நண்பர்களுக்கு,
மலையாளம், ஹிந்தி, வங்காளம் போன்ற பிற மொழிகளில்
உள்ளதை போல் தமிழில் கவிதைக்கென பிரத்யேக இணைய தளம் இல்லை. மறுபுறம் இணையத்தில்,
சமூக வலைதளத்தில் பொழிந்து குவியும் கவிதைகளால் கவிதை வாசிப்பே மட்டுப்படுகிறது. ஒரு
வாசகன் இந்த குவியலுக்கு இடையே தரமானதை தேர்வு செய்ய தவித்துப் போகிறான். இச் சூழலில்
ஒரு எழுத்தாளரின் அல்லது சக கவிதை வாசகனின் சிபாரிசு தேவையாகிறது. ஆகவே இந்த தளம்.
இதழ் ஒவ்வொரு மாதமும் 15 ஆம் தேதி வெளிவரும்.இதில் வெளியாகும் கவிதைகள் 1.1.2020 தேதிக்கு
பின் பிரசுரம் கண்டவை சில பிரசுரம் ஆகாதவையும் கூட. சிற்சில விதிவிலக்குகள் இருக்கலாம். இதில் கவிஞர் மதார், கவிஞர்
ஆனந்த குமார் மற்றும் எழுத்தாளர் ஜி.எஸ்.எஸ்.வி.நவின் ஆகியோர் தெரிவாளர்கள். இவர்களுக்கு
உதவ கிருஷ்ணன், அழகிய மணவாளன், டி. பாரி ஆகிய மூவர் உள்ளனர்.
மேலும் இது ஒரு கூட்டு இணையதளமாக இருப்பதே எங்கள் விருப்பம். எனவே நண்பர்கள் அனைவரும் இதில் பங்கு பெற விரும்புகிறோம். இதற்கு
அனுப்பப்படும் கவிதைகள் பற்றி அதன் ஆசிரியர் அல்லாத ஒருவரின் சிபாரிசு சில வரிகளில்
இருக்க வேண்டும். அவை அடுத்த இதழில் பிரசுரிக்க கருத்தில் கொள்ளப்படும். இப்போதைக்கு
பின்னூட்டம் தவிர்க்கப் படுகிறது, வாசகர்கள் விமர்சனத்தை அல்லது வாசிப்பை மின்னஞ்சல்
செய்யலாம். மின்னஞ்சல் முகவரி: kavithaigaltamil2021@gmail.com
இனி வரும் இதழில் மொத்தம் 10 கவிதைகள் இடம்பெறும்,
அதிகபட்சம் 5 கவிஞர்களின் கவிதைகள் இடம்பெறும்.
நன்றி,
ஆசிரியர் குழு.