நான்கு மயக்கங்கள் - மதார்

எனக்குத் தெரிந்தவரை வானில் பறவைகள் இல்லை - கவிஞர் சதீஷ்குமார் சீனிவாசனின் புதிய தொகுப்பு. 'கவிதையின் நிழலுக்கு அருகில் வந்துவிட்டேன்' என்ற குறிப்புடன் இந்த நூலின் முதல் அறிவிப்பை சதீஷ்குமார் வெளியிட்டிருந்தார். கவிதையின் அசல் உருவையும் இந்நூலின் நிறைய கவிதைகளில் அவர் தொட்டுள்ளார் என்பது கவிதை வாசகனாக என் எண்ணம். இந்தத் தொகுப்பின் கவிதைகளை ஒருசேர வாசிக்கும்போது எனக்கு ஏற்பட்ட நான்கு மயக்கங்கள் குறித்த குறிப்பே இது. 

அ) குதிக்கிற தவளை

குதிக்கிற தவளையின் நினைவு வரும் எனக்கு சதீஷ்குமார் சீனிவாசனின் கவிதைகளைப் படிக்கும்போதெல்லாம். அவரது கவிதைகளில் முக்கியமான சில இடங்களில் வார்த்தைகள் தங்கள் இடங்களை மாற்றி அமர்ந்திருப்பதை ஒரு வாசகன் உணரலாம். இது வெறுமனே வார்த்தை விளையாட்டாக தென்படுவதில்லை. இதை இவ்வாறு விளக்கலாம் : அவரது கவிதைகளில் ஆரம்பந்தொட்டே இரண்டு வார்த்தைகள் கவிதையின் முடிவில் அமர்ந்திருப்பதாக வைத்துக் கொள்வோம். அதை நாம் வாசித்துக் கொண்டு வர வர இறுதியில் அந்த இரண்டு வார்த்தைகளும் மாறியிருக்கும் - இரண்டு தவளைகள் குதித்து இடம் மாறி ஏமாற்றிவிட்டதைப் போல. இந்த விநோதத்தை அவரது பல கவிதைகளை வாசிக்கிறபோது உணர்ந்திருக்கிறேன்.

உன்னை விரும்பினேன்
என்பதற்கு
என்னிடம் எந்த சாட்சியமும் இல்லை

நிரூபிப்பதில்
ஆயிரம் சங்கடங்கள்
அப்போது
எதைச் செய்தாலும்
அதில்
பிழைகளின் அற்புதம்

ஆ) வரிகளின் விரிப்பு 

சுருண்ட பாயை விரிக்கும்போது அது ஒரு பாதையை ஏற்படுத்துகிறது. சதீஷ்குமார் சீனிவாசனின் கவிதைகளில் இந்த தன்மை உண்டு. ஒரு சொல்லை விரித்து உண்டான வரி. இத்தகு வரிகளை இவரது கவிதைகளில் நிரம்பக் காணலாம். வழக்கமாக இவரது கவிதை பாணியில் பிறழ்ந்த வரி, வெறுமை மனம் இரண்டும் உண்டு. இந்த இரண்டு அம்சமுமே தவறான பாதையில் வண்டியை ஓட்டிச் செல்வது மாதிரி. அந்தப் பிறழ்வும் வெறுமையும் அந்த அம்சத்தினூடே கவிதைக்கு ஒரு விநோத அழகைக் கொடுக்கும். சதீஷ்குமார் தனது கவிதை ஊர்தியை தவறான பாதையில் அது தவறான பாதை எனச் சொல்லியபடியே ஓட்டிச் செல்கிறார். இந்த மாறுபட்ட தன்மை வழக்கமான பிறழ்வின் வெறுமையின் கவிதைகளில் இருந்து இவரது கவிதையை வேறுபடுத்துகிறது. 

பாழந்தி

புல்வெளிகள் எரியும் வெயிலில்
அழிவைப் பாடுகிறது காற்று

இன்று பெய்த மழையில் முளைத்த விதை
எந்த நூற்றாண்டின் ஞாபகத்தில்
பிளந்துகொள்கிறது

நான் மன்னிப்பு கேட்கிறேன் வானங்களிடம்

வானம் நீலங்களால் மன்னிக்க
விரும்பியது போலத்தான் தோன்றியது

ஆனால்
அந்தியின்
மயக்கங்களின் பாழ்

இ) குரல் 

கவிஞனுக்கென்று ஒரு குரல் உண்டு. கவிஞன் தரித்த உடல் கொண்ட சாதாரணனுக்கு ஒரு குரல் உண்டு. இந்தச் சாதாரணன் தன் குரலிலிருந்து கவிஞனின் குரலுக்குப் போக முயற்சிப்பான். அது சில சமயங்களில் வெறும் மிமிக்ரியாக முடிந்துவிடும். அந்தக் கவிதைகளிலும் அத்தகைய குறைபாடுகள் தென்படும். சில சமயங்களில் கவிஞன் முழுமையாக வெளிப்பட்டு அவன் குரலில் பேசுவான். அப்போது அவன் எதைப் பேசினாலும் அது கவிதை தான். ஆ! மட்சுஸிமா என்பான், உடனே அது கவிதையாகிவிடும். காபி சாப்பிட போலாம் வா! என்பான் அதுவும் கவிதையாகும். இதைத்தான் பாரதி மந்திரம் போலொரு சொல் என்றானா? மந்திரம் சொல்லால் இல்லை, சொல்பவரால் சொல்பவரின் குரலால் மாத்திரமே சொல் மந்திரம் ஆகிறது. தண்ணீர் ரசம் ஆகிறது. சதீஷ்குமார் சீனிவாசனும் தனது கவிதைகளில் அது துவங்கும்போதிலிருந்தே அந்தக் குரலை எடுக்க முனைகிறார் அல்லது எடுத்துவிடுகிறார். இது அவரது சொற்களை, கூறலை கவிதையாக மாற்றுகிறது. 

ஒரு மீன் அறிகிற நீர்

காற்று அறிந்த மரம்

உடல்களின் முடிச்சவிழ்ந்த காமம்

நீதியின் ருசி அறிந்த
காத்திருப்பின் வெக்கை

விட்டுவிட்டுப் பறந்த பறவை

அபயம் என்ற ஒரு வெற்றிடம்

வெற்றிடத்தின் மெளனம்
அதில் உதித்த சொல்

யாராவது பேச வேண்டும்
திக்கித் திக்கியாவது

ஈ) இரண்டு ஆப்பிள் பெட்டிகள்

இரண்டு ஆப்பிள் பெட்டிகள் கவிதை சதீஷ்குமாரின் முக்கியமான கவிதைகளில் ஒன்று. இந்தக் கவிதை உண்டாக்கும் மயக்கம் வரியாலோ சொல்லாலோ அல்ல, முழுக்கவிதையால்.. முழுக்கவிதையும் ஒரு கவிதையாகி ஒரு மயக்கத்தைத் தருகிறபோது வாசகன் அதன் வரியாலோ சொல்லாலோ அதை நினைவுபடுத்தமாட்டான். வரியோ சொல்லோ அல்லாமல் வேறு ஒன்றே அந்தக் கவிதைக்கு உயிரைத் தரும். (கவிதை எழுதுபவன் தன் உயிரோடு இன்னொரு உயிரையும் கூடுதலாக வைத்திருப்பான் - கவிஞர் லட்சுமி மணிவண்ணனின் கூற்று இது). பெரும்பாலும் அத்தகைய கவிதை ஒரு காட்சியாக படிமமாக மனதில் நிற்கும். அது தரும் மயக்கம் அளப்பரியது. 

இரண்டு ஆப்பிள் பெட்டிகள்

டாடா ஏசியில்
ஆப்பிள் பெட்டிகளுக்கு நடுவே
இரண்டு ஆப்பிள் பெட்டியளவுக்கு
உடல் மடக்கி படுத்திருந்தான் அவன்

இதுவொரு அதிகாலை
பனியூறிய மலைகளின் சாலையில்
இறங்கிக்கொண்டிருந்தது அந்த வண்டி

எனக்கு நம்பிக்கை இல்லை
ஆனாலும்
இரண்டு ஆப்பிள் பெட்டி அளவுள்ள அவனை
யாராவது கேரிபேக்கில் வாங்கிச்செல்வார்கள்

யாராவது
ஒரு துண்டரிந்து வாயிலிடுகையில்
அவன் இனித்தாலும் இனிப்பான்

***

***
Share:

0 comments:

Post a Comment

Powered by Blogger.

Poetic Angst - ஜெயமோகன்

உதிர்ந்த ஒரு பழுப்பு இலை மிதந்து தவிழ்ந்து என்றேனும் உங்கள் மடி வந்தமரக் கூடும். எடுத்து தடவி முத்தமிட்டு மறுபடி காற்றில் விடுங்கள். ஞானத்து...

தேடு

முந்தைய இதழ்கள்

Labels

அபி (13) அரவிந்தர் (1) அருண் கோல்ஹட்கர் (1) அறிமுகம் (1) அஜிதன் (1) ஆ. அமிர்தராஜ் (1) ஆக்டேவியா பாஸ் (2) ஆதித்ய ஸ்ரீநிவாஸ் (1) ஆதிமந்திய (1) ஆத்மாநாம் (3) ஆவுடையக்காள் (1) ஆனந்த் (1) ஆனந்த் குமார் (9) இசை (11) இந்தி (7) இரா. கவியரசு (1) இளங்கோ கிருஷ்ணன் (2) உபநிடதம் (1) உரையாடல் (3) உன்னத சங்கீத (1) எதிர்வின (2) எம். கோபாலகிருஷ்ணன் (2) எம்.எஸ். கல்யாணசுந்தரம் (1) எஸ். ராமகிருஷ்ண (1) எஸ்ரா பவுண்ட் (1) எஹுதா அமிக்ஹாய் (1) ஓக்ட்டாவியோ ப்பாஸ் (1) க. மோகனரங்கன் (5) க.நா. சுப்பிரமணியம் (3) க.நா. சுப்ரமணியம் (18) கட்டுரை (11) கண்டராதித்தன் (1) கண்டனம் (1) கப (1) கமலதேவி (1) கம்பன் (1) கருத்தரங்கு (1) கலாப்ரியா (1) கலீல் கிப்ரான் (2) கல்பற்றா நாராயணன் (5) கல்பனா ஜெயகாந்த் (2) கவிதை (280) கவிதையின் மத (1) கவிதையின் மதம் (1) காரைக்கால் அம்மைய (1) காரைக்கால் அம்மையார் (2) கார்த்திக் பாலசுப்ரமணியன் (1) காளிதாசன் (1) காஸ்மிக் தூசி (1) கிம் சின் டே (1) கிரிராஜ் கிராது (3) குமரகுருபரன் விருது (8) குன்வர் நாராயண் (1) கே. சச்சிதானந்தன் (1) கேரி ஸ்னிடர் (1) கைலாஷ் சிவன் (1) கோ யுன் (1) ச. துரை (4) சங்க இலக்கியம் (4) சங்கர் கணேஷ் (1) சசி இனியன் (1) சஞ்சய் சௌத்ரி (1) சதீஷ்குமார் சீனிவாசன் (7) சந்தப்பாடல்கள் (1) சந்திரா தங்கராஜ் (1) சபரிநாதன் (5) சம்யுக்தா மாயா (6) சாரு நிவேதிதா (1) சார்லஸ் சிமிக் (1) சீர்மை பதிப்பகம் (1) சுகந்தி சுப்ரமணிய (1) சுகுமாரன் (6) சுந்தர ராமசாமி (2) சுனில் கிருஷ்ணன் (1) செல்வசங்கரன் (2) சோ. விஜயகுமார் (4) சோலைக்கிளி (1) ஞானக்கூத்தன் (1) டி.எஸ். எலியட் (1) டி.ஏ. பாரி (1) தாகூர் (1) தாஸ் வைத்ய் (1) தி.சோ. வேணுகோபாலன் (1) திரிகூட ராசப்ப கவிராயர் (1) தூயன் (1) தேவதச்சன் (8) தேவதேவன் (29) தேவேந்திர பூபதி (1) ந. பிச்சமூர்த்தி (1) ந. ஜயபாஸ்கரன் (1) நகுலன் (3) நித்ய சைதன்ய யதி (1) நெகிழன் (1) நேர்காண (1) நேர்காணல் (3) பாபு பிரித்விராஜ் (2) பாபு பிருத்விராஜ் (1) பிப்ரவரி 2022 (2) பிரதீப் கென்னடி (1) பிரமிள் (4) பிரான்சிஸ் (1) புதுமைப்பித்தன் (1) பூவன்னா சந்திரசேக (1) பெரு. விஷ்ணுகுமார் (2) பெருந்தேவி (1) பைபிள் (1) பொன்முகலி (1) போகன் சங்கர் (4) போர்ஹே (1) மங்களேஷ் டப்ரால் (1) மதார் (10) மரபு கவிதை (8) மராட்டி (3) மலையாள (1) மலையாளம் (1) மனுஷ்யபுத்திரன் (2) மா. அரங்கநாதன் (1) மு. சுயம்புலிங்கம் (1) முகாம் (2) மொழிபெயர்ப்பு (17) மோகனரங்கன் (1) யவனிகா ஸ்ரீராம் (2) யாக்கூப் (1) யான் வாங் லீ (1) யுவன் சந்திரசேகர் (15) யூமா வாசுக (2) ரகுவம்சம் (1) ரமாகாந்த் ரத் (1) ரமேஷ் பிரேதன் (1) ராமாயணம் (1) ராஜமார்த்தாண்டன் (1) ரியோகான் (1) ரூமி (1) ரெயினர் மரியா ரீல்க (1) லட்சுமி மணிவண்ணன் (3) லதா (1) லாரா கில்பின் (1) வ. அதியம (1) வண்ணதாசன் (3) வாசகர் (1) வாசிப்பு (1) வாலஸ் ஸ்டீபன் (1) வி. சங்கர் (2) விக்ரமாதித்யன் (14) விவாத (1) வீரான்குட்டி (3) வெய்யில் (1) வே. நி. சூர்யா (5) வே.நி. சூர்யா (7) வேணு தயாநிதி (1) வேணு வேட்ராய (1) வேணு வேட்ராயன் (1) ஜெ. ரோஸ்ல (1) ஜெயமோகன் (3) ஜெயமோகன் தேர்வு (1) ஜென் (1) ஶ்ரீநேசன் (1) ஷங்கர் ராமசுப்ரமணியன் (1) ஷங்கர்ராமசுப்ரமணியன் (1) ஷாஅ (1) ஷாந்தா ஷேலகே (2) ஷெல்லி (1) ஸென் கவிதை (1) ஸ்ரீநேசன் (1)

Most Popular

Blog Archive