போல் தொங்கும் கடிகாரம்

கூரையிலிருந்து உதிர்ந்து

ஒளிவிடம் தேடி நகரும்

யந்திர உறுமல்களுக்குப் பழகிய நொண்டிக் குருவி

வயிற்றிலும் கண்களிலும் பசியுடன்

மௌனமாய் நச்சரிக்கும்

அகாலமாய் மல்லிகை சூடிய பெண்

கனவுகள் பொதிந்த சுமைகளுடன்

திசைகளை அடையக் கிடக்கும் பிரயாணிகள்”

என்று ஒரு காட்சியை உருவகப்படுத்துகிற லாகவம் ஆனந்தத்தைக் கொடுக்கிறது. சோகக் கதைதான்.

“முகமில்லாத நண்பன்

சக்கரங்களடியில் கந்தல் சதையானான்

கூக்குரல்

புலம்பல்கள் - பிறகு

நிசப்தம்

...

சாட்சிகளை நிறுத்திக் கடந்து போனது மரணம்

புத்தகங்களும் நம்பிக்கைகளும் என்னைக் கைவிட்டன

அப்போது”

“யதார்த்தம் / கழைக் கூத்தாடியின் வளையத்தில் சிக்கிய / உடலாய் நெளிகிறது!” என்றும், “சொல்லித் தந்ததோ / கற்றுக்கொண்டதோ போல இல்லை / வாழ்க்கை -அது / குழந்தைக் கவிதையில் மந்திரவாதி எங்கோ ஒளித்து வைத்த | உயிர்” என்றும் “காட்சி முடிந்த அரங்கில் / நாற்காலிமீது விடுபட்டுப்போன புஸ்தகம் போல” என்றும் “என் கை நீரைக் கவிழ்த்தேன் | போகும் நதியில் எது என் நீர்?” என்றும் சொல்ல முடிகிற கவிஞனின் எதிர்காலக் கவிகளை ஒரு நம்பிக்கையுடன் எதிர்கொள்ளத் தயாராக இருக்கவேண்டும் என்றுதான் எனக்குத் தோன்றுகிறது.

நிஜமான புதுக்கவிதையில் சிரத்தை உள்ள எல்லோரும் படித்து அனுபவிக்க வேண்டிய நூல் சுகுமாரனின் ‘கோடைகாலக் குறிப்புகள்’.

கோடைகாலக் குறிப்புகள் – சுகுமாரன் கவிதைகள் தர்ஸனா பப்ளிகேஷன்ஸ், கோயம்புத்தூர் 641045, 48 பக்கங்கள் ரூ 6.00 மார்ச் 1985.

‘ஞானரதம்’, பிப்ரவரி 1986

***

சுகுமாரன் தமிழ் விக்கி பக்கம்

க.நா.சு தமிழ் விக்கி பக்கம்

***
Share:

0 comments:

Post a Comment

Powered by Blogger.

தாயுமானவர் - க.நா.சு

நமக்கெல்லாம் வேதாந்தம் நன்றாகவே வரும் என்பது உண்மைதான். ஆனால் வேதாந்தம் என்றால் ஓடி ஒளிந்து கொள்கிறவர்கள் நினைப்பதுபோல் வேதாந்தத்தைத் தவிர வ...

தேடு

முந்தைய இதழ்கள்

Labels

அபி (13) அரவிந்தர் (1) அருண் கோல்ஹட்கர் (1) அறிமுகம் (1) அஜிதன் (1) ஆ. அமிர்தராஜ் (1) ஆக்டேவியா பாஸ் (2) ஆதித்ய ஸ்ரீநிவாஸ் (1) ஆதிமந்திய (1) ஆத்மாநாம் (3) ஆவுடையக்காள் (1) ஆனந்த் குமார் (8) இசை (11) இந்தி (7) இரா. கவியரசு (1) இளங்கோ கிருஷ்ணன் (2) உபநிடதம் (1) உரையாடல் (3) உன்னத சங்கீத (1) எதிர்வின (2) எம். கோபாலகிருஷ்ணன் (2) எம்.எஸ். கல்யாணசுந்தரம் (1) எஸ். ராமகிருஷ்ண (1) எஹுதா அமிக்ஹாய் (1) ஓக்ட்டாவியோ ப்பாஸ் (1) க. மோகனரங்கன் (5) க.நா. சுப்பிரமணியம் (3) க.நா. சுப்ரமணியம் (18) கட்டுரை (11) கண்டராதித்தன் (1) கண்டனம் (1) கப (1) கமலதேவி (1) கம்பன் (1) கலாப்ரியா (1) கலீல் கிப்ரான் (2) கல்பற்றா நாராயணன் (5) கல்பனா ஜெயகாந்த் (2) கவிதை (260) கவிதையின் மத (1) கவிதையின் மதம் (1) காரைக்கால் அம்மைய (1) காரைக்கால் அம்மையார் (2) கார்த்திக் பாலசுப்ரமணியன் (1) காளிதாசன் (1) காஸ்மிக் தூசி (1) கிம் சின் டே (1) கிரிராஜ் கிராது (3) குமரகுருபரன் விருது (8) குன்வர் நாராயண் (1) கே. சச்சிதானந்தன் (1) கேரி ஸ்னிடர் (1) கைலாஷ் சிவன் (1) கோ யுன் (1) ச. துரை (4) சங்க இலக்கியம் (4) சசி இனியன் (1) சஞ்சய் சௌத்ரி (1) சதீஷ்குமார் சீனிவாசன் (6) சந்தப்பாடல்கள் (1) சந்திரா தங்கராஜ் (1) சபரிநாதன் (5) சாரு நிவேதிதா (1) சீர்மை பதிப்பகம் (1) சுகந்தி சுப்ரமணிய (1) சுகுமாரன் (6) சுந்தர ராமசாமி (2) சுனில் கிருஷ்ணன் (1) செல்வசங்கரன் (2) சோ. விஜயகுமார் (4) சோலைக்கிளி (1) ஞானக்கூத்தன் (1) டி.எஸ். எலியட் (1) டி.ஏ. பாரி (1) தாகூர் (1) தாஸ் வைத்ய் (1) தி.சோ. வேணுகோபாலன் (1) திரிகூட ராசப்ப கவிராயர் (1) தூயன் (1) தேவதச்சன் (6) தேவதேவன் (29) தேவேந்திர பூபதி (1) ந. பிச்சமூர்த்தி (1) ந. ஜயபாஸ்கரன் (1) நகுலன் (3) நித்ய சைதன்ய யதி (1) நெகிழன் (1) நேர்காண (1) நேர்காணல் (3) பாபு பிரித்விராஜ் (1) பாபு பிருத்விராஜ் (1) பிப்ரவரி 2022 (2) பிரதீப் கென்னடி (1) பிரமிள் (4) பிரான்சிஸ் (1) புதுமைப்பித்தன் (1) பூவன்னா சந்திரசேக (1) பெரு. விஷ்ணுகுமார் (2) பெருந்தேவி (1) பைபிள் (1) பொன்முகலி (1) போகன் சங்கர் (3) போர்ஹே (1) மங்களேஷ் டப்ரால் (1) மதார் (8) மரபு கவிதை (8) மராட்டி (3) மலையாள (1) மலையாளம் (1) மனுஷ்யபுத்திரன் (1) மா. அரங்கநாதன் (1) மு. சுயம்புலிங்கம் (1) முகாம் (2) மொழிபெயர்ப்பு (17) மோகனரங்கன் (1) யவனிகா ஸ்ரீராம் (2) யான் வாங் லீ (1) யுவன் சந்திரசேகர் (15) யூமா வாசுக (2) ரகுவம்சம் (1) ரமாகாந்த் ரத் (1) ரமேஷ் பிரேதன் (1) ராமாயணம் (1) ரியோகான் (1) ரூமி (1) ரெயினர் மரியா ரீல்க (1) லட்சுமி மணிவண்ணன் (3) லதா (1) லாரா கில்பின் (1) வ. அதியம (1) வண்ணதாசன் (3) வாசகர் (1) வாசிப்பு (1) வாலஸ் ஸ்டீபன் (1) வி. சங்கர் (2) விக்ரமாதித்யன் (12) விவாத (1) வீரான்குட்டி (3) வெய்யில் (1) வே. நி. சூர்யா (5) வே.நி. சூர்யா (7) வேணு தயாநிதி (1) வேணு வேட்ராய (1) வேணு வேட்ராயன் (1) ஜெ. ரோஸ்ல (1) ஜெயமோகன் (2) ஜெயமோகன் தேர்வு (1) ஜென் (1) ஷங்கர் ராமசுப்ரமணியன் (1) ஷாஅ (1) ஷாந்தா ஷேலகே (2) ஷெல்லி (1) ஸென் கவிதை (1) ஸ்ரீநேசன் (1)

Most Popular

Blog Archive