1
காலம் - வானத்தைக் காணாத மண்புழுவென
பாறைக்கடியில் உறைந்திருக்கிறது
தெரியவில்லை
யார் முட்டியது என்றே
நகர்ந்துவிட்ட பாறை
முதல் முதலில் புழுவிற்கு
வானத்தைக் காட்டியது
அதுவரையிலும்
உறைந்து கிடந்த காலம்
ஒரு மண்புழுவென முன்னும் பின்னும்
ஒரே பாவனையில்
நகர்கிறது
2
துளை
வழியே வந்த
ஒளி
ஒரு கோடு போலிருந்தது
சிறு தூரம்தான் கடந்து சென்றால்
கோடுமில்லை
ஒளியுமில்லை
3
தவறு
சிறு தவறு
மீண்டும் மீண்டும்
நிகழ்கிறது
வளைவுகளில்
மேடுபள்ளங்களில்
நிறுத்தங்களில்
பிறகு
அதற்கும் மேலும்
நகராமல்
தாவல் மறந்த தவளையைப் போல்
வரும் ஒளி கண்டு
நடுச்சாலையில்
அங்கேயே அப்படியே
நின்று
விடுகிறது
***







0 comments:
Post a Comment