வாசகனின் வானம் - கடலூர் சீனு

கடலூரில் எங்கள் சொந்த வீடு முந்தைய வழக்கபடி சிறுக சிறுக எடுத்துக் கட்டிய வீடு. முதலில் தோட்டம் கொண்ட ஓட்டு வீடு. அடுத்து ஓட்டு வீடு பிரித்து விட்டு சமையல்கட்டு மட்டும் ஓடு சரித்து முன்பக்கம் தளம் ஒட்டிய வீடு. பின்னர் தோட்டத்தையும் இணைத்து ஓடு கட்டிடம் எடுத்துவிட்டு மொத்தமாக ஒட்டி, மாடி படிக்கட்டு, மாடியில் ஒரு அறை, மொட்டை மாடி என்று கட்டி வளர்த்த வீடு.

வீடு எப்படி வளர்ந்தாலும் படுக்கை அறையில், கெடிலம் ஆற்றை நோக்கிய ஜன்னல் மட்டும் மாறவே மாறாது. அது என் ஜன்னல். என் பால்யத்தின் உப்பறிகை. மிக பெரியது. நான் உக்கார்ந்து விளையாடலாம். சுருண்டு படுத்து தூங்கலாம். முக்கியமாக எனது கதை புத்தகங்களை அங்கே கிடந்து ஜன்னல் வழியாக வேடிக்கை பார்த்துக்கொண்டே படிக்கலாம். 

இரவுகளில், ராணி காமிக்ஸ் ஜேம்ஸ் பாண்ட்  லண்டனில் நடந்து வரும் வெஸ்ட் மினிஸ்டர் பாலம், அதன் கீழ் ஓடும் தேம்ஸ் நதியை என் ஜன்னலில் அமர்ந்து பார்த்துக்கொண்டு இருப்பேன். கெடிலம் நதியும் அதன் மேல் நிற்கும் (சமீபத்தில் உடைத்து நொறுக்கப்பட்ட) பிரிட்டிஷ் காலத்து இரும்பு பாலமும் அன்றெல்லாம் எனக்கு தூரத்தில் தெரியும் லண்டன் நிலம்தான். அது எனக்கு ஜன்னல் மட்டுமே அல்ல இன்னொரு உலகுக்கான சாளரமும் கூட.

பின்னர் பல்வேறு கீழ்மைகளின் சூழல் அழுத்தம். சொந்த வீட்டை விற்றோம். பதிவாளர் அன்றைய சம்பிரதாயப்படி கையெழுத்து போடும் முன்பாக எங்கள் எல்லோருக்கும் அந்த வீட்டை விற்க பூரண சம்மதம் என்று குரல் விட்டு சொல்ல சொன்னார். எல்லோருக்குமே குரல் இடறியது. கிரயம் முடிந்ததும் வீட்டை வாங்கியவர் அன்றைய சம்பிரதாயதின்படி  எங்களை அழைத்து சென்று எல்லோருக்கும் வடை பாயாச விருந்து வைத்தார். உண்டு முடித்ததும் சிறுவனான நான் உட்பட எங்கள் குடும்ப உறுப்பினர் எல்லோரும் சேர்ந்து அவரை வளம் கொண்டு வாழ வாழ்த்த சொன்னார். பின்னர் என் வாழ்நாளில் ஒருபோதும் என் சொந்த வீடு இருக்கும் இடம் பக்கமே நான் போனதில்லை.

புதிய ஒண்டுகுடித்தன வாடகை வீட்டில். ஒரு நாள் இரவு ஜன்னலை திறந்தால் தெரியும் சிமெண்ட் பூசாத பக்கத்து வீட்டு காம்பவுண்டு சுவரை நோக்கி, இழந்த என் ஜன்னல் உலகை எண்ணி ஏங்கி அழுத என்னை என் குடும்பதினர் விசித்திரமாக கண்டு பீதி அடைந்து தேற்றினர். அன்றைய என் உணர்வை எவருக்குமே என்னால் சொல்லி புரிய வைக்க முடியாத நிலை.

இதே போல திருச்சி பாட்டி வீட்டு மொட்டை மாடி தீப்பெட்டி குடோன் அறையில், மூன்று நாட்கள் சிறை போல கிடந்து விஷ்ணுபுரம் நாவல் வாசித்து முடித்தபோது என் உடன் இருந்த ஜன்னல். அதுவும் என் வாழ்வோடு கலந்த ஒன்று. குறிப்பாக நாவல் முடிந்த தருணம் அப்படி ஒரு தனிமை. ஜன்னல் வழியே தெரியும் வானம் என்னைப்போலவே தனித்து ஏங்கி கிடப்பதாக ஒரு உணர்வு. ஒரு உளமயக்கு கணத்தில் ஜன்னல் வழியே ஜன்னலை தன் கண்ணாக்கி அந்த வானம் என்னைப் பார்த்தது. அந்த கண்களில்தான் என்ன ஒரு தனிமை. அது முதல் அனுபவம். அதன் பிறகு எத்தனையோ வீடுகள், எத்தனையோ வாசிப்பு அறைகள், எத்தனையோ ஜன்னல்கள். அதன் அருகே கிடந்து எந்த ஒரு நல்ல புனைவையும் வாசித்து முடிக்கும்போது ஜன்னலை பார்ப்பேன். என் போலவே தனிமையும் ஏக்கமும் கொண்டு வானம் என்னைப் பார்க்கும். பிறர் போல, வீடுகள் எனக்கு உண்டு புணர்ந்து உறங்கி நோய் முற்றி உடல் மக்கும் இடம் அல்ல. அங்கே என் அறையில் புத்தகங்கள் உண்டு. ஜன்னல் உண்டு. அதன் வழியே தாஸ்தாவேஸ்கியும் ஜெயகாந்தனுமாகி என்னை நோக்கும் எனக்கு மட்டுமே தெரியும் வானம் உண்டு.

இது என்னை அன்றி பிற எவருக்குமே புரிய இயலாத உணர்வு என்று

இந்த போகன் சங்கர் கவிதையை வாசிக்கும் முன்பு வரை நினைத்திருந்தேன். என் உணர்வு தீவிரத்துக்கு நிகராக அல்ல என்றாலும் அதற்கு அருகே வந்து நிற்கும் கவிதை இது.

***

ஒவ்வொரு வீட்டை மாற்றும்போதும் 

இப்படி நினைத்துக் கொள்கிறேன்.

' குறைந்தது ஐயாயிரம் புத்தகங்களாவது இருந்து படித்த வீடு'

பொதுவாக நான் ஒவ்வொரு வீட்டிலும் இழப்பது

அங்கு புத்தகங்கள் படித்த அறையையும் 

இடத்தையும்.

பிறகு

வாசிப்பின் நடுவே

பெருமூச்சுடன் நிறுத்தி

வெளியே கூவிய ஒரு பறவையையோ

நிலவொளியையோ 

வெறித்த ஒரு சன்னலை.

***

போகன் சங்கர் தமிழ் விக்கி பக்கம்

***

Share:

0 comments:

Post a Comment

Powered by Blogger.

Poetic Angst - ஜெயமோகன்

உதிர்ந்த ஒரு பழுப்பு இலை மிதந்து தவிழ்ந்து என்றேனும் உங்கள் மடி வந்தமரக் கூடும். எடுத்து தடவி முத்தமிட்டு மறுபடி காற்றில் விடுங்கள். ஞானத்து...

தேடு

முந்தைய இதழ்கள்

Labels

அபி (13) அரவிந்தர் (1) அருண் கோல்ஹட்கர் (1) அறிமுகம் (1) அஜிதன் (1) ஆ. அமிர்தராஜ் (1) ஆக்டேவியா பாஸ் (2) ஆதித்ய ஸ்ரீநிவாஸ் (1) ஆதிமந்திய (1) ஆத்மாநாம் (3) ஆவுடையக்காள் (1) ஆனந்த் (1) ஆனந்த் குமார் (9) இசை (11) இந்தி (7) இரா. கவியரசு (1) இளங்கோ கிருஷ்ணன் (2) உபநிடதம் (1) உரையாடல் (3) உன்னத சங்கீத (1) எதிர்வின (2) எம். கோபாலகிருஷ்ணன் (2) எம்.எஸ். கல்யாணசுந்தரம் (1) எஸ். ராமகிருஷ்ண (1) எஸ்ரா பவுண்ட் (1) எஹுதா அமிக்ஹாய் (1) ஓக்ட்டாவியோ ப்பாஸ் (1) க. மோகனரங்கன் (5) க.நா. சுப்பிரமணியம் (3) க.நா. சுப்ரமணியம் (18) கட்டுரை (11) கண்டராதித்தன் (1) கண்டனம் (1) கப (1) கமலதேவி (1) கம்பன் (1) கருத்தரங்கு (1) கலாப்ரியா (1) கலீல் கிப்ரான் (2) கல்பற்றா நாராயணன் (5) கல்பனா ஜெயகாந்த் (2) கவிதை (280) கவிதையின் மத (1) கவிதையின் மதம் (1) காரைக்கால் அம்மைய (1) காரைக்கால் அம்மையார் (2) கார்த்திக் பாலசுப்ரமணியன் (1) காளிதாசன் (1) காஸ்மிக் தூசி (1) கிம் சின் டே (1) கிரிராஜ் கிராது (3) குமரகுருபரன் விருது (8) குன்வர் நாராயண் (1) கே. சச்சிதானந்தன் (1) கேரி ஸ்னிடர் (1) கைலாஷ் சிவன் (1) கோ யுன் (1) ச. துரை (4) சங்க இலக்கியம் (4) சங்கர் கணேஷ் (1) சசி இனியன் (1) சஞ்சய் சௌத்ரி (1) சதீஷ்குமார் சீனிவாசன் (7) சந்தப்பாடல்கள் (1) சந்திரா தங்கராஜ் (1) சபரிநாதன் (5) சம்யுக்தா மாயா (6) சாரு நிவேதிதா (1) சார்லஸ் சிமிக் (1) சீர்மை பதிப்பகம் (1) சுகந்தி சுப்ரமணிய (1) சுகுமாரன் (6) சுந்தர ராமசாமி (2) சுனில் கிருஷ்ணன் (1) செல்வசங்கரன் (2) சோ. விஜயகுமார் (4) சோலைக்கிளி (1) ஞானக்கூத்தன் (1) டி.எஸ். எலியட் (1) டி.ஏ. பாரி (1) தாகூர் (1) தாஸ் வைத்ய் (1) தி.சோ. வேணுகோபாலன் (1) திரிகூட ராசப்ப கவிராயர் (1) தூயன் (1) தேவதச்சன் (8) தேவதேவன் (29) தேவேந்திர பூபதி (1) ந. பிச்சமூர்த்தி (1) ந. ஜயபாஸ்கரன் (1) நகுலன் (3) நித்ய சைதன்ய யதி (1) நெகிழன் (1) நேர்காண (1) நேர்காணல் (3) பாபு பிரித்விராஜ் (2) பாபு பிருத்விராஜ் (1) பிப்ரவரி 2022 (2) பிரதீப் கென்னடி (1) பிரமிள் (4) பிரான்சிஸ் (1) புதுமைப்பித்தன் (1) பூவன்னா சந்திரசேக (1) பெரு. விஷ்ணுகுமார் (2) பெருந்தேவி (1) பைபிள் (1) பொன்முகலி (1) போகன் சங்கர் (4) போர்ஹே (1) மங்களேஷ் டப்ரால் (1) மதார் (10) மரபு கவிதை (8) மராட்டி (3) மலையாள (1) மலையாளம் (1) மனுஷ்யபுத்திரன் (2) மா. அரங்கநாதன் (1) மு. சுயம்புலிங்கம் (1) முகாம் (2) மொழிபெயர்ப்பு (17) மோகனரங்கன் (1) யவனிகா ஸ்ரீராம் (2) யாக்கூப் (1) யான் வாங் லீ (1) யுவன் சந்திரசேகர் (15) யூமா வாசுக (2) ரகுவம்சம் (1) ரமாகாந்த் ரத் (1) ரமேஷ் பிரேதன் (1) ராமாயணம் (1) ராஜமார்த்தாண்டன் (1) ரியோகான் (1) ரூமி (1) ரெயினர் மரியா ரீல்க (1) லட்சுமி மணிவண்ணன் (3) லதா (1) லாரா கில்பின் (1) வ. அதியம (1) வண்ணதாசன் (3) வாசகர் (1) வாசிப்பு (1) வாலஸ் ஸ்டீபன் (1) வி. சங்கர் (2) விக்ரமாதித்யன் (14) விவாத (1) வீரான்குட்டி (3) வெய்யில் (1) வே. நி. சூர்யா (5) வே.நி. சூர்யா (7) வேணு தயாநிதி (1) வேணு வேட்ராய (1) வேணு வேட்ராயன் (1) ஜெ. ரோஸ்ல (1) ஜெயமோகன் (3) ஜெயமோகன் தேர்வு (1) ஜென் (1) ஶ்ரீநேசன் (1) ஷங்கர் ராமசுப்ரமணியன் (1) ஷங்கர்ராமசுப்ரமணியன் (1) ஷாஅ (1) ஷாந்தா ஷேலகே (2) ஷெல்லி (1) ஸென் கவிதை (1) ஸ்ரீநேசன் (1)

Most Popular

Blog Archive