ஞானபீடம் விருது - கண்டனம்

இந்திய அளவில் இலக்கியத்திற்காக வழங்கப்படும் ஞானபீடம் விருது இவ்வருடம் பாடலாசிரியர் வைரமுத்துவிற்கு வழங்கப்பட்டுள்ளது. இலக்கியத்திற்காக இந்திய அளவில் ஒரு விருது தமிழ் பாடலாசிரியருக்கு வழங்கப்படுவது ஒட்டுமொத்தமாக தமிழுக்கு செய்யும் இழிவு.

தமிழைத் தாண்டிய ஒரு விருதை தமிழுக்காக ஒருவர் பெறும்போது அவர் மொத்த தமிழ்நாட்டின் பிரதிநிதியாகவே வெளியில் எடுத்துக் கொள்ளப்படுகிறார். ஞானபீட விருதாளர் தமிழின் முகம் என 'வெளியே' பதிவாவதால் வைரமுத்துவுக்கு வழங்கப்பட்டிருக்கும் விருது கண்டனத்திற்குரியதே.

‘வாழும் தமிழ்’ மாநாடு ஏப்ரல் 3,4 தேதிகளில் நியூயார்க்கில் நிகழ்கிறது. அந்நிகழ்வு தமிழை உலகின் முன் கொண்டு நிறுத்துவது மட்டுமல்ல. ஒட்டுமொத்தமாக இங்கிருக்கும் அறிவு தரப்பை உலகின் முன் வெளிச்சமிட்டு காட்டும் நிகழ்வு. உலகிலுள்ள எந்த அறிவு சூழலுக்கும் நாங்கள் சளைத்தவர்கள் அல்ல என்பதை காட்டுவது. இங்கே புதுமைப்பித்தன் தொடங்கி க.நா.சு, சுந்தர ராமசாமி, அசோகமித்திரன், ஜெயமோகன், தேவதேவன் என எந்த உலக இலக்கிய சூழலுக்கும் நிகரான எழுத்தாளுமைகள் கொண்டது தமிழ். இன்று இந்திய சூழலிலேயே தமிழ் அளவிற்கு தீவிரமான இலக்கிய சூழல் வேறெங்கும் இருக்கிறதா என்பது சந்தேகமே. ஆனால் அதே வேளையில் வெண்முரசு போன்ற ஒரு செவ்வியல் படைப்பு தமிழ் பொது சூழலுக்குள் பேசப்படாமல் இருப்பதுமான முரண் இந்திய அளவில் வேறெங்கும் இல்லாதது.

இச்சூழலில் தமிழில் இருந்து இத்தலைமுறையின் ஒரே இலக்கிய முகமாக வைரமுத்து முன்வைக்கப்படுவது நமக்கு நாமே செய்துக் கொள்ளும் இழிவு மட்டுமல்ல ஞானபீடமும் வைரமுத்துவிற்கு அவ்விருதை வழங்கி தன்னை தரம் தாழ்த்திக் கொள்கிறது.

ஞானபீடம் விருது இந்திய அளவில் ஒரு முக்கிய இலக்கிய விருதாக கருதப்படுவதற்கு ஒரே காரணம் அவ்விருது தாராசங்கர் பாணர்ஜி, குவெம்பு, சிவராம காரந்த், ஜெயகாந்தன் போன்ற பேராளுமைகள் பெற்றுள்ளனர் என்பதே. ஒரு விருதை வாங்கிவிடுவது எந்த அளவிலும் படைப்பாளிக்கு பெருமை அல்ல. ஆனால் சரியான படைப்பாளியைச் சென்றடையும்போது ஒரு விருது உண்மையிலேயே பெருமை அடைகிறது. ஜெயகாந்தன் வாங்கிய விருது, ரவீந்திரநாத் தாகூர் வாங்கிய விருது என்றவுடன் தான் அந்த விருதின் மதிப்பு மேலும் மேலும் கூடுகிறது. இத்தருணத்தில் தமிழ் சூழலில் இலக்கிய தகுதியே இல்லாத ஒருவரை சில அரசியல் காரணங்களுக்காக தேர்ந்தெடுத்து விருது வழங்குவதென்பது ஞானபீடம் அது கொண்டிருந்த மதிப்பை முற்றாக இழக்கிறது என்பதை மட்டுமே காட்டுகிறது. தொடர்ந்த அரசியல் சார்பு நிலைகளைக் கொண்டு பல கலை, இலக்கிய அறிவு சூழல் தீர்மானிக்கப்படும் இன்றைய சூழலில் இதுவும் வியக்கதக்க ஒன்றல்ல.

தமிழ் கவிதைக்கான பரிசீலனை இருந்தது என இந்திய சூழலில் ஒரு குழு சொன்னால் அதன் நிபந்தனையற்ற முதல் தேர்வு கவிஞர் தேவதேவனாக இருந்திருக்க வேண்டும். ஆனால் நம் பொது சூழலின் பிரச்சனை நமக்கே தேவதேவனின் முக்கியத்துவம் தெரியவில்லை என்பதே.

இன்று தமிழில் அறியப்பட்ட ஒரு முகம் என்பதன்றி வைரமுத்துவிற்கு இருக்கும் தகுதி என்ன? இன்று வைரமுத்துவை வாசித்தேன் என ஒரு குரல் இங்கே எழுந்திருக்கிறதா? யாரேனும் எழுதிய ஒரு கட்டுரை வாசிக்க கிடைக்கிறதா?

ஆனால் இளம் தலைமுறை எழுத்தாளர்கள், வாசகர்கள் தொடர்ந்து தேவதேவனை வாசித்து வருகின்றனர். கவிதைகள் இதழில் ஒரு இதழ் விடாமல் தேவதேவனைப் பற்றி கட்டுரைகள் வந்துக் கொண்டிருக்கிறது. கவிஞர் அபி கவிதை பற்றிய வாசிப்புகள் தொடர்ந்து இந்த இதழிலேயே முன்வைக்கப்படுகிறது. விக்ரமாதித்யன் தன் முன்னோடிகளைப் பற்றி எழுதியது இங்கே தொடராகிறது. காரணம் அவர்கள் கவிஞர்கள் என்பது.

சுந்தர ராமசாமி அகிலனுக்கு ஞானபீடம் வழங்கபட்ட போது எழுந்த அதே எதிர்ப்பை ஐம்பது ஆண்டுகள் கழித்து நாம் இன்றும் பேசிக் கொண்டிருக்கிறோம் என்பது நமது துர்திஷ்டம். 

ஆனால் இந்த ஐம்பது ஆண்டுகளில் நாம் சுந்தர ராமசாமி கண்ட பல கனவுகளை நினைவாக்கியிருக்கிறோம். இன்று தமிழ் இலக்கிய சூழல் இந்திய அளவில் அல்ல உலக அளவில் அறிய தக்கது. இன்றே நமக்கான ஆங்கில மொழிபெயர்ப்பு சூழல் உருவாகி வந்திருக்கின்றன. இன்றே நம் முன்னோடிகளை நாம் உலக மேடைகளில் பேசும் சூழல் நமக்கு உருவாகி வந்திருக்கிறது. இன்று இந்த கண்டன அறிக்கையை கூட நாளை நம்பிக்கையான மேலும் முன்னோக்கி செல்வதற்கான வழியாகவே கவிதைகள் இதழ் பார்க்கிறது.

தமிழ் நவீன கவிதைக்கு பங்களிப்பு செய்ய வேண்டும் என்ற நோக்கோடு முன்னெடுக்கப்படும் 'கவிதைகள்' இதழ் வைரமுத்துவிற்கு ஞான பீடம் விருது வழங்கியதற்கு கடுமையான கண்டனங்களை பதிவு செய்கிறது. அதே சூழலில் தமிழ் இலக்கியத்தின் மேலும் தீவிரமான போக்கிற்கான சவாலாகவும் இதை கருதுகிறோம்.

-    ஆசிரியர் குழு

***

 புதுமைப்பித்தன் தமிழ் விக்கி பக்கம்

பாரதியார் தமிழ் விக்கி பக்கம்

ந. பிச்சமூர்த்தி தமிழ் விக்கி பக்கம்

கு.ப. ராஜகோபாலன் தமிழ் விக்கி பக்கம்

க.நா. சுப்ரமணியம் தமிழ் விக்கி பக்கம்

ஜெயகாந்தன் தமிழ் விக்கி பக்கம்

மௌனி தமிழ் விக்கி பக்கம்

பிரமிள் தமிழ் விக்கி பக்கம்

லா.ச.ரா தமிழ் விக்கி பக்கம்

சுந்தர ராமசாமி தமிழ் விக்கி பக்கம்

ஜெயமோகன் தமிழ் விக்கி பக்கம்

ஞானக்கூத்தன் தமிழ் விக்கி பக்கம்

விக்ரமாதித்யன் தமிழ் விக்கி பக்கம்

வண்ணதாசன் தமிழ் விக்கி பக்கம்

நாஞ்சில் நாடன் தமிழ் விக்கி பக்கம்

தேவதேவன் தமிழ் விக்கி பக்கம்

அபி தமிழ் விக்கி பக்கம்

கலாப்ரியா தமிழ் விக்கி பக்கம்

எஸ். ராமகிருஷ்ணன் தமிழ் விக்கி பக்கம்

யுவன் சந்திரசேகர் தமிழ் விக்கி பக்கம்

***
Share:

0 comments:

Post a Comment

Powered by Blogger.

தாயுமானவர் - க.நா.சு

நமக்கெல்லாம் வேதாந்தம் நன்றாகவே வரும் என்பது உண்மைதான். ஆனால் வேதாந்தம் என்றால் ஓடி ஒளிந்து கொள்கிறவர்கள் நினைப்பதுபோல் வேதாந்தத்தைத் தவிர வ...

தேடு

முந்தைய இதழ்கள்

Labels

அபி (13) அரவிந்தர் (1) அருண் கோல்ஹட்கர் (1) அறிமுகம் (1) அஜிதன் (1) ஆ. அமிர்தராஜ் (1) ஆக்டேவியா பாஸ் (2) ஆதித்ய ஸ்ரீநிவாஸ் (1) ஆதிமந்திய (1) ஆத்மாநாம் (3) ஆவுடையக்காள் (1) ஆனந்த் குமார் (8) இசை (11) இந்தி (7) இரா. கவியரசு (1) இளங்கோ கிருஷ்ணன் (2) உபநிடதம் (1) உரையாடல் (3) உன்னத சங்கீத (1) எதிர்வின (2) எம். கோபாலகிருஷ்ணன் (2) எம்.எஸ். கல்யாணசுந்தரம் (1) எஸ். ராமகிருஷ்ண (1) எஹுதா அமிக்ஹாய் (1) ஓக்ட்டாவியோ ப்பாஸ் (1) க. மோகனரங்கன் (5) க.நா. சுப்பிரமணியம் (3) க.நா. சுப்ரமணியம் (17) கட்டுரை (11) கண்டராதித்தன் (1) கண்டனம் (1) கப (1) கமலதேவி (1) கம்பன் (1) கலாப்ரியா (1) கலீல் கிப்ரான் (2) கல்பற்றா நாராயணன் (5) கல்பனா ஜெயகாந்த் (2) கவிதை (255) கவிதையின் மத (1) கவிதையின் மதம் (1) காரைக்கால் அம்மைய (1) காரைக்கால் அம்மையார் (2) கார்த்திக் பாலசுப்ரமணியன் (1) காளிதாசன் (1) காஸ்மிக் தூசி (1) கிம் சின் டே (1) கிரிராஜ் கிராது (3) குமரகுருபரன் விருது (8) குன்வர் நாராயண் (1) கே. சச்சிதானந்தன் (1) கேரி ஸ்னிடர் (1) கைலாஷ் சிவன் (1) கோ யுன் (1) ச. துரை (4) சங்க இலக்கியம் (4) சசி இனியன் (1) சஞ்சய் சௌத்ரி (1) சதீஷ்குமார் சீனிவாசன் (6) சந்தப்பாடல்கள் (1) சந்திரா தங்கராஜ் (1) சபரிநாதன் (5) சாரு நிவேதிதா (1) சீர்மை பதிப்பகம் (1) சுகந்தி சுப்ரமணிய (1) சுகுமாரன் (5) சுந்தர ராமசாமி (2) சுனில் கிருஷ்ணன் (1) செல்வசங்கரன் (2) சோ. விஜயகுமார் (4) சோலைக்கிளி (1) ஞானக்கூத்தன் (1) டி.எஸ். எலியட் (1) டி.ஏ. பாரி (1) தாகூர் (1) தாஸ் வைத்ய் (1) திரிகூட ராசப்ப கவிராயர் (1) தூயன் (1) தேவதச்சன் (6) தேவதேவன் (28) தேவேந்திர பூபதி (1) ந. பிச்சமூர்த்தி (1) ந. ஜயபாஸ்கரன் (1) நகுலன் (3) நித்ய சைதன்ய யதி (1) நெகிழன் (1) நேர்காண (1) நேர்காணல் (3) பாபு பிரித்விராஜ் (1) பாபு பிருத்விராஜ் (1) பிப்ரவரி 2022 (2) பிரதீப் கென்னடி (1) பிரமிள் (4) பிரான்சிஸ் (1) புதுமைப்பித்தன் (1) பூவன்னா சந்திரசேக (1) பெரு. விஷ்ணுகுமார் (2) பெருந்தேவி (1) பைபிள் (1) பொன்முகலி (1) போகன் சங்கர் (3) போர்ஹே (1) மங்களேஷ் டப்ரால் (1) மதார் (8) மரபு கவிதை (8) மராட்டி (2) மலையாள (1) மலையாளம் (1) மனுஷ்யபுத்திரன் (1) மா. அரங்கநாதன் (1) மு. சுயம்புலிங்கம் (1) முகாம் (2) மொழிபெயர்ப்பு (17) மோகனரங்கன் (1) யவனிகா ஸ்ரீராம் (2) யான் வாங் லீ (1) யுவன் சந்திரசேகர் (15) யூமா வாசுக (2) ரகுவம்சம் (1) ரமாகாந்த் ரத் (1) ரமேஷ் பிரேதன் (1) ராமாயணம் (1) ரியோகான் (1) ரூமி (1) ரெயினர் மரியா ரீல்க (1) லட்சுமி மணிவண்ணன் (3) லதா (1) லாரா கில்பின் (1) வ. அதியம (1) வண்ணதாசன் (3) வாசகர் (1) வாசிப்பு (1) வாலஸ் ஸ்டீபன் (1) வி. சங்கர் (2) விக்ரமாதித்யன் (11) விவாத (1) வீரான்குட்டி (3) வெய்யில் (1) வே. நி. சூர்யா (5) வே.நி. சூர்யா (7) வேணு தயாநிதி (1) வேணு வேட்ராய (1) ஜெ. ரோஸ்ல (1) ஜெயமோகன் (2) ஜெயமோகன் தேர்வு (1) ஜென் (1) ஷங்கர் ராமசுப்ரமணியன் (1) ஷாஅ (1) ஷாந்தா ஷேலகே (2) ஷெல்லி (1) ஸென் கவிதை (1) ஸ்ரீநேசன் (1)

Most Popular

Blog Archive