இசுமி சிகிபு கவிதைகள் - கடலூர் சீனு

இசுமி சிகிபு, 10 ஆம் நூற்றாண்டு ஜப்பானின் முக்கிய கவிஞர். ஹெயான் அரசவையை சேர்ந்த அரசவை  கவிஞர். அரசவைக்  காதல் பாடல்கள் எனும் வகைமையில், தங்கா எனும் இலக்கண வடிவில் கவிதைகள் எழுதியவர். 

இவரது வாழ்க்கைக் குறிப்பை வாசிக்கையில், நான்கு ஐந்து திருமணம் செய்து, மூன்று நான்கு விவாகரத்துக்கள் செய்து, ஏககாலத்தில் இரண்டு மூன்று காதலர்களுடன் சேர்ந்து கவிதாயினி கோலாகலமாக வாழ்ந்ததை அறிய முடிகிறது. இவரது வாழ்வு குறித்தும் கலை குறித்தும் நீலி இதழில் எழுத்தாளர் சுசித்ரா விவாதமுகம் கொண்ட கட்டுரை எழுதி இருக்கிறார். இவரது கவிதைகள் குறித்து எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் அவரது தளத்தில் அறிமுகம் செய்திருக்கிறார்.

ஜேன் ஹெர்ஷ் பீல்ட் என்பவர் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்திருந்த இசுமி கவிதைகளில் இருந்து சிலவற்றை தேர்வு செய்து எனக்கென நான் செய்து வைத்திருந்த  (கவிதைச் சவையின் பொருட்டு  சற்றே சுதந்திரம் எடுத்துக் கொண்ட) மொழியாக்கம் இது. இவரது கவிதையிகளில் வரும் நிலமும் பொழுதும் தமிழின் சங்கக் கவிதைகளுக்கு இணையானது. அதே சமயம் இந்த இசுமி கவிதைகளில்  உள்ள நிலமும் பொழுதும் கொண்ட நிலையாமை, பௌத்தம் சொல்லும் நிலை இன்மை, நிறை இன்மை, சாரம் இன்மை இவற்றுக்கு அருகே வருவது. பௌத்த சாரம் கொண்ட காதல் கவிதைகள் என்று இவற்றை  வரையறை செய்யலாம்.

இசுமி தனது இறுதிக் காலத்தில் பௌத்த பிக்குனி ஆகிவிட்டார் என்றும், கியோட்டோ நகரில் உள்ள செய் ஷின் இன் ஆலயத்தில் இன்றும் இசுமி வணங்கப்படுகிறார் என்றும் அவரைக் குறித்த ஆவணப்படம் ஒன்று தெரிவிக்கிறது.

1

அதிகாலை

நடுவானில் தனித்திருக்கும் நிலவினைக்

காண்கையில்

எப்பகுதியும் விடுபடாது

என்னை நான் முழுதறிகிறேன்.

2

பாறையின் அருகில் நிற்கும்

இந்தப் பைன்மரத்திற்கு

நினைவுகளும் இருக்கக் கூடுமோ?

​ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகும்,

அதன் கிளைகள்

நிலம் நோக்கி எவ்விதம் குனிந்திருக்கிறது பாருங்கள்...

3

​எவருக்காக காத்திருந்தேனோ

அவர் இப்போது வந்துவிட்டால்

என்ன செய்வது நான்?

கால்தடங்கள் சிதைக்கலாகுமோ,

காலைப்பனி போர்த்திய

இந்த அழகிய தோட்டத்தை...

4

நினைத்துக் கொண்டிருக்கிறேன் உன்னை

உனக்கான ஏக்கத்தால் 

என் உடல் கொள்ளும் 

ஒளிர்வினை  ஒத்திருக்கின்றன

இந்த சதுப்பு நிலத்தின் 

மின்மினிகள்.

5

வெற்று வானிற்குள்

நீ ஏன் மறைந்து போனாய்?

வீழும் பனித்தூவல்கள் கூட பூமியில்தானே 

விழுகிறது.

6

அறுந்து சிதறும்

மிடற்று ஆரத்து 

மணிகளைப் பற்றுவதினும் கடிது

இந்த வாழ்வைப் பற்றிப் பேணுவது.

7

காதலுக்கு

இவ்வுலகில்

வண்ணமேதுமில்லை.

ஆயினும்

இவ்வளவு ஆழமாக எப்படி என் உடல் உன்னால்  வண்ணம் கொண்டது?

8

இப்பொழுதில்  

என் அணுக்கர்

என் சொந்த உடல்

இவைகளும் கூட 

வேறுபட்ட திசைகளில்

மிதந்து செல்லும்

முகில்களாகிவிடும்

9

​நிகழும் இவ்வுலகு

கனவென நீ அறியாயோ?

முன்பொருகாலம்

உன்னை மிக விழைந்தேன்...

எவ்வாறாயினும்,

கணத்தில் கடந்துசென்ற

ஒன்றுதான் அதுவும்.

10

இவ்வுலகில் இருக்கக்கூடாது எது?

மறப்பவனா?

மறக்கப்படுபவனா?

எது மேலானது? 

இறந்த பிறகும் ஒருவரை விரும்புவதா?

நீங்கள் உயிருடன் இருக்கும்போதே ஒருவரை ஒருவர் காணாதிருப்பதா?

எது சிறப்பு?

நீங்கள் ஏங்கும் தொலைதூர காதலரா?

அல்லது நேசமின்றி நீங்கள் நிதமும் சந்திக்கும் ஒருவரா?

கணந்தோறும் மாறும் விஷயங்களில் 

எதுதான் சற்றேனும் நம்பக்கூடியது?

விரைந்து வீழும் அருவியா?

ஒழுகும் நதியா?

அல்லதிந்த மானுட உலகா?

***

Share:

0 comments:

Post a Comment

Powered by Blogger.

இசுமி சிகிபு கவிதைகள் - கடலூர் சீனு

இசுமி சிகிபு, 10 ஆம் நூற்றாண்டு ஜப்பானின் முக்கிய கவிஞர். ஹெயான் அரசவையை சேர்ந்த அரசவை  கவிஞர். அரசவைக்  காதல் பாடல்கள் எனும் வகைமையில், தங்...

தேடு

முந்தைய இதழ்கள்

Labels

அபி (14) அரவிந்தர் (1) அருண் கோல்ஹட்கர் (1) அறிமுகம் (1) அஜிதன் (1) ஆ. அமிர்தராஜ் (1) ஆக்டேவியா பாஸ் (2) ஆதித்ய ஸ்ரீநிவாஸ் (1) ஆதிமந்திய (1) ஆத்மாநாம் (3) ஆவுடையக்காள் (1) ஆனந்த் (1) ஆனந்த் குமார் (9) இசுமி சிகிபு (1) இசை (11) இந்தி (7) இரா. கவியரசு (1) இளங்கோ கிருஷ்ணன் (2) உபநிடதம் (1) உரையாடல் (3) உன்னத சங்கீத (1) எதிர்வின (2) எம். கோபாலகிருஷ்ணன் (2) எம்.எஸ். கல்யாணசுந்தரம் (1) எஸ். ராமகிருஷ்ண (1) எஸ்ரா பவுண்ட் (1) எஹுதா அமிக்ஹாய் (1) ஓக்ட்டாவியோ ப்பாஸ் (1) க. மோகனரங்கன் (5) க.நா. சுப்பிரமணியம் (3) க.நா. சுப்ரமணியம் (18) கட்டுரை (11) கண்டராதித்தன் (1) கண்டனம் (1) கப (1) கமலதேவி (1) கம்பன் (1) கருத்தரங்கு (1) கலாப்ரியா (1) கலீல் கிப்ரான் (2) கல்பற்றா நாராயணன் (5) கல்பனா ஜெயகாந்த் (2) கவிதை (285) கவிதையின் மத (1) கவிதையின் மதம் (2) காரைக்கால் அம்மைய (1) காரைக்கால் அம்மையார் (2) கார்த்திக் பாலசுப்ரமணியன் (1) காளிதாசன் (1) காஸ்மிக் தூசி (1) கிம் சின் டே (1) கிரிராஜ் கிராது (3) குமரகுருபரன் விருது (8) குன்வர் நாராயண் (1) கே. சச்சிதானந்தன் (1) கேரி ஸ்னிடர் (1) கைலாஷ் சிவன் (1) கோ யுன் (1) ச. துரை (4) சங்க இலக்கியம் (4) சங்கர் கணேஷ் (1) சசி இனியன் (1) சஞ்சய் சௌத்ரி (1) சதீஷ்குமார் சீனிவாசன் (7) சந்தப்பாடல்கள் (1) சந்திரா தங்கராஜ் (1) சபரிநாதன் (5) சம்யுக்தா மாயா (6) சாரு நிவேதிதா (1) சார்லஸ் சிமிக் (1) சீர்மை பதிப்பகம் (1) சுகந்தி சுப்ரமணிய (1) சுகுமாரன் (6) சுந்தர ராமசாமி (2) சுனில் கிருஷ்ணன் (1) செல்வசங்கரன் (2) சோ. விஜயகுமார் (4) சோலைக்கிளி (1) ஞானக்கூத்தன் (1) டி.எஸ். எலியட் (1) டி.ஏ. பாரி (1) தாகூர் (1) தாஸ் வைத்ய் (1) தி.சோ. வேணுகோபாலன் (1) திரிகூட ராசப்ப கவிராயர் (1) தூயன் (1) தேவதச்சன் (8) தேவதேவன் (31) தேவேந்திர பூபதி (1) ந. பிச்சமூர்த்தி (1) ந. ஜயபாஸ்கரன் (1) நகுலன் (3) நித்ய சைதன்ய யதி (1) நெகிழன் (1) நேர்காண (1) நேர்காணல் (3) பாபு பிரித்விராஜ் (2) பாபு பிருத்விராஜ் (1) பிப்ரவரி 2022 (2) பிரதீப் கென்னடி (1) பிரமிள் (4) பிரான்சிஸ் (1) புதுமைப்பித்தன் (1) பூவன்னா சந்திரசேக (1) பெரு. விஷ்ணுகுமார் (2) பெருந்தேவி (1) பைபிள் (1) பொன்முகலி (1) போகன் சங்கர் (4) போர்ஹே (1) மங்களேஷ் டப்ரால் (1) மதார் (10) மரபு கவிதை (8) மராட்டி (3) மலையாள (1) மலையாளம் (1) மனுஷ்யபுத்திரன் (2) மா. அரங்கநாதன் (1) மு. சுயம்புலிங்கம் (1) முகாம் (2) மொழிபெயர்ப்பு (17) மோகனரங்கன் (1) யவனிகா ஸ்ரீராம் (2) யாக்கூப் (1) யான் வாங் லீ (1) யுவன் சந்திரசேகர் (15) யூமா வாசுக (2) ரகுவம்சம் (1) ரமாகாந்த் ரத் (1) ரமேஷ் பிரேதன் (1) ராமாயணம் (1) ராஜமார்த்தாண்டன் (1) ரியோகான் (1) ரூமி (1) ரெயினர் மரியா ரீல்க (1) லட்சுமி மணிவண்ணன் (3) லதா (1) லாரா கில்பின் (1) வ. அதியம (1) வண்ணதாசன் (3) வாசகர் (1) வாசிப்பு (1) வாலஸ் ஸ்டீபன் (1) வி. சங்கர் (2) விக்ரமாதித்யன் (15) விவாத (1) வீரான்குட்டி (3) வெய்யில் (1) வே. நி. சூர்யா (5) வே.நி. சூர்யா (7) வேணு தயாநிதி (1) வேணு வேட்ராய (1) வேணு வேட்ராயன் (1) ஜெ. ரோஸ்ல (1) ஜெயமோகன் (3) ஜெயமோகன் தேர்வு (1) ஜென் (1) ஶ்ரீநேசன் (1) ஷங்கர் ராமசுப்ரமணியன் (1) ஷங்கர்ராமசுப்ரமணியன் (1) ஷாஅ (1) ஷாந்தா ஷேலகே (2) ஷெல்லி (1) ஸென் கவிதை (1) ஸ்ரீநேசன் (1)

Most Popular

Blog Archive